ஆசிரியரின் முதல் படைப்பு “பானை எங்கே போனது? ”. அமுதன் ராஜகோபால் பரிகம் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் 18 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகத்தில் முதல் வகுப்பு ஆங்கில பாடத்தை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்க நூல்களில் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
குழந்தை நேய செயற்பாட்டாளரான இவர் தமிழ்நாடு அரசின் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ பெற்றுள்ளார்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை , மகிழ்ச்சியை அளிப்பவை பாடலும், கதையும் தான். நம் மூத்த தலைமுறையிடம் பல கற்பனைக் கதைகள், புராணக் கதைகள் புனைவுக்கதைகள் என கொட்டிக் கிடந்தன. நவீன காலப் பெற்றோருக்கு இது போன்ற சிறார் இலக்கிய நூல்கள் ஒரு வரப்பிரசாதமே.
குழந்தைகளோடு பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள நூல் ஆசிரியருக்கு குழந்தைகளின் விருப்பமும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் அந்த கதையை ஒட்டிய ஒரு பாடலை இணைத்திருக்கிறார் அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான எளிமையான வகையில்..
கதை ,பாடலோடு ‘ஆஹா’ என்ற பகுதியில் கதைக் கரு தொடர்பான பொது அறிவுச் செய்திகளையும் இணைத்துள்ளார்..

உதாரணத்திற்கு பானை எங்கே போனது என்ற கதையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள் கிடைத்துள்ளன என்ற தகவலைக் கொடுத்துள்ளார்
மானும், மயிலும் எனத் தொடங்கி கிட்டு மாமா வரை 16 கதைகள் நூலில் உள்ளன. 17வதாக ஆசை! ஆசை! என்று குழந்தைகளின் ஆசைகளைக் கூறி அதற்கு ஒரு பாடலை எழுதியிருக்கிறார். ஆசையூர் என்று ஒருஊரை உருவாக்கி அதற்கும் ஒரு சிறுகதை எழுதி இருக்கலாமே ஆசிரியரே? ஏனென்றால் ஒவ்வொரு கதையிலும் கதைக்கேற்ப ஊர் பெயர்கள்: எலியூர் ,யானையூர் ,பழவூர், மழையூர் என.. ரசிக்கும் படி இருந்தது.
நீங்களே உருவாக்கலாமே என்று ஒரு பாடல்.. டீச்சர்! டீச்சர்! என்ன டீச்சர்? கணக்கு டீச்சர். என்ன கணக்கு? வீட்டு கணக்கு!… எனத் தொடர்கிறது.. வாசிக்கும் குழந்தைகளை கற்பனையைத் தூண்டுகிறது..
அதியாவும், அழகான தேவதையும் எங்கள் பள்ளி மாணவர்கள் படித்து, இயற்கையை நாம் நேசித்தால் இயற்கையும் நம்மை நேசிக்கும் என்று அழகாக புரிந்து கூறினார்கள்.. நேரடியாக அறிவுரை கூறாமல் மாணவர்களே சிந்திக்கும் விதமாகவும் இத்தகைய கதைகளை மேலும் உருவாக்க ஆசிரியர் அமுதன் ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பானை எங்கே போனது” (2026) சிறுவர் நாவல் |
| ஆசிரியர்: | அமுதன் ராஜகோபால் |
| வெளியீடு: | |
| விலை: | ₹.60 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 பானுரேகா,வேலூர் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

