மு. அழகர்சாமியின் கவிதைகள்

மு. அழகர்சாமியின் கவிதைகள்

 

 

 

1)

எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.

2)

தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்..

3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்..

அங்கே!

பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!

4)

இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில் அழைத்தால்
தொடர்பு எல்லைக்கு
வெளியே என்றே
சொல்கிறது.

உனக்கும்
எனக்குமான காதலைப்போல….

5)

உன்
பிறந்தநாளைத்தான்
ரோஜாக்கள்
தினமென
அழைக்கிறார்கள்.

ஆம்
அவையும்
உன் இனம்தானே!

 

மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *