அகில இந்திய விவசாயிகள் சங்கம்(ஆல் இந்தியா கிசான் சபா), 2018-ஆம் ஆண்டு,மார்ச் மாதம் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி நாசிக் நகரிலிருந்து மும்பை வரையில் 180 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப்பேரணியின் மூலம், விவசாயிகளின் பிரச்சினைகள் பலவற்றின் மீது பெரும் அளவில் அனைத்துத் தரப்பினரின் கவனமும் திரும்புமாறு செய்தது. அந்தப் பேரணியில் அவர்கள் எழுப்பிய குரல்கள் அனைவரின் காதுகளிலும் அதிருமாறு கேட்கச் செய்தது. 

அமைதியான  இந்த இயக்கத்தைப் பரவலாக முன்னெடுத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் அசோக் தவாலே.அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர்.விவசாயிகளின் உரிமைகளுக்காகப் பல தலைமுறைக் காலமாக இயக்கங்களை நடத்தி வருபவர்.நீண்ட நடைப்பயணத்துக்குப் பின்பும் கூட,எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்கிறார் அவர்.இப்போதைய ஆட்சி ஒருபோதும்  விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததே கிடையாது என்று கூறும் தவாலேயின் கருத்தை இது உறுதிப்படுத்துகிறது.சமீபத்திய வேளாண் மசோதாக்கள் அவருடைய கொள்கை சரியானதே என நிரூபிப்பவையாக உள்ளன.இந்த மசோதாக்களைப் பற்றி, தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தமது இயக்கம் எப்படி மேலும் மேலும் உயிர்ப்புடன் கொண்டு செல்கிறது என்பதைப்பற்றி தவாலே ஃப்ரண்ட் லைன் இதழுடன் உரையாடினார் : 

Kisans March to Mumbai | VAN Namboodiri’s Blog

    கே: இப்போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் எப்படி ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதைப்பற்றி நடைபெறும் ஒவ்வோர் ஆர்ப்பாட்டத்திலும் நீங்கள் பேசி வருகிறீர்கள்.அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகக் கூறலாமா?  

    ப.: இந்த வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே சிரோமணி அகாலிதளம் சார்பில் அமைச்சராக உள்ள ஒரே ஓர் உறுப்பினர், அவற்றை எதிர்த்துப் பதவி விலகி விட்டார்.இவை விவசாயிகளுக்கு விரோதமானவை என்று அவர் சரியாகவே குற்றம் சாட்டியிருக்கிறார்.    பாரதிய ஜனதாக்கட்சியின் நீண்ட நெடுங்காலக் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்று –அகாலிதள். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, பிஜேபி-யின் ஏனைய மூன்று கூட்டணிக்கட்சிகளான தெலுங்கானா ராஷ்டிர சமிதி,பிஜூ ஜனதா தள்,அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கூட இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆளும்கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை கிடையாது என்பதை அரசு உணர்ந்திருந்தது.எனவே, மாநிலங்கள் அவையின் துணைத்தலைவர் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்றி விட்டு,மசோதாக்களைக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வகை செய்தார். பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வேண்டும் ;அல்லது, தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே.கே.ராகேஷ்,மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய சட்டப்பூர்வமான தீர்மானங்களை முன்மொழிந்தார்.அதோடு,பதினோரு திருத்தங்களையும் முன்மொழிந்தார்.ஒவ்வோர் உறுப்பினரின் உரிமையான வாக்குகளைப் பிரித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கயமைத்தனமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஜனநாயக விரோதமான முறையில், குரல் வாக்கெடுப்பு மூலம்  மூன்று மசோதாக்களுமே சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு விட்டன. காலங்காலமாக நிறுவப்பட்டு நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஒழுங்குமுறைகள் அனைத்தின் மீதும் கொடூரமான தாக்குதலாக அது நடந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் படுகொலை செய்ததுதான் அன்று நடந்தது

    கே :  கோவிட் -19 என்ற மூடுதிரையின் கீழ்,ஏராளமான சட்டங்கள் இம்மாதிரி உரியச் செயல்முறைகள் பின்பற்றப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. உங்கள் கருத்து ?       

   ப.: ஆம்,மிகவும் உண்மை.பிஜேபி மத்திய அரசு எந்தவித விவாதமும் நடக்க அனுமதிக்காமல் ,கோவிட்-19 என்ற மூடுதிரையைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்தில் மசோதாக்களைத் தங்கள் விருப்பம் போல் நிறைவேற்றிக் கொண்டே போகிறது.அதேபோல,அவசரச்சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றும் நடைமுறையையும் வேண்டுமென்றே பின்பற்றி வருகின்றனர். சமீப காலத்தில்,ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டு வரும் பரந்து விரிந்த அளவிலான தாக்குதல்களின் உள்ளார்ந்த பகுதியாக இதெல்லாமே ஆகி விட்டது. அரசியல்ரீதியான எதிரிகளை தேசவிரோதிகள்,கலகம் செய்யத் தூண்டுகிறவர்கள்,அர்பன் நக்சல்கள்,இன்னும் இவை போன்ற முத்திரைகளைச் சுமத்தி,பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் ,கொடூரமான ஆள்தூக்கிச் சட்டங்களின் கீழ் அவர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்து வருகின்றனர்.மேற்கண்டவாறு , இப்போது தானடித்த மூப்பாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் பெரும்பாலும் கண்மூடித்தனமான விவசாய விரோத,தொழிலாளர் விரோத,கார்ப்பரேட் நிறுவன ஆதரவுச்சட்டங்களாகவே இருக்கின்றன.இக்காரணத்தினால்,விமரிசனங்களைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது. அதோடு,கோவிட் அச்சம் காரணமாகத் தெருக்களில் போராட்டங்கள், எதிர்ப்புகள் எவையும் இருக்காது என்று அது நினைக்கிறது. ஆனால், அந்த நினைப்பு முற்றிலும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.  

Shiv Sena extends support to farmers' march against BJP government | India News,The Indian Express

       கே : வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தில் அகில இந்திய கிசான் சபா முன்னணியில் நிற்கிறது.வழக்கத்துக்கு மாறான இந்தச் சூழ்னிலைமைகளின் கீழ்,மக்கள் எதிர்ப்புகளின் வடிவம் என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு நீங்கள் சொல்ல முடியுமா?

ப. : இந்த மசோதாக்களை அடியோடு நிராகரித்துத் தூக்கி எறியும் முனைப்போடு நாடு தழுவிய ஆகப்பெரும் மக்கள் திரள் எதிர்ப்பு செப்டம்பர்-25 அன்று நடைபெற்றது.அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு விடுத்த அறைகூவலின் மூலம்,இது நடந்தேறியது.இருபது மில்லியன் விவசாயிகளுக்கு மேல் விவசாயத் தொழிலாளர்கள்,மத்திய தொழிற்சங்கங்களால் தலைமை தாங்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையில் இறங்கி தெருக்களிலே திரண்டு போராடினார்கள்.பஞ்சாப்,ஹரியானா,மற்றும் சில மாநிலங்கள் முழுமையான பந்த் அனுசரித்தன.நாடு முழுவதிலும் பெருந்திரளான ரயில்-சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன . கோவிட் நாடெங்கு நடைமுறையிலிருந்த கடந்த ஆறு மாதங்களில், சந்தேகத்துக்கே இடமில்லாத விதத்தில் ஆகப்பெரும் மக்கள் திரள் நடவடிக்கை இது.        பஞ்சாபில் அகாலிதளம்  தேசிய ஜனநாயகக்கூட்டணியுடன் தன்னுடைய அனைத்து இணைப்புகளையும் துண்டித்துக் கொண்டு விட்டதாக இப்போது அறிவித்து விட்டது. விவசாயிகளின் இந்தக்கொந்தளிப்பு, உடனடியாகவோஅல்லது சற்றுக் காலந்தள்ளியோ பிஜேபி-யின் ஏனைய கூட்டணிக் கட்சிகளையும் இதே போல உறவை முறித்துக் கொள்ளுமாறு செய்யும்.அடுத்து வரப்போகும் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மைய நீரோட்ட ஊடகங்களும் கூட,சில பிரிவுகளின் கேவலமான அடிமைத் தனம் ஒரு புறம் நீடித்திருப்பினும் கூட, செப்டம்பர்-25 அன்று கொதித்தெழுந்து திரண்ட விவசாயிகளின் எழுச்சியைக் கண்டு அது பற்றி தாமே முன்வந்து செய்திகளை வெளியிட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின.நாங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினோம் .  எங்களுடைய குரல்களைக் கேட்கச் செய்ய, இணை ஊடகவெளிகளையும், தகவல் தொடர்புக்கான எல்லா வெளிகளையும் பயன்படுத்தினோம்.  அதனுடைய சாராம்சம், தெருக்களில் நடைபெறும் வெகுமக்கள் எதிர்ப்பு இயக்கங்களைத் தீவிரப்படுத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

கே :  வேளாண் பிரிவின் பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டியவையாக உள்ளன; குறிப்பாக,ஊரகப்பொருளாதாரம், முன் எப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் இன்றைய காலத்தில். அகில இந்திய விவசாயிகள் சங்கமும்,ஏனைய விவசாயிகள் இயக்கங்களும் இந்த அம்சத்தைக் கொஞ்சக் காலத்திற்கு முன்பே உணர்ந்து கொண்டன.2018-ஆம் ஆண்டு வெகு மக்கள் பெருந்திரள் எதிர்ப்பு இயக்கத்தின் போது, மாற்றங்களைக் கோரிக் குரல்களை எழுப்பின.அவை எழுப்பிய கோரிக்கைகளுள் ஏதேனும் ஒன்றாகினாலும் ஏதாவது  ஒரு நடவடிக்கைக்கு இட்டுச்சென்றுள்ளதா ?

ப .  : நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் இந்த ஆட்சியின் கீழ்,விவசாயிகளால் கோரப்படும் எந்த ஒரு மாற்றமும் நடைமுறையில் நிறைவேற்றப்படுவதைக் கண்டதில்லை. உண்மையில், நடக்கும் எல்லா மாற்றங்களும் இதுநாள் வரையிலும் படுமோசமான விதத்தில் பின்னோக்கிப் போகின்றவையாகவே உள்ளன. இப்போது வந்துள்ள வேளாண் மசோதாக்கள், மிக சமீபத்திய நிகழ்வாக,எடுத்துக்காட்டாக உள்ளன. முன்னுதாரணமற்ற வேளாண் நெருக்கடிகளை எதிர்த்துப்போராடவும், விவசாயிகளின் தற்கொலைகளுடைய எண்ணிக்கையை விரைவாகக் குறைக்கவும் எல்லா விவசாயிகளுக்கும் ,விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஒரே தடவையில் அனைத்துக்கடன்களையும் மத்திய அரசாங்கம் தள்ளுபடி செய்தாக வேண்டுமென்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் நீண்டகாலமாகக் கோரி வந்திருக்கிறது. வேளாண் விளைபொருள்களுக்கு ஆகும் உற்பத்திச்செலவின் ஒன்றரை மடங்கு என்ற அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை (மினிமம் சப்போர்ட் பிரைஸ்-எம்.எஸ்.பி.) நிர்ணயித்து அறிவிப்பது ;அந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே விவசாய விளைபொருள்களை அரசாங்கம் கொள்முதல் செய்வதற்கு நாடு முழுமைக்குமான ஓர் அமைப்பை நிறுவுவது; வெள்ளப்பாதிப்புகள்,வறட்சிகள்,ஏனைய இயற்கைப் பேரிடர்கள்-ஆகிய சங்கடங்களின் கீழ் நசுக்குண்டு நசிந்து வரும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு இப்போதுள்ள ஏற்பாடான கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களை முன்னிறுத்தாமல் பிரதமரின் ஃபஸல் பீமா யோஜனா திட்டத்தைப் புதுப்பித்தல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட வேலை நாள்கள்,உயர்த்தப்பட்ட ஊதியங்களுடன் வழங்க ஏற்பாடு செய்தல்;அதன் மூலம் ஊரகப்பகுதிகளில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் நகர்ப்புறங்களிலும் ,எங்கு பார்த்தாலும் நிலவும் வேலையின்மையைப் போக்கப் பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படும் பணிகளை விரிவாக்கம் செய்தல்; ஆதிவாசி-பழங்குடியின விவசாயிகளுக்கு அவர்களுக்குரிய வன நிலங்களை ஒதுக்கீடு செய்வதற்கு வன உரிமைகள் சட்டத்தினைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவது ; இன்னபிற கோரிக்கைகள் -இவற்றுள் எந்த ஒரு நடவடிக்கையையும் இப்போதைய பி,ஜே.பி.ஆட்சி செய்யவில்லை.2022-ஆம் ஆண்டு வாக்கில்  விவசாயிகளின் வருமானங்களை  இரட்டிப்பாக்கப் போவதாக வெற்று முழக்கங்களை மட்டுமே அந்த அரசு எந்தப் புரிதலும் இல்லாமல் திரும்பத் திரும்பச்சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இப்போது அவர்கள் போகிற இதே போக்கில் போவார்கள் எனில்,விவசாயிகளின் தற்கொலைகளை மட்டுமே இரண்டு மடங்காக உயர்த்துவார்கள் ! கட்டாயமாகத் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டிய தீவிரமான கடுந்துயரம் அது.

Agriculture Bill 2020: Everything you need to know about the controversial bill - The August

கே. : நம் முன் வெளிப்படையாக முன்னுக்கு வரும் கேள்வி இதுதான் : இப்போதைய மசோதாக்கள்  வேளாண் பொருளாதாரத்தையும், அதன் நோய்க் கூறுகளையும் எதிர்கொண்டு தீர்வு காணுமா என்பதே அது.உண்மையில்,இந்தச் சட்டங்களால் ஏற்படப்போகும் விளைவு என்னவாயிருக்கும்?

       ப. :வேளாண் பொருளாதாரத்தின் நோய்க்கூறுகளை இந்த மசோதாக்கள் மாபெரும் அளவுக்குப் பெரிதாக விரிவுபடுத்தும்.    ஒரே வாக்கியத்தில் சொல்வதானால்,இந்த மூன்று மசோதாக்களும் பன்னாட்டு நிறுவனங்களையும்,கார்ப்பரேட் அமைப்புகளையுமே மேலும் மேலும் செழுமைப்படுத்துவதற்கு வழி வகுப்பவையாயிருக்கும். விவசாயிகள், நுகர்வோரின் நலன்களையும்,விருப்பங்களையும் உணரவோ,ஏற்றுக்கொண்டு அவற்றை  நிறைவேற்றவோ செய்யாமல் அவை புறக்கணிக்கும்.அதன் காரணமாகவே,நீண்ட ,மிகக்குழப்பமான இந்த மசோதாக்களுடைய பெயர்கள் எவையாக இருப்பினும், அவற்றின் உண்மையான விளைவுகளை எடுத்துரைக்கும் விதத்தில் அவை பின்வருமாறு மறுபெயரிட்டு அழைக்கப்பட வேண்டியவையாக உள்ளன :

முதலாவது :”கருப்புச்சந்தைகளை வழிநடத்துதல்,பெரும் அளவில் வெற்று விளம்பரப் பலகைகளை நாடெங்கும் பரப்புவதற்கு  உற்சாகப்படுத்தும் மசோதா.”

இரண்டாவது : “ ஒப்பந்த விவசாயம் மூலமாக விவசாயிகளின் அடிமைத் தனத்தை முன்னெடுக்கும் மசோதா”.

மூன்றாவது : “ வேளாண் உற்பத்திப் பொருள்களின் சந்தைப்படுத்துதல் குழு  வினை அகற்றி விட்டு,கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுடன் வர்த்தக மசோதா”.

    முதல் மசோதா, கருப்புச்சந்தையை விளம்பர ஏமாற்று வேலைகளை சட்டப்பூர்வமானவையாக்கப்போகிறது; எதிர்கால வர்த்தகம் பூராவும் கார்ப்பரேட்டுகளாலும்,பெருவணிக நிறுவனங்களாலுமே மேற்கொள்ளப்பட வழிவகுக்கும். வரன்முறைகளற்ற அளவுக்கு வேளாண் உற்பத்திப்பொருள் களைப் பதுக்கி இருப்பு வைத்துக்கொள்ள மேற்கண்ட நிறுவனங்கள் அனுமதிக்கப் படப்போகின்றன.இதன் விளைவு, நுகர்வோராகிய பொதுமக்கள் உயர்ந்த பட்ச அளவுக்கு விலை கொடுத்து அவற்றை வாங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அதே வேளையில், விவசாயிகள் மிகக் குறைந்தபட்ச விலைகளையே பெற முடியும் என்ற நிலையில் போய் முடியும். இது நாட்டின் உணவுப்பாதுகாப்பையே பெரும் அபாயத்துக்கு உள்ளாக்கும். இரண்டாவது மசோதா, ஒப்பந்த முறை விவசாயத்தையே ஊதிப் பெரிதாக்கும். கொள்முதலின் போது குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தாமல் விடுகிறது;தவிர,இது தொடர்பாக எழும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மிக மிகப்பலவீனமான, அதிகாரத்துவ வர்க்க அடிப்படையில் அமைந்த ஓர் அமைப்பை முன்மொழிகிறது.இம்மாதிரிப் பிரச்சினைகளுக்குச் சட்டரீதியான தீர்வு காண்பதற்கு (கடந்த காலங்களில் இருந்தது போல) உயர்நீதிமன்றத்தைத் தவிர வேறு சிவில் நீதிமன்றங்களை  அணுக முடியாமல் தடை செய்கிறது.இது விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றுகிறது.மூன்றாவது மசோதா, விவசாய  உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுவைப் புறக்கணித்துக் கடந்து போகச்செய்வதாக இருக்கிறது.ஒட்டு மொத்த வேளாண் சந்தையைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட வகை செய்கிறது.

          கே.  :  இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை “விடுதலை” செய்வனவாக இருக்கும் என்று பிரதமர் பிரகடனம் செய்திருக்கிறார். இவை, இடைத்தரகர்களின் கிடுக்கிப்பிடிகளிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்வனவாக அமையும் என்று அதிகார மையத்திலிருக்கும்  மனிதர் கூறுகிறார்.

           ப.  :    விவசாயிகள் எப்போதுமே சுதந்திரத்துடன்தான் இருந்து வருகின்றனர்.அவர்கள் தமது விளைபொருள்களைப் பண்ணை வாசல்களில் விற்பனை செய்யலாம்.அல்லது, வாங்குவோருக்கு நேரடியாக அவர்கள் எப்போது விரும்பினாலும் விற்பனை செய்ய முடிந்தவர்கள்தாம்.எனவே அவர்கள் இப்போது புதிதாக எந்த ஒரு சுதந்திரத்தையும் பெற்று விடவில்லை .வந்துள்ள புதிய மசோதாக்களின் கீழ் அவர்கள் பெறப்போகும் ஒரே சுதந்திரம், சுரண்டப்படுவதற்கான சுதந்திரம் மட்டுமே.கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக ஆகும் சுதந்திரம் ஒன்று மட்டுமே.தற்கொலை செய்து கொள்ளுவதற்கான சுதந்திரம் மட்டுமே. இடைத்தரகர்கள் விஷயத்தைப் பொறுத்த வரை, அவர்கள் எல்லாரைக்காட்டிலும் ஆகப்பெரும் இடைத்தரகர் மோடி அரசாங்கமே. பொதுத்துறையை முற்று முழுதாகத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை நாம் வேறு எந்த வார்த்தைகளில் விளக்க முடியும்?

Farm Bills an Attempt to Break Mandi System and Abolish MSP, Says Bharatiya Kisan Union

       கே.: மாநில அரசு /எதிர்/ மைய அரசு என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் கருத்துக் கூற முடியுமா? இந்த மசோதாக்கள் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டு விட்டாலுங்கூட, அவற்றை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு மாநிலங்கள் உள்ளாகியே தீருமா?

          ப . :   இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் ஏழாவது அட்டவணை, விவசாயத் துறையை  முற்று முழுதாக மானிலப்பட்டியலில்தான் வைத்திருக்கிறது .எனவே, இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்புச்சட்ட விதிகளை மீறும்  தெளிவான ஓர் அத்துமீறல்தான்.எந்த ஒரு மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல், வேளாண்மை தொடர்பான இந்த மசோதாக்கள் மத்திய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு விட்டன.இந்தவகையில்,முறைகேடாக நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதாக்களை எதிர்த்து  உச்சனீதிமனறத்தைத் தாங்கள் அணுகப்போவதாக ஏற்கெனவே கேரளா, பஞ்சாப்  போன்ற மாநில அரசுகள் அறிவித்து விட்டன.கூட்டாட்சியின் மீதே தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இந்த வகையில் மேற்கண்ட மசோதாக்கள் அமைந்திருக்கின்றன. கோவிட் தீ நுண்மியின் பெருந்தொற்றுக் காலமான இந்த நெருக்கடி நிறைந்த காலத்தில், மாநிலங்களுக்குச் சேர வேண்டிய சட்டப்பூர்வமான ஜிஎஸ்டி பாக்கி நிதிகளைத் தர மறுப்பதன்மூலம்,மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவம் மீது தனது வெறுப்பு நிறைந்த விரோதத்தைத் தெளிவாகவே வெளிக்காட்டி விட்டது.

  வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை நசுக்கி அழிக்க முற்படும் மத்திய அரசின் இந்தப்பிரச்சினை தவிர,இந்த மசோதாக்களின் விதிகள் வேளாண் உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுதலை ஒழுங்காற்று முறைப் படுத்துவதற்கு அல்லது ஒப்பந்த வேளாண்மையை முறைப்படுத்துவதற்கு, நிறுவனங்கள் முறையற்ற வணிக நடைமுறைகளைப் பின்பற்றும் சூழலில் பாதிப்புக்கு உள்ளாகும் மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு அந்தத் தகராறுகளில் குறுக்கிடுவதற்கு அல்லது அத்தகையோர் மீது வரிகள் அல்லது அபராதங்களை விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உள்ள அதிகார உரிமைகளை அகற்றி விடுகின்றன.

Cong demanded a withdrawal of Agricultural Bill by raising anti-government slogans in Vadodara -

   கே. : உறுதியுடன் இருக்கிறது என்று நாம் எப்படி அறிய முடியும்? 

           ப.  : இக்கேள்விக்கான விடை மிக எளியது.ஊரகப்பொருளாதாரத்துக்கோ அல்லது ஒரு முழுமை என்ற வகையில் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்துக்கோ கூட,அரசாங்கம் உதவ வேண்டுமென்று கடப்பாட்டுறுதி எதையும் கொண்டிருக்கவில்லை. கொழுத்துப் பெருத்த கார்ப்பரேட் நிறுவனம் செல்வாக்குச்செலுத்தும் பிரச்சினைக்கு மட்டுமே உதவும்.முதலாவது காலாண்டில்,ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 24 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதிலேயே இது வெளிப்பட்டுத் தெரிகிறது.இது ஒர் உலகளாவிய சரிவுச்சாதனை. கோவிட் நாடடங்கு காலத்தில், பதினைந்து கோடி மக்களும்,மாத ஊதியம் பெறும் சுமார் இரண்டு கோடிப் பணியாளர்களும் தமது வேலைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மற்றொரு சான்று. பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்கும் பெரும் சரிவையும்,கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மையின் விகிதம் உச்சநிலையை எட்டியிருப்பதையும் அம்பலப்படுத்தினோம்.இதே நாடடங்கு காலகட்டத்தின் போதுதான் முகேஷ் அம்பானி உலகி ன் நான்காவது உச்சநிலை பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்திருப்பதும் நடைபெற்றுள்ளது.அதிகார வர்க்கத்தினரின் நண்பர்களான அதானி,ஏனைய முதலாளிகள் முன்னர் ஒருபோதுமில்லாத அளவுக்குச் செல்வச்செழிப்பு மிக்கவர்களாகியிருப்பதுவும் இதே கால கட்டத்தில்தான்.இந்த நாடடங்கு காலத்தில்தான் நீரவ் மோடி,மெகில் சோக்‌ஷி , விஜய் மல்லையா போன்ற மேலும் பல நண்பர்கள்,நம்முடைய வங்கிகளை ஏமாற்றிப் பெற்ற கடன் தொகையான ரூபாய் 68,000 கோடி வாராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள் வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிக் கட்டாமல் மோசடி செய்து விட்டு நாட்டை விட்டே ஓடியவர்கள் ! ஆனால், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்ற அம்சம், ஆட்சியாளர்களின் செயல் நிரலிலேயே இடம்பெறவில்லை.இதற்கு நேர் முரணான விதத்தில்,மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து கடன் பெற்று,கட்ட முடியாமல் தவிக்கும் இலட்சக்கணக்கான ஏழைப்பெண்களிடமிருந்து ,அற்பத்தொகைகளாக ‘வாராக்கடன்’களாக நிலுவையிலிருக்கும் சிறுகடன் தொகைகளைக் கட்டாயமாக வசூலித்தாக வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மாநில ஊரக வாழ்வாதார முனைப்பு இயக்கங்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறது !  

       நலவாழ்வுப் பராமரிப்பு, கல்வி மற்றும் தொழிலாளர் துறை போன்ற சமூக நலத்துறைகள், 1991-ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்த அரசுகளால் பின்பற்றப்பட்டு வந்திருக்கும் புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவாகவே முற்றிலுமாகச்  சீர்குலைந்து போயிருக்கின்றன.அதே நாசகரமான கொள்கைகளே இன்னும் மாபெரும் தீவிரத்துடன் மூர்க்கத்தனமாக இப்போதைய பிஜேபி அரசினால் 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு பின்பற்றப்பட்டு வருகின்றன.இந்த வேளாண் மசோதாக்களுக்குப் பின்பு,தொழிலாளர் துறை சார்ந்த, இவற்றுக்குச்சம அளவு நாசகரமான சட்டங்களையும் இந்த ஆட்சி முரட்டடியாக தொழிலாளர் வர்க்கத்துக்கு விரோதமாக நிறைவேற்றியிருக்கிறது.  

        கே. :  இந்தியாவில் ஊரக,வேளாண்மை சார்ந்த, தீவிர நெருக்கடித் துயரங்களுக்கு ஓரளவு நிவாரணம் தந்து கொண்டிருந்த பாதுகாப்பு வலை இப்போது ஆபத்து மிக்க நிலையில் உள்ளது.இதைப்பற்றி நாம் விவாதிக்கலாமா? 

        ப.: ஆம்; ஊரகப்பாதுகாப்பு வளையம் இப்போது ஆபத்தான நிலையில்தான் இருக்கிறது. நான் மேலே பட்டியலிட்ட இந்தப்பாதுகாப்பு வளையத்தின் அடிப்படையான கூறுகளுக்கு அப்பால், கோவிட் நாடடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே நாங்கள் மிகத்தீவிரமாக வற்புறுத்திக் கொண்டிருக்கும் கோரிக்கை இது : ஊரக,நகர்ப்புறங்களில் நிலவும் பெருந்திரளான நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு,நாட்டில் தற்போது வருமானம் ஏதுமில்லாமல்,ஆனால் வரி செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூபாய் 7500 தொகையையும், மாதம் ஒன்றுக்கு தலா நபர் ஒருவருக்குப் பருப்பு,சர்க்கரை,சமையல் எண்ணெய் ஆகியவை ஒவ்வொரு கிலோ கிராம் மற்றும் பத்து கிலோ உணவு தானியம் ஆகியவற்றையும் மானியமாக மத்திய அரசு தர வேண்டும். வேறு எதற்காக முற்றிலும் தனிப்பட்ட , வெளிப்படைத் தன்மையற்ற பி.எம்.கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படப் போகிறது? இதற்குப் பதிலாக,மோடி ஆட்சி புதிய ஒரு நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கும் ,பிரதமருக்கு என ஓர் ஆடம்பர அரண்மனையைப் போன்ற ஒரு மாளிகையைக் கட்டவும் கண்கவர் திட்டம் ஒன்றை ரூபாய் 20,000 கோடி செலவில் தீட்டி அதை நிறைவேற்றும் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. இதே ஆட்சிதான் மும்பையிலிருந்து அகமதாபாத் வரை ரூபாய் 1.10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மேட்டுக்குடித் தன்மை வாய்ந்த புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றவும் துடிக்கிறது. இந்த ரயில் பாதை மகாராஷ்டிராவிலும்,குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் இடம் பெயர்ப்பதோடு, சுற்றுச்சூழலையும் அச்சுறுத்துவதாக அமையப்போகிறது. 

All about Agriculture Bill 2020.

        கே.: குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது கொஞ்ச காலமாகவே தொடர்ச்சியான ஒரு முரண்பட்டு மோதிக்கொண்டிருக்கும் பிரச்சினையாகவே உள்ளது.எடுத்துக்காட்டாக, மாநில அரசுகள் பெரும்பாலான சமயங்களில், தானியக் கொள்முதல் செயல்முறையை மிகவும் தாமதமாகவே தொடங்குகின்றன.வேறு வழியின்றி, விவசாயிகள் தங்களுக்குத் தாங்களே துணை என சுய முயற்சிகளைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு விடுகின்றனர்.தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூட ஈவிரக்கமற்ற இடைத்தரகர்களைச் சார்ந்து நிற்கின்றனர்…

      ப.: விவசாயிகளைப் பாதிக்கும் மிக உண்மையான பிரச்சினைகளாக இவை உள்ளன.அரசாங்கம் கொள்முதல் செயல்முறையை மிகவும் தாமதமாகத் தொடங்கி மிகவும் விரைவாகவே முடித்து விடுகிறது. இதன் விளைவு வர்த்தகர்களாலும், இடைத்தரகர்களாலும் விவசாயிகள் ஈவிரக்கமின்றி சுரண்டப்படுகின்றனர்.அடிப்படையாகவே,இங்கு இன்னும் இரண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் உள்ளன. முதலாவது, அறிவிக்கப்படுகிற குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஸ்வாமிநாதன் குழுவின் வரையறையான உற்பத்திச்செலவின் ஒன்றரை மடங்காக,அதாவது 2 1/2 % ஆக இருக்க வேண்டும்.எந்த மத்திய அரசும் இதுவரையிலும் இதைச்செய்ததே இல்லை.இந்த விஷயத்தில் மோடி ஆட்சி படுமோசமானதாக அமைந்துள்ளது.இரண்டாவதாக, விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கென ஓர் அமைப்பை நான்கைந்து மாநிலங்களில் தவிர நாடு தழுவிய வகையில் எல்லாப் பகுதிகளிலும் நிறுவி விடவில்லை.அந்த இடங்களிலும் கூட,நெல்,கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரே சீரான,நாடு தழுவிய கொள்முதல் ஏற்பாடு இல்லாமல்,குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது எந்தப்பொருளும் அற்றது.வணிகர்கள் எல்லாக் காலங்களிலுமே குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் மிகக்குறைவான விலைகளிலேயே கொள்முதல் செய்கின்றனர். 

மோடி ஆட்சியினால் நிறுவப்பட்ட சாந்தகுமார் குழு,தன்னுடைய அறிக்கையை 2015-ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது.அது,அரசாங்கக் கொள்முதல் வரம்பைக் கட்டுப்படுத்துவதற்கும்,பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும்  வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை உற்சாகப் படுத்துவதற்கும் எனப் படுமோசமான,பிற்போக்குத்தனமான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.குறைந்தபட்ச ஆதரவு விலை,உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வது,பொது வினியோகத் திட்டம்,ஆகியவற்றை ஒரேயடியாகக் கைவிட்டுவிட்டு அவற்றை  ஒழித்துக்கட்டுவதற்கான திசை வழியில் அரசாங்கம் போய்க் கொண்டிருக்கிறதோ என்ற உண்மையான  அச்சம் விவசாயிகளிடையேயும், நுகர்வோர் நடுவேயும் நிலவியிருக்கிறது. 

       கே.: விவசாயிகள் னிலையுறுதியையும்,பாதுகாப்பையுமே விரும்புகின்றனர். வேளாண்மை தொடர்பான சட்டங்களைத் திருத்துவதற்கு இவையே குறிக்கோளாக,நோக்கமாக இருக்க வேண்டியது கட்டாயம்.விவசாயிகள் அரசுகளின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.வேறு எந்த ஒருவரையும் விட இதைப்பற்றி நீங்கள் நன்கறிந்தவராயிருப்பீர்கள். உங்கள் கருத்துகள் ?  

    ப. : விவசாயிகளின்  அவநம்பிக்கை எங்கிருந்து கிளைத்தது என்றால்,2014-ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கு மோடி ஆட்சி அளித்து வந்திருக்கும் எல்லா உறுதிமொழிகளுக்கும் அவர்களாலேயே இழைக்கப்பட்ட துரோகத்திலிருந்துதான். 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிஜேபி கட்சி மட்டும் அன்றி, மோடியே நேரடியாக உறுதிமொழிகள் தந்து கொண்டிருந்தார்.ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் இவை தொடர்பாக எதுவும் நடந்தேறவில்லை.இதற்கெல்லாம் முரணாக,மோடியின் ஆட்சி மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையுமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிரானதாகவுமே அமைந்திருந்தது.அந்த நடவடிக்கைகளின் பட்டியல் முடிவேயற்றது.இந்த மூன்று படுமோசமான மசோதாக்களும் ஒட்டகத்தின் முதுகில் உள்ள கடைசிச்சொட்டு நீரையும் உறிஞ்சுவதைப் போன்றவை. னிலையுறுதித்தன்மையைப் பொறுத்தவரை,இது மேன்மேலும் அதிக நிலையுறுதியற்ற தன்மைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாமறிவோம்.

       கே:ஒப்பந்த வேளாண்மையைப் பற்றிய உங்களுடைய சிந்தனைகள் எவை ? இதுவும் தொடர்ச்சியான,முரண்பட்டு மோதும் இன்னொரு பிரச்சினைதான் அல்லவா? 

       ப.: ஆம்,ஒப்பந்த வேளாண்மை என்பது ஒரு புறம் பன்னாட்டு நிறுவனங்களையும் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் மறுபுறம்  தனி நபர்களான விவசாயிகளிடையேயும் ஓர் ஒப்பந்தம் அத்தியாவசியம் என்ற முறையில் இரு தரப்பையும் ஈடுபடுத்துவதாயிருக்கும். நம்முடைய விவசாயிகளுள் ஆகப்பெரும்பான்மையினர் சிறிய,விளிம்பு   நிலையில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இக்காரணத்தினால்,தராசுத்தட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே கீழ் நோக்கி இறங்கும் வகையில் தவிர்க்க முடியாதபடியும்,மிகப்பெரும் சாதகமான சுமை ஏற்றப்பட்டதாகவும் இருக்கும்.விவசாயிகளின் கூட்டுப்பேர ஆற்றல் என்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஆகப்பெரும்பான்மையாக ஒன்றுமில்லாததாகவே ஆகிப்போகும்.பஞாப்,ஹரியானா,குஜராத் உள்பட எங்குப் பார்த்தாலுமே ஒப்பந்த வேளாண்மை முறை என்பது விவசாயிகளைக் கொள்ளையடிக்கும் ஏற்பாடுதான் என்று நிரூபிக்கும் வகையில் பல அடுக்கடுக்கான எடுத்துக்காட்டு நிகழ்வுகள் நடந்து வந்துள்ளன.சுருங்கச்சொன்னால்,இது ஒரு புதிய வகை கார்ப்பரேட் வேளாண்மைக்கான செயல்முறைதான்.இதற்கு மாற்று ஏற்பாடு என்று முன்னெடுக்கப்பட்டாக வேண்டிய முறை என்பது கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது போன்ற கூட்டுறவு வேளாண்மைதான்.

What is farm bill 2020: Pros & cons of three farm bills introduced in India  | India News - Times of India

   கே.:  விவசாய விளைபொருள்கள் சந்தைப்படுத்துதல் குழு ஏற்பாடு ஓரளவு வெற்றிகரமானதுதான்.ஆனால்,அதில் அடிப்படையான பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன…

    நவி மும்பை  விவசாய விளைபொருள்கள் சந்தைப்படுத்துதல் குழு (ஏபிஎம்சி) மாடலில் இருந்து பெறப்படக்கூடிய ஒரு நேர்மறையான பாடம் –பொதுவெளியில் வெளிப்படையாக ஒழுங்காற்று முறைப்படுத்தப்பட்ட  சந்தைகளுக்குள் வேளாண் உற்பத்திப்  பொருள்கள் வினியோகச்சங்கிலிகளை நவீனமயப்படுத்துவது என்பது நிச்சயம் சாத்தியமே என்ற உண்மைதான். வேளாண் உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்துதலில் நீண்ட நெடுங்காலமாக நின்று நிலவும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் நாம் ஏற்று அங்கீகரித்துத்தானாக வேண்டும் என்பதை அது நமக்குக் கூறுகிறது.இதன் வேர்க்காரணமாயிருப்பது மண்டிகளில்  ஜன னாயகத்தன்மை  நிலவ வகை செய்யத் தவறிய பலவீனமே. இது,பெருவணிக நிறுவனங்கள் ஒன்றாகச் சேர்ந்து வேளாண் தொழிலைக் கட்டுப்படுத்துவது, வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடு, ஊழல் போன்ற பிரச்சினைகளில் போய் முடிகிறது.           

ஃப்ரண்ட் லைன் , அக்டோபர்-23,2020 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *