கவிதை : அம்மாவின் நினைவுகள்
அம்மா இறந்து கிடக்கிறார்
தலைமாட்டில் இருபுறமும்
மனைவியும்
மகளும்
அழுதுகொண்டிருக்கிறார்கள்.
அஞ்சலி செலுத்த
வந்த உறவினர்களை
அழைத்துச் செல்கிறேன்
உறவினர்கள்
அஞ்சலி செலுத்திவிட்டு
எனக்கு ஆறுதல் கூறி
சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
பாட்டியுடனான
உறவின்
நினைவுகளைப் பகிர்ந்தும்
பகுத்தறிவையும் பக்குவத்தையும்
ஊட்டி வளர்த்த பாட்டியின்
இழப்பைத் தாங்காமலும்
என் மகள் அழுதுக்கொண்டிருக்கிறாள்.
அம்மா இழப்பைத்
தாங்கமுடியாத எனக்கு
அம்மாவின் மறு உருவாய்
மகளிடம்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அம்மாவின் நினைவுகள்
என்னை ஆற்றுப்படுத்துகிறது.
எழுதியவர் :
மு. பிரபு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.