சாவித் துவாரக்  காற்று

உன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்…

என்னையும்

நடவடிக்கைகளை உளவுப் பார்க்கும் விழிகள்

உரையாடல்களை ஒட்டுகேட்கும் செவிகள்

பாதா அடிகளின் திசைகளிலும் முகங்காட்டா ஒற்றர்கள்

மிரட்டல் கலந்த கடும் வசவுகளால் எச்சரித்து

மீறல்கள் மரணத்திற்கு பாதையென ‘அன்போடு’ அறிவுறுத்தப் படுகிறோம்

விதிகளால் கட்டமைக்கப்பட்ட வாழ்வைப் போதிக்கிறார்கள் நம்மிடையே

ஒழுங்கமைவா யமைந்த மரபு திணிக்கப்படுகிறது நம்மீது

எண்திசையும் இருட்டு

கண்ணாடிச் சன்னல் வழி கசிகிறது பவுர்ணமி

பொங்கும் நதிக்குண்டு கரை

அடியாழச் சுழல் வேகம் அறிந்தவர் ஆர்?

சுற்றி வைக்க முடியுமோ

தெளி

சுதந்தரமென்பதோ சுடுநெருப்பு

கதவுகள் யாவும் அடைபட

இரகஸ்யமாய் உள் நுழையும்

சாவித்துவாரக் காற்று

மகாகவி பாரதிக்கு

 

தீநுண்மி தினங்கள்

7 Smart TV benefits and why your living room is incomplete without one

முட்டாள் பெட்டிச் சேனல்களைப்போல்

மாறும் நாளொன்றின் ஆறு காலமும்

எழல் தொடங்கி படுக்கையில் விழல் வரை ரிமோட் பொத்தானாய் சட்  சட்டென

மாறும் நிகழ்வு அபத்தங்களின் கலைடாஸ்கோப் காட்சிகளா.

உண்ணல், உருளல், உறக்கம் மட்டுமே கால அட்டவணையாக

மோகமும் போகமும் அதீண்டலாக

முத்தமிப்போ கெட்டவார்த்தையாச்சு.

 

உள்ளூர் உறவும் வீடியோ அழைப்பில்…

தனிமைப்படுத்தலின் சிறுகிளையாய்

வீட்டுக்காவலில் ஒரு நாள் பரோல்

காய்கறி வாங்கவும் கழி கொண்ட இளைஞர் கட்டளையிடுவார்

 

“.எந்த வார்டுய்யா நீயி. போய் சீக்கிரம் வந்துடனும் “

தடியெடுத்தவன் தண்டல்காரனாக

கோட்டும் சூட்டும் குளிரறைப் பேசியும் உயர்த்தியக் குரலுமான

கம்பீரப் பொழுதுகள் கண்களில் வந்தாட

சிவன் கழுத்து நாகங்களுக்கெல்லாம்

பதில் சொல்லல் ஆச்சே எனக் குமையும்

மனசை ஆற்றுப்படுத்தும்

” எப்படி இருக்கே”

செல்லக்கிளியின் ரகஸ்யக் குரல்.

ஓர்மையும் உண்மையும் மின்னும்

செறுபதிலொன்றை கூற வாரீர் செகத்தீரே.

********************************

 

அபத்த நாடகம் பற்றியக் குறிப்புகள்

நாடகம்: நவீனமான கதை – Uyirmmai

இருத்தலுக்கும் வாழ்தலுக்குமிடையே  கிருமியாடும் கண்ணாமூச்சியாட்டம்

தீக்கண் திறந்தது தீநுண்மி எரிந்து சாம்பலாய் மன்மதன்

பசலையில் வடக்கிருக்கிறாள் ரதி

நாராசமாய் ஒலிக்கிறது

தனிமையின் காண்டாமணி

சந்தேகமெனும் எச்சில் துப்ப தெறிக்கிறது சுற்றியுள்ள அனைவர் மீதும் …என் மேலும் தான்

பறவைகள் பறக்கின்றன

பாடிக் களிக்கின்றன

கூண்டுக்குள் மனுசபயல்கள்

‘தொடாதே தீட்டு’ என்றவன் மீது

கால்தூக்கி  மூத்திரமடிக்கிறது காலம்

02

நன்றாக உறங்குகிறேன்/றாய்/றோம்

முன்பகல்,பின்மதியம்,

மாலைக்கருக்கலென கடிகார முட்கள் இறந்துகிடந்த  காலத்தின் ஃபாஸிலில்..

பின்னிரவில் விழித்து நள்ளிரவில் புசித்து ரா விளக்கை அணைத்து

அடரிருட்டில் கைபேசி குடைகிறாய்/றேன்/றோம் அபத்தமாய்

முட்டாள் பெட்டித் துப்பும்

புள்ளி விவரப் பொய்களை கொடும் மரணங்களை

பாதம் எரியக் காதம் கடக்கும் பசிக்கூட்டத்தைப்

பார்த்தபடியே உணவருந்தும்

மனிதம் தொலைத்த எந்திரமா னோம்/னாய்/னேன்

உறவு நட்பு விலக்கி உயிர்பயத்தில்

அறைக்குள் பதுங்கியவன் கண்ணில் தெரிந்தது பாசக்கயிறு

முகக் கவசம் அணியாத் தூய்மைப்பணியர்

உற்சாக சீழ்க்கையில் பாடித்தள்ளும்

குப்பைவண்டியில் பார் நம் கடவுளர்கள்.

Image

 

அன்பாதவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *