ஆமினா முஹம்மத் எழுதிய "நிகாடு" சிறுகதைத் தொகுப்பு புத்தகம் | Amina Mohammed's Nikadu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆமினா முஹம்மத் எழுதிய “நிகாடு” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“நிகாடு” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

தனக்கு இழைக்கப்படும் கொடுமையை சகித்துக் கொண்டு ஒரு காலகட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்ட வெடி மருந்து சிறு தீப்பொறி பட்டதும் சட்டென வெடித்து சிதறும் அணுகுண்டை போல் பெண்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் சிறுகதை தொகுப்பே இந்நிகாடு.

ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களின் விருப்பமே இல்லாமல் திருமணம் நடத்தி வைப்பதும்,காதல் திருமணம் செய்தால் அவர்களை சாதி,மதம் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வைத்து விலக்கி வைப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறது.அக்கொடுமைகள் ஒரு ஆணிடம் மட்டுமே இருந்து வருவதில்லை அது ஒரு பெண்ணுக்கு பெண்ணிடமிருந்தும் வருகிறது. தனக்கான உலகமாக அவர்கள் பெரும்பாலும் தன் வீட்டையும் தன் வீட்டு அறைகளையுமே சார்ந்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளை வைத்தே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைவருமே அச்சூழலில் வாழ்ந்தவர்கள் தான். ஆனால் இந்நிகாடு கதையில் அது இஸ்லாமியர்களின் வாழ்வியலை வைத்து சொல்லப்படுகிறது.

இதிலிருக்கும் ஒன்பது கதைகளும் தன் வாழ்வை முடித்துக் கொள்ள துணிந்த பெண்கள் பின் தற்கொலை ஒரு தீர்வாகாது என்றெண்ணி தனது முடிவை மாற்றி வாழ்ந்து காட்டுகிறார்கள்.

வைகறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பொழுது அதில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள துடிக்கும் பெண், தான் சென்று விட்டால் இந்த உறவும் சொந்தமும் நான் இருக்கும் போதே தன் குழந்தைகளுக்கு ஒரு சாப்பாடு கூட வழங்காமல் இருக்கும் பொழுது தன்னுயிரை மாய்த்துக் கொண்டால் இவர்கள் என்ன செய்வார்களென்று, முன் வைத்த காலை பின் வைத்து தன் குழந்தைகளுக்காக முடிவை மாற்றி அக்குழந்தைகளையும் அழைத்து வந்து வைகையாறு கரை புரண்டோடுவதை காண்பிக்கிறாள்.

ஏதாவதொரு காரணம் சொல்லி விவாகரத்து வாங்குவதற்கு, கடைசியில் இன்னொருவருடன் தொடர்பு என்று காரணம் காட்டி கணவன் பிரிந்ததையடுத்து அவள் ஊரில் எல்லோருக்கும் சாபமிட்டு வருகிறாள்.அதற்குப் பிறகும் அப்பெண்ணை சந்தேகத்துடன் தன் சொந்தமே வேவு பார்ப்பது எவ்வளவு கொடுமை.ஆனால் அப்பெண் தனிமையில் தனது திறமையால் பல வேலைகள் செய்து முன்னேற்றம் காண்கிறாள்.காலம் கடக்க அச்சாபம் தான் பழித்து விட்டது என்றெண்ணி சாபம் விட்டவர்கள் தன்னுடைய வீட்டில் தண்ணீர் குடித்தால் அச்சாபம் நீங்குமென அவளை ஊரில் அழைக்கையில் அவள் எவர் வீட்டிலும் தண்ணீர் குடிக்கவேயில்லை.

காதல் திருமணம் செய்ததால் ஏற்றுக்கொள்ளாமல் பின் அவர்களே வீட்டை விட்டு வெளியேறி காசு பணம் சம்பாதித்த பிறகு,காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பதைப் போல இறுதியில் இறந்த மாமியாரின் உடலை அவள் தான் குளிப்பாட்டி ஏற்பாடு செய்கிறாள்.

பெண் வீட்டில் வசதி வாய்ப்பு இல்லாததால் அவள் பிறந்த வீட்டிற்கே அனுப்பாமல் வைத்திருக்கும் போது அவளின் மாமனார் இறந்து விட மாமனாரின் செயல்களைப் போன்ற மருமகள் செய்வதால்,மாமியார் அவளின் பிறந்த வீட்டுக்கே அனுப்புகையில் மருமகள் ஆவி பிடித்தது போல் நாடகமாடுவது தெரிகிறது.

தன்னைப் போலவே தோற்றம் கொண்ட அழகான மாமி எல்லாவற்றையும் சரியாக கேட்கும் பொழுது எப்படி அவளுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகையில் பலதரப்பட்ட கொடுமைகளை அனுபவித்த அவளுக்கு தர்ஹா தான் புகலிடமென தஞ்சம் புக தெரிந்திருக்கிறது.

ஆணென்றால் எல்லாவற்றையும் செய்து விட்டு அதை காசு பணம் கொண்டு மூடி மறைத்து விடலாம் என்று நினைக்கையில் எல்லாவற்றையும் பொறுத்த பெண் இறுதியில் தற்கொலையென்று மண்ணெண்ணெயை குடித்து பிழைத்துக் கொள்ள,அப்பெண் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க இயலாமல் சரணடைகிறான் அந்த ஆண்.

வீடும் வீட்டின் அறைகளும் மட்டுமே தனக்கான உலகமாக அப்பெண்களுக்கு அமைகிறது.அதில் அவர்களே பலபேர்களுடன் பேசுவது போன்று தனக்குத் தானே பைத்தியம் போல் பேசிக் கொள்வது அவ்வீட்டிற்கும் அவ்வீட்டின் அறைகளுக்கும் மட்டுமே தெரியும்.

அத்தகைய கொடிய கொடுமைகளையும் காணாத முகங்களையும் காட்டுகிறது இந்நிகாடு சிறுகதைகள்.

இது பெரும்பாலும் இஸ்லாமியத்தில் மட்டுமல்ல, இந்து மற்றும் கிறிஸ்தவத்திலும் இருக்கிறது. இஸ்லாமிய பெண்கள் புர்காவிலும், கிறிஸ்தவ பெண்கள் முக்காடிலும், இந்து பெண்கள் புடவையிலும் அவர்களின் கொடுமைகளை வெளியே விடாமல் இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்கள்.அதை அவிழ்த்து விட்டிருக்கிறது இந்நிகாடு சிறுகதை தொகுப்பு

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “நிகாடு” சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: ஆமினா முஹம்மத்
வெளியீடு:
இக்றா பதிப்பகம்
விலை: ₹.170
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கண்ணன்.க
வல்லம்பட்டி
விருதுநகர் மாவட்டம்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *