அக்னிச் சுடர்கள்- அர்விந்த் குப்தா (தமிழில் விழியன்) |மதிப்புரை  ரேகா ஜெயகுமார்

அக்னிச் சுடர்கள்- அர்விந்த் குப்தா (தமிழில் விழியன்) |மதிப்புரை ரேகா ஜெயகுமார்

அர்விந்த் குப்தா எழுதிய ‘Bright Spark’ என்னும் நூலின் மொழிப்பெயர்ப்பு தான் அக்னிச் சுடர்கள்.

உலகளவில் அறிவியல் மீது பெரும் பற்று கொண்டு பல அளப்பரிய சோதனைகள் செய்து அதில் வெற்றியும் கண்ட முப்பத்து ஒன்பது அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் அறிவியலில் மேற்கொண்ட எண்ணற்ற சோதனைகளையும் சாதனைகளையும் பற்றி கூறுகின்ற நூல் தான் ‘அக்னிச் சுடர்கள்’.

ராயல் சொசைட்டியில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியரான கடல் பொறியாளர் அட்ரசீர் கர்செட்ஜி,ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் வரைபடத்தை துல்லியமாக கணித்த நயின் சிங் ராவத்,மார்கோனிக்கு முன்பே கம்பியில்லா அலைகளை கண்டுபிடித்த ஜெ.சி.போஸ்,இந்திய வேதியியலின் தந்தையான பி.சி.ரே,செயற்கை மாற்று உடல் உறுப்புகளை வடிவமைத்த பி.கே.சேத்தி போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை பேசுகின்றது.

விழியன் – சிறுவர் இலக்கியத்தின் ...

எழுத்தாளர் விழியன்

எனக்கு இந்நூலில் இருந்து ஒன்றை மட்டும் மேற்கோள் காட்டி கூற விரும்புகின்றேன்.

இன்று எல்லா துறையிலும் பெண்கள் தங்களுடைய கால்தடத்தை பதித்து வருகின்ற நிலையில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு ஒரு பெண்மணி தன்னுடைய அறிவியல் வேட்கையை பூர்த்தி செய்ய இந்திய அறிவியல் கழகத்தில் முதலிடம் கிடைத்தும் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தார் சர்.சி.வி.ராமன்.அவர் பெண் மாணவிகளுக்கு எதிராகவே இருந்தார்.அதற்கு காரணம் பெண்கள் ஆய்வில் ஈடுபட்டால் ஆண்களின் மனம் சஞ்சலம் பட்டு அவர்கள் ஆய்வில் இடைஞ்சல் ஏற்பட்டு விடுமாம்.😡

ஆனால்,அவர் சற்றும் மனம் தளராமல் சத்தியாகிரகம் நடத்த அதனை கண்டு சர்.சி.வி.ராமன் ஒரு நிபந்தனையுடன் அப் பெண்மணியை இந்திய அறிவியல் கழகத்தில் சேர்த்து கொண்டார்.அந்த நிபந்தனை எந்தவொரு ஆண் மகனுக்கும் அறிவியல் ஆய்வில் இடைஞ்சல் ஏற்பட கூடாது என்பதே.

அக்னிச் சுடர்கள் அறிவியல் வானில் ...

அப்பெண்மணி வேறு யாரும் இல்லை,இந்தியாவில் அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியான கமலா சொஹானி அவர்கள்.

இன்னும் பல அறிவியாலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள படியுங்கள் ‘அக்னிச் சுடர்கள்’🔥

ஆங்கிலத்தில் : அர்விந்த் குப்தா.
தமிழில் : விழியன்.
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்.
விலை: ரூ. 160/-

– ரேகா ஜெயகுமார்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *