வாரம் ஓர் பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

வாரம் ஓர் பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்



நம் நாட்டில் 2020 மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது அதைத் தொடர்ந்து மார்ச் 24 , 2020 நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த 4 மணி நேரத்திலிருந்து முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார் . அந்த ஊரடங்கின் தொடர்ச்சி மே மாதம் இறுதிவரை நடைமுறைப் படுத்தப்பட்டது . எந்தவொரு முன்னறிவிப்பின்றி ஊரடங்கு நடைமுறைப்படுத்தியதில் மக்களின் அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என எந்தவொரு திட்டமிடலும் முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது . ஒரே இரவில் மக்களாட்சிக்கு அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு காவல்துறை மற்றும் அரசு எந்திரத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம் . முன்னறிவிப்பு மற்றும் சரியான திட்டமிடுதல் இல்லாததினால் மில்லியன் கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது . அதிலும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக அவலநிலைக்கு தள்ளப்பட்டது , புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிப்புரிந்த இடத்திலிருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் வேலை செய்திருந்த இடத்தில் வேலை இழந்தும் உணவு மற்றும் தங்குவதற்கு இடமின்றி தவித்தனர் .

இந்தியாவில் மொத்த தொழிலாளர்களில் 93 சதவீதம் முறைச்சாரா தொழிலாளர்கள் ஆகும்.. இதற்கிடையே கொரோனா தொற்றின் வேகமும் நகர்புறங்களில் அதிகரித்துக் கொண்டே சென்றது . ஊரடங்கினால் தொழிலாளர்கள் ( முறைச் சார்ந்த மற்றும் முறைச்சாரா ) வேலையிழந்தனர் பெரிய உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் சிறு , மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பச் சென்றதால் அங்கும் வேலையின்மை அதிகரித்தது . இவ்வாறாக கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் முறைசாரா தொழிலாளர்களின் ஊதிய இழப்பு ரூபாய் 653.53 மில்லியன் ஆகும் . இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய ஆய்வறிக்கையின்படி மார்ச் 2020 இல் இந்தியாவில் வேலையின்மையின் அளவு 8.8 சதவீதம் ஆகும் . ஊரடங்கினால் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மையின் அளவு 21.7 சதவீதம் ஆகும் . ஜீன் மாதத்தில் ஊரடங்கு தளர்த்ப்பட்டதின் விளைவாக வேலையின்மை 10.2 சதவீதமாக குறைந்தது , இதே காலகட்டத்தில் வேலையின்மையின் சதவீதம் மார்ச் மாதம் 6.4 சதவீதம் ஏப்ரலில் 49.8 சதவீதம், மே மாதத்தில் 33.2 சதவீதம் , ஜீன் மாதத்தில் 12.2 சதவீதம் ஆகும் .



இரண்டாம் அலை கொரோனா காலகட்டமான இந்த ஆண்டு 2021 மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மையின் அளவு 6.5 சதவீதம் ஆகும். ஏப்பரலில் 8.0 சதவீதம், மே மாதத்தில் 11 9 சதவீதமாக அதிகரித்தது இதோ காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வேலையின்மை மார்ச் மாதத்தில் 3.0 சதவீதமும், ஏப்ரலில் 2.3 சதவீதமும், ஊரடங்கு காரணமாக மே மாதத்திலேயே 28.0 சதவிதமாக அதிகரித்தது . ஊரடங்கின் காரணமாக வேலையின்மை அதிகரித்து தொழிலாளர்களின் வருமானம் குறைந்து இறுதியில் வாங்கும் சக்தியும் குறைந்தது. இதனால் பேரியல் பொருளாதார அளவில் ஒட்டு மொத்த தேவையின் அளவு குறைந்து உற்பத்தியான பண்டங்கள் தேக்க நிலையை அடைந்து பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகரத் தொடங்கியது. பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தாலும் வேளாண்துறையில் உற்பத்தி குறிப்பாக உணவு உற்பத்தி மகிழ்ச்சி அடையக்கூடிய நிலையில் அதிகரித்தது 2019-2020ஆம் ஆண்டு உணவு உற்பத்தி 296.5 மில்லியன் டன் ஆகும். இது 2018-19 ஆம் ஆண்டு உணவு உற்பத்தியைவிட 4.0 சதவீதம் அதிகமாகும். ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இரண்டு விதமான உணவு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

1. பிரதம மந்திரி கமிர் கல்யாண் யோஜனா, 2. ஆத்ம நிர்பார் பாரத் பேக்கஜ் இந்த இரண்டு திட்டமும் அக்டோபர் மாதத்தில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த நிதிநிலை அறிக்கையில் 2021-22 முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள வாழ்வாதாரத்தை இழந்த குறிப்பாக தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லீம்கள் மற்றும் பெண்களின் சமூக பாதுகாப்பு நடவடிக்கை ஏதுமில்லை, மேலும் நிதிநிலை அறிக்கையில் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்ப திட்டத்திற்கான நிதி மற்றும் பொது விநியோக திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. 2 காரணமாக உணவு உற்பத்தி அதிகமாக இருந்தும் அதிகப்படியான மக்கள் உணவின்றி உள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் உணவு பயன்பாட்டை பற்றிய ஆய்வினை புதுதில்லியில் உள்ள சமத்துவ மையம் என்ற அரசு சாரா அமைப்பு இந்தியா முழுவதும் ஏறக்குறைய 40000 குடும்பத்தினரிடம் ஓர் ஆய்வை மேற்க்கொண்டது. அந்த ஆய்வின்படி 79 சதவித மக்கள் தங்களின் மாத வருமானம் ரூபாய் 7000 / க்கும் குறைவு என குறிப்பிட்டுள்ளனர்.



மேலும் , ஊரடங்கு காலத்தில் எந்தவித வருமானமும் இல்லை என 27 சதவீத மக்களும் , வருமானம் பாதி அளவு குறைந்து விட்டது என 24 சதவீத மக்களும் , கால் பகுதியாக குறைந்தது என 27 சதவீத மக்களும் , மிக குறைந்த அளவிலான வருமானம் குறைந்தது என 18 சதவீத மக்களும், வருமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என 6 சதவீத மக்களும் , தகவல் இல்லை என 6 சதவீத மக்களும், தகவல் ஏதும் கூறாத மக்கள் 4 சதவீதம் என்றும் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது . வருமானம் குறைந்ததினால், தங்களின் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 50 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வேளை உணவின்றி வாழ்ந்தனர் என்றும் 45 சதவீத மக்கள் போதிய ஊட்ட சத்துயின்றியும், 30 சதவீத மக்கள் பருப்பு நுகர்வுயின்றியும் , 24 சதவீத மக்கள் அரிசு / கோதுமை நுகர்வுயின்றியும், 50 சதவீத மக்கள் தங்கள் உணவு தேவைக்காக கடன் பெற்றனர் என்றும் கருத்து கூறியுள்ளனர். இவ்வாறாக ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழிலாளர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் நுகர்வு குறைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. உணவு உற்பத்தி அதிகம் இருந்தும் அதை வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். எனவே அரசு தனது பொது விநியோக திட்டத்தில் உணவு பொருட்களின் அளவை அதிகரிக்க நடடிவக்கை எடுக்கப்பட வேண்டும் . உணவு பொருட்களை விலையின்றி ரேசன் கடைககள் மூலம் மக்களுக்கு வழங்கப்படவேண்டும். ரேசன் அட்டை இல்லாத வருமையில் வாழும் குடும்பத்தினருக்கும் உணவு பொருட்கள் வழங்குவதை அரசு கவனத்தில் கொண்டு பட்டினி நெருக்கடிக்கு அரசு தீர்வுகாண முன்வரவேண்டும்.

முனைவர் வே.சிவசங்கர்
உதவிப்பேராசிரியர்
பொருளியல் துறை
முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
வேலூர் 630002

முந்தைய கட்டுரைகள்: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி



Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *