நூல் அறிமுகம்: தமிழில் ஆதி வள்ளியப்பன் மொழிபெயர்த்த *அன்பைத் தேடி* – இராம்கோபால்நூல்: அன்பைத் தேடி
ஆசிரியர்: மார்க்ரீட் ரூஸ் | தமிழில்: ஆதி வள்ளியப்பன்
வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்
விலை: ₹30.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/anbai-thedi/

ஆதி வள்ளியப்பன் புக்ஸ் பார் சில்ரன் இணை தொடர்ந்து பல முக்கியமான புத்தகங்களை தமிழ் வாசகப் பரப்பில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. நீ கரடி என யார் சொன்னது என்பது மிக முக்கியமான ஒன்று. வாசிக்கவும் விவாதம் செய்யவும் பெரியவர்களுக்கும் சிறார்களுக்கும் நிறைய வாய்ப்பினை தந்து நிற்கும் புத்தகம் அது.

அவ்வரிசையில் அடுத்த புத்தகமாக நான் பார்ப்பது “அன்பைத் தேடி – மார்கரீட் ரூஸ்” அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பே. மனித சமூகத்தின் சிக்கல்களை பேரச்சங்களை பிரச்சனைகளை எப்படி குழந்தைகளோடு உரையாடுவது என்பது பெரிய சிக்கலாகவே எக்காலத்தும் உள்ளது. ஆனாலும் சிலர் அவர்களோடு எந்தவித பிரச்சனையும் உரையாட கலை வடிவங்களை அழகாக கையில் எடுக்கின்றனர்.

கொரானா ஊரடங்கு என்பது தான் சமீபத்திய மிகப் பெரும் கொடுந்துயர் காலமாய் புலம்பெயர் மக்களுக்கு நிகழ்ந்தது. இன்னமும் உலகத்தின் எங்கோ ஒரு இடத்தில் அதிகாரத்திற்காகவும் இலாப நோக்கிற்காகவும் போர்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஈவிரக்கமற்ற போரில் அமைதியான ஆற்றொழுக்க முறையில் வாழ்க்கையை எளிதாக நடத்தி வந்த மக்கள் திடீரென்று ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறார்கள்.ஒரு சேவல் கூவுவதும், தோட்டத்து செடிகளுடன் உறவு கொள்வதும், நாய் ஆடு பன்றி என இனபேதமின்றி அன்பால் எல்லாவற்றையும் ஆளுவதும் என்பதான சின்ன சின்ன ஆசைகளுடனே மக்கள் வாழ்கிறார்கள். என்ன கஷ்டம் வந்தாலும் வீட்டின் கூரையின் வழி வழியும் சூரியனின் ஒற்றை கீற்று கூட நிம்மதி, ஆசுவாசம், அமைதி தருகிறது. நத்தையின் முதுகில் வீடாக மனிதவாழ்வும் அமைந்தால் அங்கே அமைதி இருக்குமா? அன்பு, ஆதரவு நேசம் ஆகியவையே மனித வாழ்வை எவ்வித சிக்கலில் இருந்தாலும் ஆசுவாசம் தருகிறது.

இந்தப் பிரச்சனை எல்லாமுமா குழந்தைகளிடம் விவாதிப்பது என்ற கேள்விகள் விடைகளை தருவதில்லை. விடியலுக்கான தேடலின் பாதையை அமைப்பதில்லை. அதைத்தான் அழுத்தம் திருத்தமாக இப்புத்தகம் சொல்கிறது. ஆதி வள்ளியப்பன் அதை தமிழ் வாசகநெஞ்சங்களுக்கு அமுதாக்கி இருக்கிறார். கூழாங்கல் சிற்பங்களோடு கூடிய அழகிய வடிவமைப்பில் இப்புத்தகம் தமிழ் வாசகப் பரப்பில் பெரிதான இடத்தை கோருகிறது.

ஆனாலும் பாரதி புத்தகாலயத்தாருக்கு ஒரு ஆலோசனை, ஒரு புத்தகம் குறைந்த விலையில் வண்ணமின்றி வெளியிட்டாலும், பரவாயில்லை என விலை கூடுதலாக இருந்தாலும் முழு வண்ணத்தில் அதே புத்தகத்தை ஒரு குறைந்த எண்ணிக்கையில் வெளியிடுவது கூட தேவைப்படுகிறது.

இராம்கோபால்
புதுச்சேரி

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)