அமெரிக்கத் தமிழ் ஹைக்கூக் கவிதைகள்
– தொகுப்பு: கன்னிக்கோவில் இராஜா
தனித்து வந்தபின்
விடுதலை உணர்வில்
சிறகடிக்கும் சருகு
***
காகிதம் எழுப்பும்
ஓசையில்லா விசும்பல்
வெட்டப்பட்ட மரம்
***
அணைக்கும் சூரியன்
உருகியுருகிக் காதலிக்கும்
இறுகிய பனிக்கட்டி
***
– கவிஞர் கல்பனா சுரேன், ஃபுளோரிடா
சாலையோரம்
தலை ஆட்டுகின்றன
மஞ்சள் பூக்கள்
***
இளம் பச்சைத் துளிர்கள்
சிட்டுக்குருவி
கிளையில்
***
தூண்டிலில் சிக்கிய மீனின்
கண்கள் சொல்கிறது
கொக்கிடம் தப்பித்த கதை
***
– கவிஞர் ம.வீ.கனிமொழி,
வெர்ஜினியா
***********************************************
நினைத்தவர் முகங் காட்டும்
மாயக் கண்ணாடி
காதல்
***
மேகம் ஊடுருவித் தூவும்
நனைய அழைக்கும்
சூரிய மழைக்கதிர்
***
அண்ணாந்து பார்க்க
மாயாஜாலம்
வானவில்
***
– கவிஞர் நளினி சுந்தரராஜன்,
விஸ்கான்சின்
***********************************************
வானவில்லின் குறுக்கே
கறுப்பு அழிப்பான்
பறவைகள் கூட்டம்
***
வெள்ளிச் சரிகை
பளபளக்கும் சேலை
பௌர்ணமிக் கடல்
***
காற்றின் பெருமூச்சில்
கலங்கும் பூமி
புயலுடன் மழை
***
– கவிஞர் மேனகா நரேஷ்,
நியூஜெர்சி
***********************************************
அதீத மாதாந்திர தவணை
அடைக்க ஓடும் பெருங்கூட்டம்
பூட்டிய மாளிகைகள்
***
பனி படர்ந்த சிகரங்கள்
குளிரில் நடுங்குகின்றன
செர்ரி மலர்க்கூட்டம்
***
ஆளற்ற சாலை
சட்டென நின்றது வாகனம்
நிறுத்தக் குறி பலகை
***
– கவிஞர் ராஜி வாஞ்சி,
டெக்ஸாஸ்
***********************************************
கோபுரக் கலசம் தலை வணங்கியது
கீழே உயிர் கொடுத்த
செப்புக் கலைஞர்
***
சிரித்ததால் வலித்தது
வலித்ததால் சிரித்தது
காதலியின் கல்யாண பத்திரிக்கை
***
வண்ண வண்ண கேக்குகள்
அட்டையைத் தடவின
பிளாட்ஃபாரம் குழந்தைகள்
***
– கவிஞர் ஷீலா ரமணன்,
டெக்ஸாஸ்
***********************************************
இரவின் இன்னிசை
சட்டென நின்றது
பாம்பு விழுங்கிய தவளை
***
தொலைந்து போனது
கரடிக்குட்டி
வெயில் கரைத்த பனி பொம்மை
***
மழை வெறித்த வானம்
இடம் பெயரும் பறவை
தூறலிடும் கிளை
***
– கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி,
மிச்சிகன்
***********************************************
📚 தொகுத்தவர்:
✍🏻 கன்னிக்கோவில் இராஜா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

