1981ல் மீர் பதிப்பகம் வெளியிட்ட மிகப் பிரபலமான ரஷ்ய நூல் இது. இது மாதிரி ஒரு உடல் கூறியல் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை என்று சொல்லுமளவு என்னை அன்றைய நாட்களில் பாதித்த படைப்பு இது. இதை நாம் திரும்ப வாசிக்க முடியும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பாரதிபுத்தகாலயம் அந்த கனவை நிறைவேற்றி இருக்கிறது.
புரோட்டோமை யோசின்களின் சங்கிலி தொடரே பனிக்கட்டி என்பதில் தொடங்கி உயிர்ப்புள்ள தண்ணீர் உயிர்ப்பற்ற தண்ணீர் என்று உயிரியியலின் அடிப்படையை நூல் விவரிக்க தொடங்குகிறது. உடலை கட்டுமானத்துறை, உணவு கடத்தல்துறை, தகவல்துறை, என்றெல்லாம் பிரித்து விளக்கும் சூப்பர் புத்தகம்.
அறுவை சிகிச்சையின்போது மயக்க நிலையை ஏற்படுத்தும்போது ஒரு பெண்ணிற்கு இரண்டு முறை சுவாசம் தடைபடும் இடத்தில் தரப்படும் விளக்கம் மிக மிக அற்புதமானது. அதுபோல இதயம் குறித்த அந்த அத்தியாயத்தையும் பள்ளிக்கூட பாடமாக நாம் வைக்க வேண்டும் என மனம் பதறுகிறது. மிகச் சிறப்பான பதிப்பு.