அந்தியில் பூத்த நந்தியாவட்டை (Andhiyil pootha nandiyavattai) – நூல் அறிமுகம்
கவிஞரின் இரண்டாவது ஹைக்கூ கவிதை தொகுப்பாகும் தமுஎகச சார்பில் சென்னையில் நடைப்பெற்ற விழாவில் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க முடியாமல் மனம் தவித்தவர்களில் நானும் ஒருவன். ஏற்கனவே காற்றில் அசைகிற காலம் என்ற முதல் ஹைக்கூ கவிதையை நான் படித்து ஒரு அறிமுக கூட்ட நிகழ்வில் விமர்சனம் வைக்கலாம் இருந்தேன் காலசூழல் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை…
ஒரு கவிஞரின் எதார்த்த சிந்தனை தொடக்கத்தில் இயற்கையை உள்ளடக்கியதாக தான் இருக்கும் என்பதை மூத்த கவிஞர்கள் தொடங்கி இளம்கவிஞர் சுந்தரசெல்வன் வரை அப்படிதான் தொடர்கிறது….
பெரும் காற்று
அசையாமல் நின்றது
வெட்டுப்பட்ட மெட்டை மரம்.
கதறும் பறவைகள்
கலைக்கப்பட்ட வீடுகள்
வீழ்த்தப்பட்ட மரம்.
இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் நிலைமை என்ன என்பதை கவிஞரின் வரிகளில்…
படபடக்கும் தேசியக்கொடி
பறக்கும் தன்மானம்
தலித் ஊராட்சித் தலைவர்.
புரையோடிபோன சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக பட்டியலின மக்கள் இறந்த உடலை இன்றைக்கும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத அவலநிலையை பேசுகிறது.
வழி மறிக்கிறது
மேலத்தெரு
தலித் சடலம்.
காவலர் பாதுகாப்பு
சேரியில் சவ ஊர்வலம்
குடியரசு.
தடுத்தது சுவர்
தயங்கி நிற்கும் மனிதர்கள்
தீண்டாமை.
கவிஞர் சுந்தரசெல்வன் இடதுசாரி சிந்தனை உள்ளவர் என்பதும் தன் தேர்ந்தெடுத்த பயணம் தொகுப்பில் ஆங்காங்கே வெளிப்படுகிறது.
மனமெல்லாம் பரபரப்பு
நிலமெல்லாம் செங்கொடி
பஞ்சமி நில மீட்பு.
சாலையில் நடுவில்
கரும்புத் தோட்டம்
விவசாயிகள் போராட்டம்.
குழந்தை பகத்சிங்
உணர்ச்சிமிகு உரை
பள்ளி ஆண்டு விழா.
கையூட்டுப் பெறும்போது
கைகொட்டிச் சிரிக்கிறார்
காந்தி.
சமூகத்தில் ஆணும் பெண்ணும் நுகர்வு கலாச்சாரத்தில் எப்படி இருக்கிறார்கள் என உன்னிப்பாக கவனித்திறார் கவிஞர்..
தற்பெருமைக்குப் பெற்றான்
தலை கவிழ்ந்து நின்றான்
கடன் அட்டை
மினுக்கும் தங்கத் தோடு
பக்கத்து வீட்டு அத்தை
அம்மாவின் கைமாத்து
ஆச்சரியமாக உள்ளது இவை கவிஞர் கவனித்து இருக்கிறார் என்பதுதான் கிராமத்தில் பசுமாடு வைத்திருக்கும் விவசாயி கன்று இறந்துவிட்டால் கன்றுபோல் வைக்கோல்பொம்மை வைத்து பால் கறப்பார்கள் நகரத்தில் வசிப்போருக்கு இது பெரும்பாலும் தெரியாது அவை இரண்டு இடங்களில் தொகுப்பில் பதிவிட்டுள்ளார்..
வைக்கோல் பொம்மை
வீங்கிய காம்புகள்
பாவம் பசு
பால் குடிக்காத
கன்றுக் குட்டி
வைக்கோல் பொம்மை
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் நேரில் சென்று பாருங்கள் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல பல ஓவியங்கள் நிறைந்து காணப்படும்…
அனேகமாக அரசுப்பள்ளியில் பயலும் மாணவர்களின் தகப்பானாக தான் இருக்க முடியும் கவிஞர் சுந்தர்செல்வன் என தோன்றுகிறது இந்த கவிதைகள்..
கயிற்றில் ஆடுகின்றன
தமிழ் எழுத்துக்கள்
ஆரம்பப்பள்ளி
சுமை தூக்கும் குழந்தை
கூலி இல்லை
புத்தகப் பை
அரசுப்பள்ளி வளாகம்
ஏக்கத்தோடு பார்க்கும் குழந்தை
தனியார் பள்ளி வாகனம்
இதோட மட்டுமல்லாமல் சமூகத்தில் இருக்கும் பிற்போக்குதனம், ஏற்றத்தாழ்வுகள், சமூகத்தின் மீதான அக்கறை,அனைத்து தரப்பினரின் தற்கால நிலைமை,இயற்கையின் தன்மை,தான் கடைபிடிக்கும் இடதுசாரிய முற்போக்கு சிந்தனை இவையெல்லாமும் தான் பார்த்த,ரசித்த, உணர்ந்த அனுபவத்திலிருந்து ஹைக்கூ கவிதைகள் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் சுந்தரசெல்வன். புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு கவிதை நிச்சயம் உங்களை யோசிக்க வைக்கும்…
இறுதியாக
*அந்தியில் பூத்தது
நந்தியாவட்டை
அவளது அழகு*
இதுதான் புத்தகத்தின் தலைப்பு இதுகுறித்து கவிஞர் தன் உவமையால் எப்படி அதை சொல்லியிருக்கிறார் என்ற ரகசியத்தை புத்தகத்தை நான் படித்து முடித்து அவரிடம் விளக்கினேன் *சரிதான்* என்றார்…
எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் மிக அற்புதமான அணிந்துரை எழுதியுள்ளார்.
நீங்களும் வாசித்து விடுங்கள்
விமர்சனத்தை பதிவிடுங்கள்…
இளம்கவிஞர் தோழர் சுந்தரசெல்வன்
இலக்கிய பயணம் சிறப்பாக அமையட்டும்.
இன்னும் பல படைப்புகள் இச்சமூக மாற்றத்திற்கு பயனளிக்கட்டும்….
நம்பிக்கையுடன் மனமார்ந்த வாழ்த்துகள்…
நூலின் தகவல்கள் :
நூல் : அந்தியில் பூத்த நந்தியாவட்டை
கவிஞர்: அ.சுந்தரசெல்வன்
பதிப்பகம் : நாற்கரம்
வகைமை : ஹைக்கூ கவிதைகள்
பக்கங்கள் : 90
விலை : 110/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
சிஎம்.பிரகாஷ்
DYFI மாவட்ட செயலாளர்
திருவண்ணாமலை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி.. அருமை.. இனிய வாழ்த்துகள் தோழர்