தொடர்: 13 – இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
13. இந்தியாவின் வேதிப் பொறியியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் அறிவியலின் உலக வித்தகர் அனந்தராமகிருஷ்ணன்!
இன்று உலக அளவில் உணவு குறித்த அறிவியல் முற்றிலும் மாறி இருக்கிறது. உணவு பதப்படுத்துதல் நான்காவது தொழில் புரட்சி பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. 3D உணவு அச்சாக்கம் என்னும் புதிய தொழில்துறை அறிமுகமாகி இருக்கிறது.. இந்த வகைகல்வி உணவு பொறியியல் ஆராய்ச்சி என்று அழைக்கப்படுகிறது 3D உணவு அச்சிடுதல் மற்றும் செயற்கை மனித செரிமான அமைப்புகளை உருவாக்கி சந்தை வரும் முன் உணவைப் பரிசோதித்தல் ஆகிய துறைகளில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து இருக்கும் இந்திய விஞ்ஞானி தான் சி அனந்தராமகிருஷ்ணன் எனும் தமிழக விஞ்ஞானி ஆவார்.
சி அனந்தராமகிருஷ்ணன் தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் திருவனந்தபுரத்தில் இயக்குனர் பதவியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன் தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை ஆய்வு நிறுவனத்தில் இயக்குனராக இருந்தார்..CSIR மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மைசூரில் அவர் முதன்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
சி அனந்த ராமகிருஷ்ணன் கோயம்புத்தூரில் பிறந்தவர் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் வேதி பொறியியல் துறையில் B TECH பட்டம் பெற்றார். இங்கிலாந்திலுள்ள லவ்ரோ பல்கலைக்கழகத்தில். காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் பெற்று CHEMICAL ENGINEERING துறையில் முனைவர் பட்டம் பெற்றார். கணக்கிட்டு திரவ இயக்கவியல் இவருடைய தனிப்பட்ட துரை ஆகும்..
அனந்தராமகிருஷ்ணன் உணவு பொறியியல் உணவு நானோ தொழில்நுட்பம் பொறியியல் மனித செரிமான அமைப்புகள் மற்றும் 3D அச்சிடுதல் ஆகியவற்றின் முன்னோடி விஞ்ஞானி ஆவார் உணவு தொழிலில் கழிவு பயன்பாடு குறித்த இவருடைய கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய மாற்றத்தை உலகெங்கும் ஏற்படுத்தின. உணவு பதப்படுத்தல் கருவிகள் பலவற்றை இவர் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருக்கிறார்.. உணவு விநியோகம் மருத்துவ உணவு மற்றும் செயல்பாட்டு உணவு மேம்பாட்டுத் துறைகளில் இவருடைய பங்களிப்புகள் உலகெங்கும் பேசப்படுகின்றன..
செயல்பாட்டு உணவு என்னும் FUNCTIONAL FOOD புதிய கல்வித் துறை நோய்களை வராமல் தடுத்தல் மற்றும் ஆரோக்கிய உணவை எடுத்துக்கொள்ளுதல் சம்பந்தமான கனி கல்வித் துறையாக இன்று செயல்படுகிறது ஆந்தோ சையனின் அல்லது கரோட்டினாய்டுங்களை அதிகப்படுத்திய உணவுகள் உடலியல் நன்மைகள் மற்றும் அடிப்படை ஊட்டச்சத்து செயல்பாடுகளுக்கு உதவுவதோடு நாள்பட்ட நோயின் அபாயத்தை குறைக்கும் வகையில் தற்போது நாம் உட்கொள்ளும் உணவை வடிவமைக்கப்பட முடியும். மேலும் தோற்றத்தில் வழக்கமான உணவைப் போலவே இருக்கும் ஆனால் உணவு மருந்துகளை உலகங்களும் எடுத்துச் செல்வதில் ஆனந்த ராம கிருஷ்ணனின் ஆய்வுகளைப் பெரிய அளவில் உதவி இருக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளிலும் வறுமை பிடிக்கப்பட்ட நாடுகளிலும் உள்ள குழந்தைகளுக்குத் தரப்படுகின்ற ஐ நா சபையின் சார்பாக உணவு தயாரித்தல் என்பதுல் இத்தகைய ஆரோக்கிய உணவு 3D அச்சாக்கம் பெரிய அளவில் பயன்படுகிறது .. இதற்கான ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு நிறுவனங்களிலும் உணவு தயாரிப்பு நிறுவனங்களிலும் பல வகையான கருவிகளைத் தேவைப்படுகின்றன மனித வயிற்றில் உள்ள உணவுகளின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் நடத்தையை ஆய்வு செய்வதற்காக ARK எனும் மனித வயிற்று மற்றும் சிறுகுடல் செரிமான அமைப்பை அனந்தராமகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.. இந்த ARK அமைப்பில் நம் அது உணவுக் கால்வாயில் பெரும்பாலும் எப்படி வெள்ளை அரிசி உணவு துகள்களாக முடிவு பெற்று செரிமான அமைப்பை அணைக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.. நுண்ணூட்டச்சத்துக்களை குடல் எப்படி பிரித்துக் கொள்கிறது.. வடிவமைக்கப்பட்ட உயிரி கலவைகளை உறிஞ்சும் அளவையும் இந்த கருவி பதிவுசெய்து உதவுகிறது இந்த தகவல் உணவு செயல்பாட்டு கருவியின் மூலம் புதிய உணவுகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட வேண்டும்..
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் உலகளவில் எடுத்துச் செல்லப்படும் மிக குறைந்த விலையிலான தயாரிப்பு செலவுகளுடன் கூடிய அகதிகளைக் கைவிடப்பட்டோர் முகாம்களுக்கான உணவுகளைத் தயாரிக்கும் பொழுது மனித ரத்த குளுக்கோஸ் அளவை எந்த அளவுக்கு மேம்படுத்துகின்றன அவற்றின் மருத்துவ குணம் அவற்றின் ஊட்டச்சத்து அடங்கியுள்ள விதம் இவை அனைத்தையும் இந்தக் கருவி ஒரு சில வினாடிகளில் நமக்கு தெரிவித்துவிடுகிறது. ஆனந்தராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி. 3D உணவு அச்சிடுதல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு என்பது மனிதர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.. வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் விவசாயத்தில் உதவுவதற்காகவும் பால் பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்ற ஆடு மாடுகளைப் பேணுதல் மாமிச உணவுக்காகவே வளர்க்கப்படும். பிராய்லர் கோழிகள் முதல் வெள்ளை பன்றிகள் என்று உணவு தயாரிப்பு இன்று பறந்து விரிந்த துறையாகும். இந்த துறைக்கான உணவுக்காக நாம் அயல் நாடுகளை நம்பி இருந்தோம். தன்னுடைய3D மற்றும்4D உணவு அச்சாக்க இயந்திரங்களை அறிமுகம் செய்து அனந்தராமகிருஷ்ணன் நமக்குத் தேவையான விலங்கு உணவுகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் இந்த கருவிகளும் கூட முழுக்க முழுக்க அவருடைய உள்நாட்டுத் தயாரிப்புகளாகும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படும் ஃப்யாட்க் சிற்றுண்டி வகைகள் உடனடி உணவு பொட்டலங்களை போன்றவைகளினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆனந்த ராம கிருஷ்ணனின் பரிசோதனை முறைகள் மிகவும் பயன்படுகின்றன பதப்படுத்தப்பட்ட சமையல் எண்ணை தர வந்ததா என்பதை பரிசோதிக்கும் கருவிகளையும் அவர் கண்டுபிடித்து உணவு பதப்படுத்தல் மற்றும் ஆய்வுத்துறைக்கு பல வகைகளில் உதவி இருக்கிறார். உள்நாட்டு தானியங்கள் பருப்பு வகைகள் காளான் போன்றவைகளை 3D அச்சிடும் உணவாக மாற்றுவதில் சந்தைப் பொருளாதாரத்தின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது.. அரை திட பேஸ்ட்கள். TOOTH PASTE உட்பட வகைகள் வாயின் வழியே வரும் அனைத்து வகையான பொருள்களுக்குமான 3D அச்சிட்டு உணவாக்கம் இன்று இந்தியாவின் சந்தைகளை மேம்படுத்தி இருப்பது தான் உண்மை.. அதன் பின்னணியில் தமிழக விஞ்ஞானி சி அனந்தராமகிருஷ்ணன்ன் பங்களிப்பு உள்ளது அது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: 12. இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன் (Dr. Nisha N Kannan)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வணக்கம் ஐயா .வாய்மொழி பதிவை நேரடியாக பதிவேற்றுவதால் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளன .அதனால் சிலவற்றின் அர்த்தங்களும் வேறுபட்டுள்ளன.
சற்று சரி செய்து போஸ்ட் செய்தால் மிக நன்று.
மிக்க நன்றி.
ஸ்ரீராமகிருஷ்ணன் கோவை மாவட்டம்
விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து தேவையான சைவ அசைவ உணவுகளை ஆய்வகத்திலேயே உருவாக்கிக் கொள்ளும் முயற்சி வெற்றி அடைந்தால் புதியதொரு தொழில்நுட்பத்தில் உணவு தேவை பூர்த்தி செய்யப்படும். விண்வெளி போன்ற இடங்களுக்கு பயணப்படும் பொழுது அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதைப் பற்றி ஆராய்ச்சியில் தமிழர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
Pingback: இந்திய வானியலாளர் தருண் சுரதீப் - Tarun Souradeep