அம்மாவிற்குத் தாலி கட்டாத
கணவர் உண்டு
என் சான்றிதழில் அவர் தான்
தகப்பன் என பெயருண்டு
கல்விக்காக வருவோர்
போவோர்
பலர் உண்டு அம்மாவிடம்
அவர் மீது தீரா காதலால்
அதன் பின்பு வருவோர்
யாருமில்லை
அவரைத்தவிர
தாலி கட்டாத காரணத்தால்
தாரத்திற்கான இடமும் இல்லை
தகப்பனுக்கு கொள்ளி போட
தாரமில்லா மகனுக்கு
உரிமையும் இல்லை
அறுத்தெறிந்து பொட்டு அழிக்க
அவருக்கு வாக்கபடவும் இல்லை
நாத்தனார் சடங்கு செய்ய
நாங்கள் யாருக்கும் சொந்தமில்லை
குடும்பத்துடன் வாழ
கொடுப்பனை இல்லை
குலம் வாழ
குலதெய்வ வழிபாடு
சொல்லித்தர யாருமில்லை
அவள் வாழ என்னை
ஈன்றெடுத்தாள்
தனக்கான வாழ்வை
எனக்காக வாழ்பவள்
என் அம்மா
#சரோ
எழுதியவர்
பொ. சரோஜா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.