வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பில்
செக்க சிவந்த நாக்கில்
பாட்டிகள், தாத்தாக்கள் உதிர்த்த
ராஜா,ராணி கதைகளில்
பேரன்,பேத்திகள்
இளைப்பாற்றுகிறார்கள்
யூ டியுபில் வரும்
ஸ்பைடர் மேனை
அறுந்து விழுந்த காற்றாடியில்
நூலைத் தொடுக்கிறான் சிறுவன் ஒருவன் .
அவனது வானத்தில்
பறவைகளுக்கு பதிலாக
காற்றாடிகள் பறக்கின்றன
காற்றாடிகள்,
அவனது எண்ணத்தில் பறக்கின்றன
நூல் விடும் தூதில்
காற்றாடிகள் பறவைகளாகினறன
எல்லாவற்றிற்கு மேலாக
அவனது மொட்டை மாடி
வானமாக மாறுகிறது
அகவலன் k. விஷ்ணு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.