கவிதை: உழவர் உயர்வார் — அக அரசுஉழவர் உயர்வார்

மரக்கிளை வெட்டி
௧லப்பை பிடித்து
வயலைக் கிழித்து
விதை தெளித்து
களை பறித்து
மடை  திறந்து
நெல்லை அறுத்து
களத்தில் அடித்து
பானையில் அவித்த
அலுப்பெல்லாம்……
பாக்கெட்டில் வாங்கி
பசிக்காமலே முழுங்கும்
பறக்கும் ஈக்களுக்கா
புரியும்
 உழவன் உயிர்கொடுத்து
உயிர் தந்தான் என்று.?
–அக அரசு