1. அல்லி மலர்
நீரில் மிதந்தபடி
நிலா பிம்பம்
2. வற்றிய நதிகள்
வற்றாமல் நிறைவாகவே
விவசாயி விழிகள்
3. மண்சாலையில் வாகனம்
கூடவே பயணிப்பதாய்
மாலை வெயில்
4. பாகப்பிரிவினை முடிந்த வீடு
யாருமே சொந்தம் கொண்டாடவில்லை
அப்பா படம்
5. அகாலமாய் மரணித்த அப்பா
அவசரம் அவசரமாகத் தேடல்
வீட்டுப் பத்திரம்
6. பனிநனை ரோஜா
பார்க்கப் பயங்கரமாகவே
முட்கள்
7. தலைச் சுமை
இலகுவாக நசுங்குகிறது
காலடியில் சருகு
8. பணத்தைத் தொடுவதில்லை
பீற்றிய அதிகாரி
இணைய வழிப் பரிமாற்றம்
9. பேரன் கேட்ட கதை
முடியுமுன்பே உறக்கம்
கதை சொல்லும் தாத்தா
10. குளத்திலிட்ட பொரி
ஓரிடத்தில் குவிந்தபடி
மீன்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.