ஊர் சாமிகளை
ஏதோ..
அதிகமாய்
இரசித்துக் கொண்டேயிருப்பேன்.
என்னவோ தெரியவில்லை
எனக்குண்டான
இருப்பை அங்கே உணர்த்திக் கொண்டே
இருக்கும்.
ஏ…. லே மக்கா,
பழைய கோமரத்தாடி
வைராடி போத்தி
ஆடினாருன்னா….
சாமி வந்து
அப்படி துடிச்சிட்டே கிடக்கும் லே,
அவரு வெலி குடுக்கப்பம்
தடிங்காவும்
தேங்காயும்
அவரை முழிச்சு முழிச்சு
பாத்து….
கர்ப்பிணியும்
குழந்தையும் பேசும்.
பாட்டனும்
சிரிப்பான்
ஊரும்
சிரிக்கும்….
கொண்டாடி போவானுக,
அதுக்கு முன்னாடி
வெலி குடுத்து
எப்படியெல்லாம்
உசிர எடுத்திருப்பானோ…
என
பகுத்தறிவு பேசி கதை சொல்வாள்
‘அம்மா’
எழுதியவர்
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

