நூல் அறிமுகம்: அமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு -எஸ் .குமரவேல் (இந்திய மாணவர் சங்கம்)

 

“நாம் நம்மிடையே கேட்டுக்கொள்வோம் இராக்கிய தேசத்தின் குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் உட்பட 6 லட்சம் பேரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த குற்றவாளி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் வீட்டிற்குள் திடீரென ஒருநாள் இராக்கிய கமாண்டோ படைகள் புகுந்து அவரை படுகொலை செய்து அவரது உடலை அட்லாண்டிக் பெருங்கடலில் வீசி எறிந்து விட்டு போனால் நம் நாட்டு மக்களின் உணர்வு எப்படி இருக்கும்” 2011 மே ஒன்றாம் தேதி அமெரிக்க படை பின்லேடனை சுட்டுக் கொன்றதற்கு பின்னால் உலக புகழ்பெற்ற அமெரிக்க அறிஞர் “நோம் சாம்ஸ்கி” கூறிய வார்த்தைகள் இவை,

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனை கொன்றதற்கு ஏன் நோம் சாம்ஸ்கி அப்படி சொல்ல வேண்டும், அதுவும் அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவின் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக நடந்த இந்த கொலையை அமெரிக்க ஊடகம் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் அவர் அப்படி சொன்னார் என்ற கேள்வி இயல்பானது ,ஆனால் அதற்கான பதில் மிக எளிமையானது சற்று யோசித்தால் மிகவும் வெளிப்படையானது
கூட.

மருதன்: ஒசாமா படுகொலையை ஏன் ...
1957 ஆம் ஆண்டு சவுதியின் மிகப்பெரிய கட்டிட கலைஞரான முகமது பின்லேடனுக்கும் அவரது நான்கு மனைவியரில் ஒருவரான ஹமிதாவிற்கும் பிறந்த ஒசாமா பின்லேடன், 56 சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர் பெரும் பணக்காரர், பொருளாதாரம் படித்தவர் ஆனால் ஏன் அவர் ஆப்கன் சென்றார், ஏன் உலகை அச்சுறுத்தும் தீவிரவாதியாக ஆனார், என்பதை நமக்கு இந்த புத்தகம் விளக்குகிறது.

இஸ்லாமிய நாடுகளிலேயே மிகவும் பின்தங்கிய மதத்தைத் தவிர வேறு எதையும் அறிந்திராத 90 சதவீத மக்கள் வாழும் நாடு ஆப்கானிஸ்தான்.1978 ல் முகமது தராக்கி ஹபிபுல்லா ஆகியோர் தலைமையில் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் சோஷலிச சிந்தனை கொண்ட நில சீர்திருத்தம், நவீனமயமாக்கல், சோவியத் நட்பு என பல்வேறு முற்போக்கு அம்சங்களைக் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்தது இதனைப் பொறுக்காத அமெரிக்கா தனது வைரஸ் குழந்தையான CIA மூலம் கலகம் செய்து அங்கே ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டது, அங்கு நடந்த முற்போக்கான விஷயங்களை பொறுத்துக் கொள்ள முடியாத பிற்போக்குவாதிகள் நாத்திக கம்யூனிஸ்ட் கட்சி கையில் ஆப்கானிஸ்தான் மாட்டி விட்டது இது இஸ்லாத்திற்கு பெரும் ஆபத்து என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர் இதனை நம்பிய ஏராளமான அப்பாவி இஸ்லாமிய மக்கள் அங்கிருந்து பாகிஸ்தானிற்கு குடியேறினர். ஆப்கனில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத மதவாதிகள் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் சிறுசிறு மத அடிப்படைவாத அமைப்புகளையும் கட்சிகளையும் தொடங்கினர், பல மத குருமார்களும் மதவாதிகளும் பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு சென்று ஆப்கான் மீண்டும் மீட்க பட வேண்டும் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டனர் இது எல்லாவற்றுக்கும் அமெரிக்கா பின்னிருந்தது, அமெரிக்க ராணுவம் மதத்தின் பெயரால் ஈற்கப்பட்ட இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இதர உதவியும் செய்தது அப்படி ஆப்கன் ஆட்சியை கவிழ்க்க வளைகுடா நாடுகளில் இருந்து கிளம்பிய இளைஞர்களில் ஒருவர் தான் பின்லேடன்.

பின் அங்கிருந்த மதவாதிகளால் ஈர்க்கப்பட்டு அங்கு உள்ள மதவாத அமைப்பு களோடு இணைந்து அவளுக்கு பொருளுதவி செய்தார், ஒசாமா மத அடிப்படைவாதிகளை எல்லோரையும் காட்டிலும் தீவிரமாக திரட்டினார் அவரின் செயல்பாடுகளை கவனித்த சிஐஏ அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. கடும் நெருக்கடி பின்னால் முற்போக்கு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த சோவியத் இராணுவம் பின்வாங்கியது அதிபராகள் பெருமல் ஆகியோர் கொல்லப்பட்டனர் பின் ஆட்சி பொறுப்பேற்ற நஜிபுல்லா தாலிபான்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் மக்களை நேசித்த அந்த தலைவர் கொல்லப்பட்டார்.

உலகின் மிகப் பிற்போக்கான ஆட்சியை தாலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் ஒசாமா நிறுவினார் அமெரிக்கா உச்சிமுகர்ந்து இதனை வரவேற்றது ஒசாமா ஆட்சியின் வழிகாட்டியாக தொடர்ந்தார்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தன்னுடைய தீவிரவாத அமைப்பை கலைக்காமல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய போராளிகளின் போராட்டங்களுக்கு உதவிட திட்டமிட்டு 1989 ஆம் ஆண்டு அல்கொய்தா எனும் உலகின் பயங்கரமான, மத அடிப்படைவாதம் மிகுந்த, அமெரிக்காவின் ஆயுதங்களால் பயிற்சி பெற்று அமெரிக்காவையே அவர்களின் மண்ணில் ரத்தம் சிந்த வைத்த, மிகவும் பணக்கார, நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறன் கொண்ட தீவிரவாத அமைப்பு பின்லேடன் தலைமையில் உருவாக்கப்பட்டது.

அல்கொய்தா பற்றி நூலில் இப்படி குறிப்பிட்டிருக்கிறது “அல்கொய்தா தனி ஒரு அமைப்பாக இருக்காது அதே சமயம் இதர இயக்கங்களுடன் கூட்டணி வைத்து செயல்படும் அமைப்பாகவும் இருக்காது ,உலகம் முழுவதும் இயங்கக்கூடிய சித்தாந்தங்களுக்கு பொருந்தி வரக்கூடிய அத்தனை இயக்கங்களுடனும் உறவு கொள்ளும் ஆனால் அவர்களுடன் கூட்டணி என்றல்லாமல் அல்கொய்தாவின் கிளை பிரிவாக அந்தந்த பிராந்தியங்களில் அந்த அமைப்புகள் செயல்படும், அவர்களுக்கு வேண்டிய போர்ப்பயிற்சிகள் ஆயுதங்கள் பண உதவி போன்றவற்றை அல்கொய்தா வழங்கும், அல்கொய்தாவின் செயல்பாடுகளை அவை அமுலாக்கும்” இன்னும் சில அல்கொய்தா பற்றிய தகவல்கள் வாசிப்பவரை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் உதாரணத்திற்கு அல்கொய்தாவின் மனித வெடிகுண்டுகள் பெரும்பாலும் இணையத்தின் வழியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்,உலகின் மிகவும் பணக்காரக் தீவிரவாத குழு ,சூடான் தான்சானியா கென்யா போன்ற நாடுகளில் 80க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நடத்தி இருக்கிறது அதுவும் வெற்றிகரமாக.

தேர்தலுக்கு முன்பு அமெரிக்காவை ...

” இது எல்லாவற்றுக்கும் காரணம் தன் ஆதரவாளர்களை அல்கொய்தா முறையாக அரசியல் படுத்தியது” அல்கொய்தாவின் பயிற்சி குறிப்பேட்டில் எதிரிகள் குறித்த கிட்டத்தட்ட 80 சதமான தகவல்களை மிகவும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் சட்டரீதியாகவும் உள்ள மூலங்கள் வாயிலாகவே பெற முடியும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்படி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவின் ஆயுதங்களை கொண்டு பயிற்சி பெற்றவர்கள் ஏன் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தினார்கள்? ஏன் அமெரிக்கா ஒசாமாவை கொன்றது போன்ற கேள்விகளுக்கு இந்த புத்தகம் அளிக்கிறது. மேலும் அல்கொய்தாவை காட்டிலும் அதி பயங்கரவாத அமைப்பான அமெரிக்க உளவுப் பிரிவு CIA வை தோல் உரிக்கிறது ,
CIA- சென்ட்ரல் இன்டலஜென்ஸ் ஏஜன்ஸி, மற்றும் NBF-சென்ட்ரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன். அமெரிக்காவின் உளவு பிரிவு CIA 1947 இல் தொடங்கப்பட்டது, இதனுடைய பணி பிற நாடுகளில் உளவு பார்ப்பது ,குழப்பம் விளைவிப்பது, மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஊக்குவிப்பது, கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர முற்போக்கு வாதிகளுக்கு எதிராக செயல்படுவது, அமெரிக்காவிற்கு அடிபணியாதவர்களை எந்த அடிமட்ட அளவிற்கும் சென்று கொள்ளக்கூடியது. NBF இந்த உளவு பிரிவு அமெரிக்காவினுடைய உள்நாட்டு விவகாரங்களை கவனிப்பது.

உலகத்திற்கே நாகரீகத்தை போதிக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் உண்மையான முகம் அவ்வளவு கோரமானது, அமெரிக்காவின் 400 ஆண்டுகால வரலாறு அதையேதான் பிரதி பலிக்கிறது அந்த நாட்டு ஜனாதிபதிகள் அனைவரும் போரை விரும்புபவர்கள். ரூஸ்வெல்ட் தன்னுடைய நண்பருக்கு ரகசியமாக எழுதிய கடிதத்தில் இப்படி சொல்கிறார் “நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம் அமெரிக்காவிற்கு எப்பொழுது போர் தேவைப்படுகிறது” எல்லை விரிவாக்கம் நாகரீக போதிப்பு என அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் ஏராளம். கொலம்பஸ் எனும் வெறி ஓநாய் தொடங்கி வைத்த ரத்த வேள்வி இன்னும் கன்று கொண்டிருக்கிறது. பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அழித்தொழித்து கோடிக்கணக்கான கருப்பின மக்களை அடிமைகளாக்கி பல நாகரீகங்களை ஒழித்து உருவானதுதான் இந்த அமெரிக்கா.

Deadly Cooperation: The Shifting Ties Between Al-Qaeda and the Taliban

எப்பொழுதும் அமெரிக்க ஊடகங்களும் அதையே தான் பிரதிபலிக்கிறது சொல்லப்போனால் அமெரிக்காவினுடைய ஊடகங்கள் தான் முதலில் போரை தொடங்குகிறது, கலிபோர்னியாவை அமெரிக்கா கைப்பற்றிய பொழுது இன்னும் பல நாட்டு மக்களுக்கு சுதந்திரம் ஜனநாயகம் ஆகிய ஆசீர்வாதங்கள் கிடைக்கச் செய்வது அமெரிக்காவின் குறிக்கோளாகும் இந்த அழகு பூங்காவான கலிபோர்னியா பயனற்று கிடக்கிறது இதனை வளம் மிகுந்த தொழில் நகரமாக மாற்றுவோம் என எழுதியது.

அமெரிக்கா காலம் தொட்டு தான் செய்த அனைத்தையும் புனித்தின் பெயராலும் கடவுளின் பெயராலுமே செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி போர் மூலமாகவும் அதனால் கிடைத்த வெற்றிகள் மூலமும் , எல்லை விரிவாக்கம் என்ற மிக மோசமான கொள்கையினாலும் இன்றைக்கு ஐம்பத்தொரு மாநிலங்களைக் கொண்ட பிரம்மாண்ட நாடாக அமெரிக்கா காட்சியளிக்கிறது.

போர்க்கருவிகள்தான் அவர்கள் மூலதனம் உலகில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளின் கைகளிலும் அமெரிக்காவின் ஆயுதங்கள் தவழுகின்றன அப்படி பிற நாடுகளை அடிமையாக்கி அவற்றின் வளங்களை சுரண்ட உருவாக்க பட்டதுதான் சிஐஏ அது தோன்றிய காலம் முதல் இன்றுவரை ஈரான் ஈராக் போர், வளைகுடா போர் ,ஜிம்பாப்வே முற்போக்கு ஆட்சி கவிழ்ப்பு, வியட்நாம் போர், புரட்சியாளர் தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகள், சிலி நாட்டு தலைவர் அலெண்டே படுகொலை ,காங்கோ படுகொலை, ஓசாமா பின் லேடன் படுகொலை இன்றைக்கு சுலைமானி படுகொலை என அதன் ரத்த வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அமெரிக்கா தனக்கு ஆதாயம் இருக்கிறது எனில் எந்த ஒரு இழி செயலையும்எந்த ஒரு தாழ்ந்த நிலைக்கும் சென்று செய்யும் கேவலமான வழக்கத்தைக் கொண்டது. உதாரணத்திற்கு எண்பதுகளில் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே நடந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈராக்கிற்கும், பாலஸ்தீனம் எனும் நாட்டை அழிப்பதற்காகவே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட வைரஸ் குட்டியான இஸ்ரேலின் வழியே ஈரானிற்கும் ஆயுதம் வழங்கியது ,அவர்களின் அவர்களின் ரத்த வெள்ளத்தில் அமெரிக்கா லாப வேட்டை நடத்தியது,

இஸ்லாமிய நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் அமெரிக்கா மீது பின்லேடனுக்கு கோபம் வர காரணமானது, அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடந்தது அடுத்து பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவினுடைய சிஐஏ கடும் போராட்டத்திற்கு பின்னால் பெரும் முயற்சிக்குப் பின்னர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமாவை கண்டு பிடித்தது, 2011 மே ஒன்றாம் தேதியன்று ஒசாமாவை சுட்டு வீழ்த்தியது அவரது உடலை கூட இந்த உலகத்திற்கு காட்டாமல் கடலில் வீசிபட்டது.கொள்ளப்படய ஒசாமா ஒன்றும் நல்லவனோ அல்லது கொள்ள தகுதியற்றவனோ அல்ல என்பதும் குறிப்பிட தக்கது.

Al Qaeda: Facts About the Terrorist Network and Its History of ...

ஆனால் உலகிற்கே நாகரீகத்தை போதிக்கும் அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அந்த நாட்டிற்கே தெரியாமல் அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதை எந்த விதத்தில் நியாயம் என்று ஏற்று கொள்ள முடியும் அதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? அமெரிக்காவை பாகிஸ்தான் இச்செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என கூறியும் கூட உலகை அச்சுறுத்திய ஒரு தீவிரவாதியை கொள்வதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை இது உலக தீவிரவாதத்திற்கு எதிரான செயல் ஆகவே மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என பாராக் ஒபாமா சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என பல கேள்விகள் இருக்கிறது, உலக நாடுகளே இந்த படுகொலையை மிக மோசமாக விமர்சித்த போது கூட அமெரிக்கா ஏன் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கள்ள மௌனம் காத்துக் கொண்டது என்ற கேள்விகளுக்கு புத்தகம் பதில் அளிக்கிறது.

ஒசாமாவின்னுடைய படுகொலையை பல்வேறு நாடுகள் அறிஞர்கள் எதிர்த்த நிலையில் இந்தியாவினுடைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் “அமெரிக்காவின் இச்செயலை பாராட்டுகிறேன் “என்று சொன்னது ஏன் என்பதையும் நாம் உள்வாங்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளர் தோழர் ரமேஷ்பாபு அவர்கள் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு பல தரவுகளை எடுத்து வாசித்த பொழுது மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உட்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார், அவர் எந்த தாக்கத்தையும் வலியும் உணர்ந்தாரோ அதே தாக்கத்தை வலியை தன் எழுத்தின் மூலம் இந்த புத்தகத்தில் கடத்தி உள்ளார். வாசிக்கும் ஒவ்வொருவரும் நிட்சயம் அதனை உணரக்கூடும். சர்வநிச்சயமாக தோழர் ரமேஷ் பாபு அவர்கள் விரும்பியது போல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வரும் போராளிகளுக்கு சிறு ஆயுதமாக இந்த புத்தகம் பயன்படும் என நம்புகிறேன்.

உலகத்திற்கே நாகரீகத்தை போதித்த ஆசான் என தன்னை முன்னிறுத்தி கொள்ளும் அமெரிக்க வீதிகளெங்கும் துர்நாற்றம் வீசுகிறது, கம்பீரமாக காட்சியளிக்கும் வெள்ளை மாளிகை எங்கும் ரத்தக்கவிச்சை வீசிகிறது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமெரிக்கா பின்லேடங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கர்கள் எதைக் கொண்டு தங்கள் மீதுள்ள கறைகளைக் கழுவ போகிறார்களோ?

அமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு- பேரச்சங்களின் அறிமுகம்.

 

புத்தகத்தின் பெயர்: அமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு.

எழுத்தாளர்: ரமேஷ் பாபு

வெளியீடு: பாரதி புத்தகாலயம் 

விலை: ₹47.00 INR

தோழமையுடன்
எஸ் .குமரவேல்