அ. அனீஸ் பாத்திமா எழுதிய "அம்மா" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“அம்மா” கவிதை – அ. அனீஸ் பாத்திமா

“அம்மா” கவிதை

***********************

ஊதாங்குழல் ஊதி
உடல்வருத்தி என்
உயிர் வளர்த்தாள்

பசியான என் உணர்வை
பார்வையால் அறிந்திடுவாள்

என் முகம் அவளுக்கு
என் மனதைக் காட்டும்
கண்ணாடி

அவள் புன்னகை என்
அதிகாலையின் வெளிச்சம்

மின்னும் அவள் மூக்குத்தி
என் இரவின் விடிவெள்ளி

என்மீது அன்பை அள்ளி வீசும்
அழகியத் தென்றல் அவள்

நான் சிரித்தால் சிரிப்பவள்
நான் அழுதால் அழுபவள்
நீதான்நான் நான்தான் நீ என்பாள்

இன்னும் கொஞ்சநாள்
என்னோடு இருந்திருக்கலாம்

மருத்துவமனையில் அவளின் கடைசி நிமிடங்கள்
நான் அவள் தாயானேன்
அவள் என் சேயானாள்

உங்களுக்கு ஒன்றுமில்லை
வீட்டுக்கு போகலாமா என்றேன்

ஆகட்டும் என்பதுபோல்
ஆனந்தமாய்த் தலையாட்டினாள்

வெறித்த கண்கள் காட்டி
வேகமாய் என் கைபற்றி
வேதனை சிரிப்புதிர்த்து
விடைபெற்றுச் சென்றுவிட்டாள்

நான் பிறந்தபோது நான்
அழுதேன் வேதனைபொறுத்தபடி நான் வந்ததிற்காக
அவள் சிரித்தாள்

அவள் இறந்தபோது நான்
அழுதேன் வேதனைபொறுத்தபடி
நான் இருப்பதை நினைத்து
சிரித்துக்கொண்டே
அவள் சென்றுவிட்டாள்

நான் இருக்கிறேன் அவளைக் காணவில்லை
என்று மனம் வருந்தித் தேடிய பொழுது
அவள் சொன்ன ஞாபகம்
நான்தான்நீ நீதான்நான்

மொத்தத்தில் அவளாகவும்
நானாகவும் அவள் என்னோடு வாழ்கிறாள்.

****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻  அ. அனீஸ் பாத்திமா
உத்தம பாளையம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *