“இந்தியாவில் சாதிகள்” – நூல் அறிமுகம்
சாதிய முறை என்பது பன்னெடுங்காலமாக நிலவி வரும் ஒன்றாக இருக்கிறது. காற்றைப் போல, மேகத்தை போல, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சாதியின் தோற்றம் எப்படி உருவானது? என்பதை டாக்டர் அம்பேத்கரின் “இந்தியாவில் சாதிகள்” என்னும் நூல் எடுத்துரைக்கிறது. சாதிய தோற்றம் எவ்வாறு உருவானது என்பதற்கு பல அறிஞர்களின் கோட்பாடையும் தனது கோட்பாட்டையும் முன்வைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர்.
ஆண் பெண் பாகுபாடு எவ்வாறு காலூன்ற தோன்றியது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல். சாதியின் தோற்றம், தொழில் அடிப்படையாக இருப்பினும் முக்கிய காரணம் அகமண வழக்கமே என்பதை எடுத்துரைக்கிறார் அம்பேத்கர்.
புறமணம் புரிய விருப்பமற்ற குழுக்கள் தங்களுக்குள்ளேயே மணமுடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தன. இவ்வழக்கம் சரியாக செயல்படுவதற்கு ஆண் பெண் எண்ணிக்கை சமமானதாக இருக்க வேண்டும். கணவன் இறந்தபின் மனைவியை கணவனோடு தீயிட்டு (சதி) எரித்துவிடும் பழக்கமும், அவள் அழகாக தெரியாதவாறு அவளுக்கு விதவை கோலமிடும் பழக்கமும் இப்படித்தான் தோன்றியது என்கிறார். இதன் மூலம் ஒரு பெண் மறுமணம் செய்யமாட்டாள்.
ஆனால் ஒரு ஆண் தன் மனைவியை இழந்து விட்டால் ஏன் அவன் இவ்வாறு நடத்தப்படவில்லை? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் உரைக்கிறார். காலம் காலமாக ஆண்களே சாதிய வர்க்கத்தில் காலூன்றி நின்றனர். ஒரு ஆணை அவன் ஆண் என்பதாலேயே எந்த நிபந்தனைக்குள்ளும் அவனை இட முடியாது. அப்படி செய்வதால் ஒரு சாதி ஒரு பலமான ஆணை இலக்க நேரிடும் என்பதால், ஆண் பெண் ஏற்றத்தாழ்வு எண்ணிக்கையை சரி செய்ய ஒரு ஆணுக்கு இரண்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, பிரம்மச்சாரி ஆகவே தன் வாழ்வை கழிக்க வேண்டும் அல்லது வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் அதாவது குழந்தை திருமணம். இப்படியாகத்தான் குழந்தை திருமணமும் சதி வழக்கமும் நடந்தேறியது என்பதை குறிப்பிடுகிறார்.
மேலும் சாதிய தோற்ற முறை உருவாவதற்கு காரணம் பிராமணர்கள் தங்களுக்குள்ளேயே தங்கள் கதவை அடைத்துக் கொண்டனர். ஆதலால் இதர மக்கள் தனி பிரிவினர் ஆகினர் என்று உரைக்கிறார். இந்நூல் அம்பேத்கரின் ஆய்வு நூல்.
நூலின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் தான் கூறிய கருத்துக்களில் ஏதேனும் ஒரு கருத்து தவறு என்று தெரிந்தால் அவற்றை அழித்து விடவும் ஆர்வம் காட்டத் தயங்க மாட்டேன் என்கிறார். காலங்காலமாக சாதிகள் என்ற பெயரில் மனிதர்களை மறந்து விட்டோம். சாதிகள் தோற்றம் பார்ப்பவை.மனித மனங்கள் அன்பை எதிர்பார்ப்பவை. அன்பு காட்டுவோம்!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இந்தியாவில் சாதிகள் |
| ஆசிரியர்: | அம்பேத்கர் |
| வெளியீடு: | |
| விலை: | ₹.30 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சா.சமீமா சிரின் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

