அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (American Astronaut Anna Menon Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |

கட்டுரை: அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (Anna Menon) – ஏற்காடு இளங்கோ

அன்னா மேனன் (Anna Menon) என்பவர் ஒரு அமெரிக்கப் பொறியாளர் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனத்தின் மிஷன் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். ஒரு தனியார் மனித விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்று வந்தார். மேலும் சாரா கில்லிஸுடன் சேர்ந்து பூமிலிருந்து அதிக தூரம் பயணித்தப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

கல்வி

இவர் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார். இவர் 2008 ஆம் ஆண்டில் டெக்சாஸ் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு டியூக் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் சல்சா நடனத்தைக் கற்றுக் கொண்டார். மேலும் மலையேற்றம் மற்றும் சிறிய விமானங்களில் பறத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

நாசா
அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (American Astronaut Anna Menon Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |
சாரா கில்லிஸ் உடன் அன்னா மேனன் (Anna Menon)

இவர் நாசாவில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். அதில் ஆறு ஆண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான உயிரி மருத்துவ விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றினார். இவர் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தைச் சேர்ந்த சர்வதேச விண்வெளி நிலையக் குழுவினருக்கு உதவினார். சர்வதேச கூட்டாளி பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ பராமரிப்பை ஒருங்கிணைத்தார். மேலும் எக்ஸ்பெடிஷன் 47/48 பயணத்திற்கான அனைத்து உயிரி மருத்துவத் திட்டமிடலுக்கு தலைமை தாங்கினார்.

ஸ்பேஸ்எக்ஸ்

இவர் 2018 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் விண்வெளிச் செயல்பாட்டு பொறியாளராகச் சேர்ந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னணி விண்வெளிச் செயல்பாட்டு பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். அங்கு அவர் குழு செயல்பாடுகளின் வளர்ச்சியை நிர்வாகம் செய்கிறார். மிஷன் கட்டுப்பாட்டில் மிஷன் டைரக்டர் மற்றும் குழு தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.

இவர் டிராகனின் குழு திறன்களைச் செயல்படுத்துவதற்கு தலைமை தாங்கினார். குழு தொடர்பாளர், ஆப்ரேட்டர் பதவிகளை உருவாக்க உதவினார். மேலும் தீ அல்லது கேபின் காற்றழுத்த தாழ்வு போன்ற வாகன அவசரநிலைகளுக்கு முக்கியமான செயல்பாட்டு பதில்களை உருவாக்கினார். டெமோ-2, க்ரூ-1, CRS-22, CRS-23, க்ரூ-3, க்ரூ-4 மற்றும் ஆக்சியம் -1 போன்ற பல டிராகன் விண்கலப் பயணங்களின் போது மிஷன் கட்டுப்பாட்டில் பணியாற்றினார்.

விண்வெளிப் பயணம்
அமெரிக்க விண்வெளி வீரர் அன்னா மேனன் (American Astronaut Anna Menon Based Article in Tamil) பற்றிய அறிமுக கட்டுரை | ஏற்காடு இளங்கோ | www.bookday.in |
கணவர் மற்றும் குழந்தைகள் உடன் அன்னா மேனன் (Anna Menon)

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் என்பவரால் நிதியளிக்கப்பட்ட ஒரு தனியார் விண்வெளிப் பயணம் இன்ஸ்பிரேஷன் – 4 (Inspiration -4) ஆகும். இதில் அவருடன் சேர்ந்து 4 பேர் பயணம் செய்தனர். அப்போது அன்னா மேனன் அனைத்து வீரர்களுக்கும் தொழிநுட்ப ஆலோசகராக இருந்தார். விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களை விளக்கினார். ஐசக்மேன் விண்வெளியிலிருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, அவர் தனது போலாரிஸ் டான் பயணத்தின் ஒரு பகுதியாக அன்னா மேனனைத் தேர்ந்தெடுத்தார்.

இவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று போலாரிஸ் டான் விண்கலத்தின் மூலம் பயணம் செய்தார். இந்தப் பயணத்திற்கு ஐசக்மேன் தலைமை தாங்கினார். அவருடன் ஸ்காட் போட்டீட், சாரா வில்லிஸ் மற்றும் அன்னா மேனன் ஆகியோர் 5 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்றனர். இந்த விண்கலம் பூமியிலிருந்து 1400 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று பூமியைச் சுற்றியது. பயணத்தின்போது இவர் உள் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். மேலும் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனில் மேனன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை ராதாகிருஷ்ணன் பாலட் மற்றும் தாய் ஜெய்ஸ்ரீ ஆவார். அன்னா மேனன் சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

எழுதியவர் : 

✍️ – ஏற்காடு இளங்கோ

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *