ஆலிஸ் வாக்கர் எழுதிய "The Color Purple (An Epistolary Novel)" புத்தகம் | Alice Walker's The Color Purple (An Epistolary Novel) Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆலிஸ் வாக்கர் (Alice Walker) எழுதிய “The Color Purple (An Epistolary Novel)” – நூல் அறிமுகம்

 “The Color Purple (An Epistolary Novel)” – நூல் அறிமுகம்

[ *An epistolary novel* tells its story through letters, diaries, or journal entries written by the characters.. ]

Alice Walkerன் இந்நாவல், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால அமெரிக்க சமூகத்தில் ஆப்ரிக்க-அமெரிக்க பெண்கள் எதிர்கொண்ட பாலின அடக்குமுறை மற்றும் இனவெறி சார்ந்த சமூக அநீதி ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகிறது..

1982ல் வெளியானது மற்றும் அதற்காக Walker Pulitzer Prize for Fiction 1983ஐ பெற்றார், இதன்மூலம் அவர் முதல் கருப்பினத்து பெண்ணாக Pulitzer ஐ வென்றார்..

1985ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய படத்திலும், தற்போது 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த *The Color Purple* ல் இந்நாவல் சித்தரிக்கப்பட்டுள்ளது..

Alice Walker,
இந்நாவலில்
*பெண்களின் கண்ணீரை கடிதங்கள் ஆக்கினார், அவர்களின் வலியை வரலாறாக்கினார்*.. என்றே கூற முடியும்..

செலி (Celie) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூலம், கருப்பின பெண்கள் இரட்டையடக்குமுறைக்கு எவ்வாறு உள்ளாகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக பேசி செல்கிறது இந்நூல்..

கருப்பின பெண்கள், கருப்பின ஆண்களால் பாலின அடக்குமுறைக்கும், வெள்ளை சமூகத்தால் இனவெறிக்கும் உள்ளாகிறார்கள்..

Celie சிறுவயதிலிருந்தே தந்தை , பின்னர் கணவர் Mr. ____ Albertஆலும் பாலியல் மற்றும் உடல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்..

“He beat me like he beat the children.”
குடும்பத்திற்குள் பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் மன வன்முறையை தெளிவாக கோடிட்டு காட்டுகிறது இவ்வரிகள்,
இது ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே குறைவாக எண்ணத் தொடங்கும் நிலையை தோலுரித்துக் காட்டுகிறது..
“I’m poor, I’m black, I may be ugly and can’t cook… but I’m here.”

One of the most important views displayed here is the strong relationship between the sisters..
Celie and Nettie
வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
ஒருவருக்கொருவர்
ஒளியாய் மாறியவர்கள்..

பாதிக்கும் மேற்பட்ட கதை கருவை நமக்குள் கொண்டு வந்து சேர்ப்பது இவர்கள் இருவரும் பரிமாறிக் கொள்ளும் கடிதங்களால் தான்,
I was mesmerized by their sisterhood.. Beautifully portrayed by the author👏🏻👏🏻

ஆண் அதிகாரம்
அவள் உடலைச் சிதைத்தது,
சமூகம், பெண் என்பதற்காக
அடிக்கப்பட்டவள் – அவள் தான் Celie.
கருப்பினம் என்பதற்காக
அவமதிக்கப்பட்டவள் – அவள் தான் Sophia..

என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒருவர் Sophia , நாவலில் வரும் ஒரு வலிமையான பெண் கதாபாத்திரம்..

ஒரு பெண் தன்னைச் சார்ந்தவர்களையும் தன் சமூகத்தையும், எதிர்கொள்ளும் திறனை நாவலாசிரியர் இக்கதாபாத்திரத்தின் மூலம் பிரதிபலித்திருப்பது மிகச்சிறப்பு👏🏻👏🏻

Sophia, ஹார்போவின் (Albert’s son) மனைவி. ஆணாதிக்கத்திற்கும், சமூக அநீதிக்கும் எதிராக துணிச்சலுடன் நிற்கும் பெண்ணாக சோபியா வலம் வருகிறார்..

Sophia, ஒரு வெள்ளை பெண்ணை எதிர்த்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறாள். இது இனவெறி நிறைந்த சமூகத்தில் கருப்பின பெண்களுக்கு எதிர்ப்பு காட்டுவதற்கான விலை எவ்வளவு கொடுமையானது என்பதற்கு உதாரணம்..
“They think we don’t know nothing because we black.”

கருப்பின மக்களை கீழ்த்தரமாக கருதும் காலனித்துவ இனவெறி,
*”They treat us worse than animals.”*
இனவெறி கருப்பின மக்களின் மனிதநேயத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொடூர அமைப்பு என்பதை இது காட்டுகிறது..

எதிர்பாராத திருப்புமுனையாக நம்மை கவரும் மற்றுமோர் கதாபாத்திரம் தான் Shug Avery..

உடைந்த கனவுகளுக்கிடையே, வாடிய செடிக்கு(Celie) நம்பிக்கை நீரை பாய்ச்சி சுதந்திரம் என்னும் சுவாசத்தையும், சுயமரியாதை என்னும் அடையாளத்தையும் அன்பு என்னும் ஆயுதத்தால் வெல்ல பழக்குவித்தாள், Shug Avery, a singer..

*The Color Purple*
வலியல்ல, வாழ்க்கையின் அழகு..
என்று புரியும் தருணமாக
இந்நாவலினை எண்ண இயலாத கோணத்தில் திருப்பி, எதிர்பாராத திசையில் கொண்டு வந்து சேர்த்தது நாவலாசிரியரின் சிறப்பு👏🏻👏🏻

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: The Color Purple (An Epistolary Novel)
ஆசிரியர்: ஆலிஸ் வாக்கர் (Alice Walker)
வெளியீடு:
Harcourt Brace Jovanovich
விலை: ₹.578
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.சுகிர்தா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *