இப்போதெல்லாம்
பள்ளி விட்டு வந்து,
எதுவும் சாப்பிடுவதில்லை..
ஆனால்,
புளிக்கறி மணமும்
அவியலும்
நார்த்தங்கா துண்டு
கடுகின் ருசியும்…..
அம்மாவின்
முகமும்
கேட்பாரற்றுக் கிடக்கின்றன…
பெயர்ந்த
சாலை சல்லிக் கற்களாய்.
எழுதியவர்
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

