அன்புடை நெஞ்சம்
அன்னை தெரசாவை
அன்பின் ஜன்னலாய்
வர்ணித்தும்
பாவம் போக்கும் தாயாக
பராசக்தியையும்
கருணைக் கடலென
வேளாங்கண்ணி மாதாவென தேவைக்கேற்ப மாறும்
தெய்வத்தை
வாயாற புகழ்ந்து
வழிபடும் நாம்தான்
காலமெலாம் கடந்து போகிறோம்
பிச்சை கேட்கும் பிஞ்சுகளைப்பார்த்தும்!
விசாலத் தனிமை
மன மகிழ அன்பின்
வார்த்தையை வாயார பேச
மனிதம்
இல்லாதபோது…
விசாலமாய் விண்ணில்
விஞ்ஞானம் வளர்வதும்,
மண்ணில் மின்னும்
மாளிகையில் வாழ்வதும்,
கண்ணைப் பறிக்கும்
பொன்நகை அணிவதும்,
கடனில் உயர் கார் வாங்கி
வட்டி கட்டுவதும்
எதற்கு?
–அக அரசு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments