அன்பூ கவிதைகள்மெளனம்

மனமுடைந்த
சொற்களின்
தற்கொலைக்குத் தான்…
நீங்கள்
மெளனமென்று
பெயர் சூட்டுகிறீர்கள்.

பறத்தல்

பறந்து பார்க்காத வரைக்கும்…
பார்ப்பதற்கு அழகாகத்தானிருக்கிறது
பறத்தலென்பது.வெளிச்சம்

உதித்த பின்
உருளப்போவது
முள் படுக்கையிலா
புல் படுக்கையிலாயென்பது
விடியலுக்கே
தெரியாத போது…

வெளிச்சத்தைப் பற்றி
என்னதான் எழுதுவதாம்…….?!

 நேற்று

இன்றென்பதின்
ஏதேனுமொரு புள்ளியில்
எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது…
நேற்றென்பதின் தீற்றல்.

– அன்பூ