சட்டத்தின் முன் இந்திய மக்கள் அனைவரும் சமமே
அலேன் கேம்பலுடன் டாக்டர் அம்பேத்கரின் நேர்காணல்
”அரசு இல்லம், புது டில்லி சனிக்கிழமை, ஏப்ரல் 24, 1948”
‘டில்லி ஜிம்கானா கிளப்பின் ஒளிவிளக்குகளின் பிரகாசத்தில் புல்வெளியில் அவர்களும் நானும் விருந்துண்டோம். எங்களுக்கு விருந்தளித்த, டில்லியில் பிரபலமாக உள்ள பத்திரிகையாளர் திரு.கிருஷ்ணா பல பிரமுகர்களை அழைத்திருந்தார். கடந்த இருபதாண்டுக் காலமாக இந்திய அரசியல் வானில் ஒளி நட்சத்திரமாக விளங்குபவரும், தீண்டத்தகாதவர்களின் தலைவ ரும், சட்டத் துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கர்தான் அன்றைய முக்கிய விருந்தினராவார். சட்டப் புத்தகங்களி லிருந்து தீண்டத்தகாதவர் என்ற இழி சொல்லை இறுதியாக நீக்க வந்துள்ள இந்தியாவின் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கு பவர்களில் முக்கியமானவர். தீண்டத்தகாதவரான அவர் தன் னுடைய விடுதலையின் பகுதியாக சமீபத்தில்தான் பிராமண வகுப்பைச் சார்ந்த பெண் மருத்துவர் ஒருவரை மணந்திருந்தார். நூற்றாண்டுக் கால பழக்கத்தை ஒரே நொடியில் மாற்ற முடியா தாகையால் இந்த நிகழ்ச்சி பெரும் புயலைக் கிளப்பியது. இந்த மாலைப் பொழுதில் அவர் மனைவி அவருடனே இருந்தார். எனினும் பல இந்திய பெண்களின் பழக்கத்தைப் போன்று இந்த மாதிரியான பொது நிகழ்வுகளில் அவர் ஒன்றும் பேசுவதில்லை.
டாக்டர் அம்பேத்கர் மிக விரிவான விளக்கம் அளித்தார். புதிய அரசியல் சட்டத்தின் சில அம்சங்களைக் குறித்து தெளி வான விளக்கமளித்தார். எடுத்துக்காட்டாக நீதித்துறைக்கு ஒதுக் கப்பட்டுள்ள சிறப்பதிகாரங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுபவித்து வரும் அதிகாரங்களைவிட அதிகமானவை என்று குறிப்பிட்டார். 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின் நிலைத்து நிற்கும்தன்மைக்கு சான்றாக அதிலிருந்து இருநூற்று ஐம்பது கூறுகள் புதிய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை அரசு குறித்து விவாதித்தோம். தற்போதைய முறை இந்தியாவில் மிகவும் மெதுவாகச் செயல்படுவதாக உள்ள குற்றச்சாட்டைக் குறிப்பிட்டார். இரண்டு துறைகளை பாதிக்கும் கொள்கை விஷயங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பேசி உடனடியாக முடிவு செய்துவிடலாம் என அவர் கருதினார். செடிஸ் பிரேரணைகள் மற்றும் துறைத் தலைவர்கள் குழு தங்கள் கீழ் பணியிலிருந்த துறைகளற்ற அமைச்சரவை தலைவர்களை வைத்துக்கொள்வது குறித்து விளக்கினார். புதிய அரசியல் சட்டம் இறுதியாக நிறைவேறுமுன் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுச் செல்வது குறித்து அவர் வருத்தம் தெரி வித்தார். அரசியல் நிர்ணய சபைக்கு வெளியே காமன்வெல்த் பிரச்சினை முடிவு செய்யப்படலாம் என அவர் கருதினார்.
மவுண்ட்பேட்டன் பிரபு பதவியில் இருக்கையில் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் மேற்கத்திய சுதந்திர சாசனங்களின் ஒரு கூட்டிணைப்பாகும். இந்த சாசனத்தின் கனவிற்கும் இந்திய வாழ்க்கையின் உண்மை யான நிலைக்கும் இடையேயான இடைவெளி இந்தக் கனவுகள் சாத்தியமாகும் தன்மையை அழித்தவிடவில்லை. பிரிட்டிஷ் சிந்தனையின் சுதந்திர செல்வாக்கிற்கு ஒரு புகழாரமாக அது திகழ்கிறது. இன மற்றும் சாதி வெறி நோக்கங்களுக்கு எதிரான அடிப்படையான தாக்குதலைத் தொடுக்கிறது இந்த அரசியல் சாசனம். இந்து மத கோட்பாடுகளின் கீழ் தங்கள் நிழல்களி னாலேயே உணவை அசுத்தப்படுத்திவந்த வெறும் தாழ்த்தப் பட்டவர்களாக இருந்த 80 கோடி தீண்டத்தகாதவர்களுக்கு இந்திய அரசியல் சாசனம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இப்பொழுது அவர்கள் சட்டத்தின் முன் சம உரிமை உள்ள இந்தியக் குடிமக்கள். நேரு அரசின் முக்கிய உறுப்பினர், அரசியல் சாசனத்தை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றியவர், தீண்டத் தகாதவர்களின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.”1
1. மவுண்ட்பேட்டனுடன் ஒரு சந்திப்பு, பக். 361, 362 அலேன் கேம்பல்
ஜான்ஸன்
மறுபதிப்பு, கைர்மோட், தொகுதி 10, பக்கம் 36 – 38.
📚 தொகுத்து எழுதியவர்:
– பேரா. எ. பாவலன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
