இன்றைய நூல்: அன்புள்ள மாணவிக்கு | தா. கமலா

33 ஆண்டு கால ஆசிரியர் பணியின் அனுபவங்களை தொகுப்பாக தனது பணி ஓய்விற்குப் பின் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியை கமலா.
இந்நூலினை மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் எழுதும் விதமாக வடிவமைத்துள்ளார்.
தனது மாணவப் பருவ அனுபவங்களோடு தற்கால மாணவிகளின் அனுபவங்களை இணைத்து தன்னை மட்டுமே பெருமைப்படுத்தி பேசிக்கொள்ளாமல், மாணவர்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் விவரித்து பேசுகிறார் ஒவ்வொரு கடிதத்திலும்.
மாணவர்கள் கொள்ள வேண்டிய லட்சியம்…..
பெற்றோர் மீது இருக்க வேண்டிய பாசம்……
ஆசிரியர்கள் மீது வரவேண்டிய மதிப்பு…….
நட்பு பாராட்டுதல்…..
தன்னைப் புரிந்து கொள்ளுதல்……
மனதைப் பேனுதல்…..
உடலைப் பேனுதல்….
போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவிகளிடம் உரையாடுகிறார். அத்தனை தலைப்புகளிலும் மாணவிகளுக்கு மட்டும் அறிவுரை கூறாமல் தேவையான இடங்களில் பெற்றோரின் தவறுகள், ஆசிரியர்களின் தவறுகள், தீய நண்பர்களின் போக்கு, சமூகத்தின் அலட்சியம் போன்ற விஷயங்களையும் கடுமையாக சாடுகிறார். பதின்பருவத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் வாசிக்க வேண்டிய நூல் இது.
நூல் : அன்புள்ள மாணவிக்கு
ஆசிரியர் : கமலா                                                                                                                                                          பதிப்பாளர் : பாரதி புத்தகாலயம்
நூலின் விலை : ரூ70
பக்கங்கள் : 78
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/anbulla-manavikku_t_kamala/
– ஆசிரியை Catherine Theresa முகநூல் பக்கத்திலிருந்து