நூல் அறிமுகம்: பில் பிரைசன் எழுதிய *அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு* – ரம்யா ரோஷன்புத்தகம் : அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
ஆசிரியர் : பில் பிரைசன்
தமிழில் : ப்ரவாஹனன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : Rs.600
பக்கங்கள் : 696
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/anaithayum-kuritha-surukkamana-varalaru-1261/

நான் ஆங்கில வழி கல்வியில் படித்ததில் எனக்கு ஒரு குறை உண்டு. ஆங்கிலம் அறிவியலை முழுமையுமாக புரிய வைக்கவில்லையோ என்று. அறிவியலை மொழி பெயர்த்து உள்வாங்கியதாக தான் இன்று வரை எனக்குத் தோன்றும்.

அந்தக் குறையை இந்த புத்தகம் நிவர்த்தி செய்து விட்டது.நாம் சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை பயின்ற அறிவியலின் quick recap இந்த புத்தகம்.அதுவும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்பட்டதா மொழி பெயர்க் கப்பட்டதா என்று தெரியாத அளவிற்கு சிறப்பான மொழிபெயர்ப்பு.

பள்ளி குழந்தைகள் அடிப்படை அறிவியலை தெளிவாக கற்க மிகவும் அவசியமான நூல் இது. மாணவர்களுக்கு சற்று கடினமான நூல் என்பதால்,தினம் ஒரு fact என்றெடுத்து அறிவியல் ஆசிரியர்கள் படித்து அவர்களுக்கு விளக்கலாம்.நானும் என் மகளுக்கு விளக்க ஆரம்பித்துள்ளேன்.நம்மில் பெரும்பாலோருக்கு உலகம் எப்படி இருக்கிறது என்பதற்கான அடிப்படை யோசனை இருக்கிறது,ஆனால் அதை நாம் முதலில் எப்படி கண்டுபிடித்தோம் என்பதல்ல. எல்லாவற்றையும் முதலில் எப்படி கண்டு பிடித்தோம் என்பதை புத்திசாலித்தனத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் விளக்குகிறார் ஆசிரியர் பில் பிரைசன்.இந்த கண்டுபிடிப்பு கதைகளை பிரைசன் விஞ்ஞானிகளின் வாழ்க்கையின் மூலம் நமக்கு விளக்குவது இந்த புத்தகத்தை இன்னும் சுவாரசியம் அடைய செய்கிறது.

டைனோசர் எலும்புகள் எவ்வளவு பழமையானவை?
வால்நட்சத்திரம் எங்கிருந்து வருகிறது?
கூறுகள் எவ்வாறு உருவாகின்றன?
பிக்பேங், சூப்பர்நோவா,பிரபஞ்சம்
பிளேட் டெக்டோனிக்ஸ், அணு, குரோமோசோம்கள், காற்றின் கலவை, பரிணாமம், கதிரியக்க சிதைவு, துகள் இயற்பியல்,சார்பியல் … என்று கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் ஒரு சுருக்கமான வரலாறு இந்த புத்தகத்தில் உண்டு.என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயமே இவை அனைத்தையும் எப்படி அவர் ஒன்றிணைக்கிறார் என்று தான்.

அறிவியலை தேமே என்று விளக்காமல் ரசனையை கூட்டி வண்ணமயமாக்குகிறார் ஆசிரியர். அதுவே இந்த புத்தகத்தின் வெற்றிக்கு முதற்காரணம்.படித்து ரசிப்போம் வாருங்கள்.

நன்றி :ரம்யா ரோஷன்