செருப்படி
செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன்
சிலையில் தொங்க விட்டிருக்கலாம்.
காலில்லாதவன் எவனாவது
கட்டி வைத்திருக்கலாம்.
நடக்கக் கற்றுக் கொடுத்தவனுக்கான
நன்றிக் கடனாய் இருக்கலாம்.
அண்ணல்
சிலையான பின்பும் நடப்பவர் என்று
செருப்புகளை மாட்டியிருக்கலாம்.
அதுசரி
கையில் ஏன் மாட்ட வேண்டும் என்கிறீர்கள்
அவரால் அடிபட வேண்டும் என்னும்
ஆசையாசவும் இருக்கலாம்.
அல்லது இப்படியும் இருக்கலாம்
சிம்மாசனத்தில் செருப்புகள் வைத்த
பழைய ஞாபகம்
பரதனின் வாரிசுகளுக்கு வந்திருக்கலாம்
நா.வே.அருள்
இதுதான் நா.வே. அருள்.
அன்புக்கு நன்றி தோழர்