(1) நகரம்
______________

கவிதையின் நகரம் புலப்படாததாக இருக்கிறது
வார்த்தைகளோ பேருந்து தடங்களாக இருக்கின்றன
அந்த புலப்படாத நகரம்
போய் சேருவதற்கு.

ஒரு நகரம் அதில் உணர்வுகளின் குடியிருப்புகள்
அன்பின் எண்ணிக்கையற்ற குடிசைகள்
கருணையின் நீர்ஊற்று
வெறுப்பின் விரிசலுற்ற கோட்டைகள்.

வார்த்தை எழுத்துக்களால்
நெய்யப்பட்டு…
பிரமை இருக்கிறது
சந்திரபிறைப்புள்ளியின் மேல்
ஆகாயம்
தொடுகிறது ஒரு உணர்வு
எழுத்துக்களின் உடலின் மேல் சறுக்கி
நரகம் வரை வந்து _ வந்து
கரைந்து போகிறது.

ஏதாவதொரு வார்த்தை
உச்சரிக்கப்படாத போது
எழுதப்படாமல் இருந்தது
ஏதாவது ஒரு எழுத்து
மணலின் மேல்
கவிதைகள் எப்போதும் ஒலித்தபடி இருந்தன
எல்லாவற்றை விட முதல் கவிதை மனிதன் எழுதவில்லை
விரகதாபத்தால் அடிபட்ட
கிரெளஞ்ச பறவைகள் எழுதின.

கவிதை வரை அடைந்து இருக்கிறாய்
என்றால் , வார்த்தையின்
மந்திர வித்தையை உடை
முற்றுப் புள்ளியின் தடையை அகற்று.

எல்லாவற்றையும் விட
மிகப் பெரிய மற்றும் நல்ல கவிதைகள்
இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில்
காலி இடத்தில் இருக்கின்றன.

பாதி வார்த்தைகள் அன்பின் வீடுகளாக இருக்கின்றன
எல்லாவற்றையும் விட அதிகமாக வார்த்தைகளில் எழுதப்பட்டு இருக்கின்றன
அந்த வகை இருதயக் கவிதைகள்.

கவிஞனே
கவிதையின் மேல் அகங்காரம் ஏற்றுவதிலிருந்து
தப்பித்திரு.(2) சிட்டுக்குருவி
_______________________

காக்கை எல்லா அரிசியையும்
கொத்தி எடுத்து இருக்கிறது
பானையின் கீழ் இருந்த நீர்
கல்லெறிந்து கைப்பற்றப்பட்டது.

பறவை நிராசையில்
கூட்டிலிருந்து வெளிப்படுவதை
விட்டுவிட்டு இருக்கிறது
குகைகளின் உட்புறத்தின் மேல்
துரும்பின் மறைவு வைக்க
பர்தா மறைவில் இருப்பவர்களின் வழக்கம்
வலிமையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆகாயத்தை பருந்துகளுடையதென
சொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
மற்றும் அவற்றிற்காக தீர்மானம் இருக்கிறது
அவ்வளவு தான் ஆகாயம்
எவ்வளவென்றால் இரண்டு வரிகளுக்கு நடுவே
மரத்தின் ஒரு கிளையிலிருந்து தென்படுகிறது.

புதிய விஷயம் இதுவென
கா…கா..வை
காடு தன்னுடைய தேசீய கீதமாக
ஏற்றுக் கொண்டிருக்கிறது
குயிலின் கூ..கூ வை ஒப்புக்கொண்டிருக்கிறது
ஒரு பிசாசின் குரல்.

மற்றும் இப்போது மரங்களின் கதையைக் கேளுங்கள்
ஒரு சிட்டுக்குருவியின் கழுத்து
தன்னுடையது தான் என கிளையின்
ஒரு தொடர்ச்சியாக
இலை மணல் தந்து இருக்கிறது.(3) கோதுமையில் சாம்பல் கரைந்து போதல்
________________________________________

வயலில் கதிர்குலைகள்
மாதங்களாக
சூரியனின் பக்கமாய் முகம் திருப்பி நின்றிருக்கின்றன
தவம் செய்வது போலிருக்கிறது
அது மெள்ள மெள்ள முற்றிப் போகிறது
புடம் போடப்பட்டு தங்கமாக ஆகிப் போனது போல
பதரின் கோதுமையிலிருந்து
தனியானது
ஏதோவொரு முனிவர் தனது தோலை
தானம் செய்தது போல இருக்கிறது.

எரியும் அடுப்பில் ரொட்டி வறுத்தல்
கோதுமையின் ஈமக்கடனாக இருக்கிறது
ரொட்டியின் துண்டுகளை தன்னுடைய வாயில் ஒன்றாக்கி
அதை வயிறு வரை மிதக்கச் செய்வது
கோதுமையின் அஸ்தி கரைப்பது போல இருக்கிறது.

இது மாதிரி
உன்னுடைய பசியை தீர்ப்பதின் வலிமை
அது வரம்
அதை கோதுமை ஒரு காலில்
ஆறு மாதங்கள் வெயிலில் நின்று
தவத்தோடு அர்ச்சனை செய்து இருந்தது சூரியனால்.

பசியால்
உன்னுடைய துடிதுடிப்பு முடிந்து போனது
கோதுமையின் மோட்சமாக இருக்கிறது.

இந்த முழு செயல்முறையில்
எந்தவொரு சத்தமும் இல்லை
எந்தவொரு குரலும் இல்லை

அமைதி இருக்கிறது
அழிபட்டுப் போனவை
மோட்சத்தின் ஒரு கட்டாயமான காலவரையற்றதாக இருக்கின்றன.

நான் பேச்சற்றவன்
இல்லாத உரையாடலின் குரல் வெளியான போது
ஒரு ரொட்டி கூட சாப்பிட முடியவில்லை.அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ்
பிறப்பு : 14 , பிப்ரவரி 1980
பிறந்த இடம் : கோரக்பூர் , உத்திரபிரதேசம்.
சில முக்கியப் படைப்புகள் : கேங்ஹூ கா அஸ்தி விஸர்ஜன் வ அன்ய கவிதாஏங்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *