உனக்கு மட்டும்தானே தெரியும்
உன் குழந்தைக்கு எப்போது பசிக்குமென்று
உனக்குமட்டும் உன்மகன்தானே
என்றும் உன் தேசத்து இளவரசன்
உன் மகள் பேசும் மொழியின் அகராதி
உன் கையில் மட்டும்தானே
பத்து மாதங்கள் கருவிலும்
மூச்சுள்ளவரை நெஞ்சிலும் சுமப்பவள்தானே நீ
உன் அன்பிற்குச் சமமான
பொருளேது இவ்வுலகில்
உன் கனவுக்குச் சமமான
உயரமேது இந்த பூமியில்
உனது கண்ணீரில் கரையாத
கனத்த மனமேது ?
உனது அன்பில் உறையாத
உற்ற உறவுமேது?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

