நூல்: அம்பா சிவப்பின் கேள்வி
ஆசிரியர்: லக்‌ஷ்மீ பமன்ஜக் | தமிழில் பேரா. பொன்ராஜ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
416 பக்கங்கள்
விலை: 390.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/amba-sivappin-kelvi/

இந்தோனேஷியாவில் 1924ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட 30 ஆண்டுகளில் 1955ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி 16% வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது, அந்நாட்டின் நான்காவது பெரிய கட்சியாக உருவாகியிருந்தது. பலமான கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதை அன்றைய அமெரிக்க ஏகாதிபத்ய நாடு இயல்பாகவே விரும்பாது. உள்நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்கி இஸ்லாமிய அமைப்புகளை தனக்கு ஆதரவான அரசியலுக்காக பயன்படுத்தி கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்கும் வேலையை 1965ம் ஆண்டு முதல் செய்ய தொடங்கியது அதுவும் கொடூரமான முறையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த போராட்ட பின்னனியில் தான் “அம்பா” நாவல் எழுதப்பட்டுள்ளது…

“அம்பா” என்கிற பெண் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரில்லை. ஆனால் அவள் காதலிக்கும் பீஷ்மா ஒரு கம்யூனிஸ்டு ஆதரவாளர் கதாபாத்திரம். கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்கும் நிகழ்வில் பாதிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக மருத்துவராக கடமையை செய்யும் ஒரு பாத்திரம் தான் பீஷ்மர். அம்பா என்கிற பாத்திரத்தை மையமப்படுத்திதான் நாவல் முழுவதும் செல்லும்….

முதல் காட்சியில் 60வயதிற்கு மேற்பட்ட அம்பா அரசின் அடக்குமுறை போரில் தொலைத்த தன் காதலன் பீஷ்மாவை தேடி புரு என்ற தீவிற்கு வருகிறாள் 60வயது வரை பீஷ்மா ஒருவனுக்காக மட்டும் காத்திருக்கும் வழக்கமான சினிமா பானியில் இல்லாமல் யதார்த்தமாக இருக்கிறது.அம்பா பீஷ்மாவை காதலிப்பதற்கு முன்பே சால்வா என்கிறவரோடு காதல் வயப்பட்டிருந்தால் பீஷ்மாவை காதலிக்கும் போதே சால்வாவும் நினைவுக்கு வந்து போவான் . பீஷ்மா தொலைந்த பிறகு அவனால் உண்டான கருவை சுமந்து அதல்ஹார்டு என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள்.

பிறகு அதல் ஹார்டு மறைந்த பிறகு தான் காதலித்த பீஷ்மாவையே மீண்டும் தேடும் பணியில் ஈடுபடுகிறாள். இரண்டிற்கும் மேற்பட்ட காதல்வயப்பட்டிருந்தாலும் பீஷ்மாவின் மீதான காதல் ஈர்ப்பிற்கான காரணம் அவன் மனித நேயத்தோடு இணைந்தது அதற்குபின் ஒரு கொள்கை பின்னனி உண்டு பீஷ்மாவை தேடும் பணியில் அம்பாவிற்கு உதவும் சாமூவேல் என்ற பாத்திரம் அம்பா மீது காதல் வயப்படுகிறது. அந்த உணர்வை அம்பா புரிந்துகொள்கிறாள். அம்பாவின் கதையை முழுவதும் கேட்ட சாமூவேல் இருவரை காதலிப்பதும் இன்னொருவரை திருமணம் செய்வதும் எப்படி அம்பாவால் முடிகிறது என்று யோசிக்கிறான். பிறகு சாமூவேலே இறுதியில் ஒரே சமயத்தில் இருவரை காதலிப்பது போல் கதை முடிகிறது..

அம்பா பீஷ்மாவை பார்த்தாளா..? இல்லையா..?

அம்பாவின் குழந்தை என்ன ஆயிற்று…? சிவப்பின் கேள்வி என்ற புத்தக அட்டையில் இருப்பதன் அர்த்தம் என்ன..? என்பதை புத்தகம் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு வாசிக்கும் போது பல தமிழ் சினிமாக்கள் நினைவிற்கு வந்து போனது கதை நகரும் விதம் சமீபத்தில் வெளியான “மாறா” என்கிற திரைப்படமும், சால்வா-பீஷ்மா இவர்களின் கடிதங்களை வாசிக்கும் போது உத்தமவில்லன் என்ற திரைப்படமும் நினைவிற்கு வந்தது உங்களுக்கும் வரலாம் வாசியுங்கள்..!!

-S.மோசஸ் பிரபு
TNSF திருவள்ளூர்
மாவட்ட செயலாளர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *