மொழிபெயர்ப்புக் கவிதை: *விவரிக்க முடியாதது* – ஹிந்தியில் : அனாமிகா | தமிழில் : வசந்ததீபன்விவரிக்க முடியாதது
_____________________________________

” தமது இடத்திலிருந்து விழுந்து
எங்கேயும் வாழவில்லை
கேசம் , பெண்கள் மற்றும் நகம் ” _ என
பரஸ்பர சம்பந்தம்செய்து இருந்தார் ஏதோ
அப்படிப்பட்ட சுலோகத்ததோடு
எங்களின் சமஸ்கிருத ஆசிரியர்.

மற்றும்
கொலை பயம் உறைந்து போயிருந்தது
நாங்கள் பெண்கள்
எமது இடத்தின் மேல்…
இடம் ?
இடம் என்னவாக இருக்கிறது ?
இது அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தது எங்களுக்கு
எமது முதல் வகுப்பில் தான்…

நினைவிலிருந்தது எங்களின் ஒவ்வொரு கணமும்…
ஆரம்ப பாடங்களில் _
ராம் , பாடசாலைக்குப் போ !
ராதா , உணவு சமை !
ராம் , வா பதாசா (ஒரு வகை இனிப்புப் பண்டம் ) சாப்பிடு !
ராதா , வீட்டைப் பெருக்கு !
சகோதரன் இப்போது உறங்குவான்!
போய் படுக்கையை விரித்திடு !
ஆஹா, புதிய வீடு !
ராம் , பார் இது உன்னுடைய அறை !
‘ மற்றும் என்னுடையது ? ‘
‘ ஓ..பைத்தியக்காரி ,
பெண்கள் காற்று , வெயில் , மண் இருக்கின்றனர்
அவர்களுக்கு எந்த வீடும் இல்லை _
அவர்களிடம் இருக்கிறது நன்மையாக
எதைப் போன்ற இடம் ?
எதைப் போன்ற இடம் இருக்கிறது?

அது விட்டுப் போனதில் பெண்ணாகிப் போகிறாள்
வெட்டப்பட்ட நகங்களை ,
சீப்பில் சிக்கி வெளியே வந்த கேசத்தைப் போல
ஒரே நொடியிலே துடைத்தெறியப்படுபவள் ?

வீட்டை இழந்து , கெளரவம் இழந்து , மக்கள் _ பூங்காவை இழந்து…
சில கேள்விகள் பின் தங்கியுள்ளன,
அவையும் விடுபட்டன

விட்டுப் போயின இடங்கள்
ஆனால் , எப்பவுமோ நகவெட்டி அல்லது சீப்புகளில்
சிக்கிக் கொள்வது ஒன்றாக இல்லாமல் ஆனது
பாராம்பரியத்தை விட்டு விட்டு…
போதுமானதாக இது இருக்கிறது _
ஏதோ ஒரு பெரிய செவ்வியல்
தேர்ச்சிப் படிப்பு பி.ஏ.வின் கேள்வித்தாளில் தெளிக்கப்படுகிற
சிறு செய்யுளாக இருக்கிறேன் _
விரும்பவில்லை ஆனால்
ஏதோ செய்ய அமர்ந்தன
என்னுடைய விளக்க சந்தர்ப்பங்கள்.

எல்லா சூழ்நிலைகளைக் கடக்க…
பிரச்னைகளிலிருந்து பறந்து அடைந்து இருக்கிறேன்
அப்படித்தான் புரிந்து _ படிப்பேன்
துக்காராமின் ஏதோவொரு
முழுமையடையாத அபங்.

ஹிந்தியில் : அனாமிகா
தமிழில் : வசந்ததீபன்

(1) சாது துக்காராம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்தி மொழி பக்திக் கவிஞர். இவரின் பக்திக் கவிதைகள் அபங் என அழைக்கப்பட்டன.அனாமிகா
______________

பிறப்பு :
_________ 17 ஆகஸ்ட் 1961
இடம் :
__________முஜப்பர்புர் நகர் , பீஹார்
கல்வி :
__________ தில்லி பல்கலைக்கழகத்தில் M.A., PhD., D.Lit. (ஆங்கிலம்)
தொழில் :
____________ ஆங்கிலப் பேராசிரியை , சத்யவதி கல்லூரி , தில்லி பல்கலைக்கழகம்.
இவர் கவிஞர் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர் , நாவலாசிரியர் , விமர்சகர் , மொழிபெயர்ப்பாளர்.

சில முக்கிய நூல்கள் :
_______________________
(1) கலத் பதே கீ சிட்டி பீஜாக்ஷர்
(2) ஸ்த்ரீத்வ கா மான் சித்ர
(3) தின்கா தின்கே பாஸ்
(4) கஹ்தீ ஹைன் ஒளரத்தேங் (உலக இலக்கியத்தில் பெண்ணியக் கவிதைகள்)

விருதுகள் :
______________ ‌
ராஜ பாஷா புரஸ்கார் ,
பாரத் பூஷன் சாஹித்ய சம்மான் ,
கேதார் சம்மான் புரஸ்கார் மற்றும் 2021 வருடத்திய சாஹித்ய அகாதமி விருது கவிதைக்காக ( டோக்ரி மே திகந்த் _ கவிதைநூல்) பெற்றுள்ளார்.