உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா (Ankona Datta)

தொடர் : 40 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

அங்கோனா தத்தா (Ankona Datta) தனது பிஎஸ்சி மற்றும் எம்எஸ்ஸி ஆகிய படிப்புகளை வேதியியல் துறையில் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முடித்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக இணைந்தார். பிரின்ஸ்டனில் பட்டம் பெற்ற பிறகு அவர் பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கென் ரேமண்ட் என்பவரின் ஆய்வகத்தில் ஒரு ஆய்வு உதவியாளராக சேர்ந்தார். அங்கு தான் அவர் மைக்ரோ மாலிக்குலர் என்று அழைக்கப்படும் மூலக்கூறுகள் குறித்த உயிரி வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட தொடங்கினார்.

இன்று உலகம் முழுவதும் அறியப்படுகின்ற அற்புதமான மூன்று கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர். மனிதன் உயிர்வாழ மிகவும் தேவையான அடிப்படை அணு என்பது மனித உடலுக்குள் இருக்கும் உயிர் செல்கள் தான். இந்த உயிர் செல்களை புரிந்துகொள்ளும் விஷயம் மிக முக்கிய சில தரவுகளை வெளிக்கொண்டு வந்த பெருமை அங்கோனா தத்தாவை சேரும்.. ஒரு செல் உருவாக வேண்டுமென்றால் மிக துல்லியமான அளவீடுகளை பயன்படுத்தி ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலை, அவற்றை பிரதியாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இப்படியான ஒரு உயிர் செல் என்பது அது உள்ளே சென்று வெளியே வருகின்ற மில்லியன் கணக்கான புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புச்சத்துகள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் உலோக அயனிகள் என்று பலவற்றை தன்னகத்தே கொண்டு நம் உடலின் இயக்கத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது.

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/

உண்மையில் இந்த உயிரி செல்களை எடுத்து ஒரு பரிசோதனை குழாயில் வேதியியல் ஆய்வுக் கூடத்தில் இடும்பொழுது அவை வெறும் வேதி கலவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால் உடலுக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுடன் இணைந்து அந்தசெல் மற்றொரு செல்லுடன் இணைந்து ஒரு கூட்டுக் குழு முயற்சியாக இந்த செல்கள் உயிர்ப்புடன் தீவிரமாக செயல்படுகின்றன. இந்த ஆச்சரியம் தான் நம்மை தத்தாவின் கண்டுபிடிப்புகளை நோக்கி இழுக்கிறது. விஞ்ஞானி தத்தாவின் முதல் கண்டுபிடிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

மனித உடலின் செல்களை உள்ள என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்வதற்கு உயிரியலாளர் என்பவருக்கு.. அதீத தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட நுண்ணோக்கிகள் தேவை இந்த நுண்ணோக்கிகளின் வழியே அதி வேகமான செல்லின் செயல்பாடுகளை உள்ளே இருந்து கண்காணித்து படம் பிடிப்பதற்கு கேமராக்களும் தேவை. ஆனால் இவையெல்லாம் இருந்து விட்டாலே மனித உடலின் மூலக்கூறுகள் எப்படி ஒரு செல் விட்டு ஒரு செல் தாவி இயக்கத்தை தூண்டுகின்றன என்பதை கண்டுபிடித்துவிட முடியாது. ஒன்றை நாம் நன்றாக நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.. நம்முடைய உடலுக்குள் இருக்கும் இயக்கத்தை நேரடியாக கண்டு படம் பிடிப்பதற்கு அல்லது நுண்ணோக்கி வழியே பார்ப்பதற்கு நமக்கு ஒளி தேவை. நம்முடைய உடல் இருட்டால் ஆனது.. ஒரு சிறு அளவு கூட ஒளி உள்ளே புக முடியாத இடம் நம்முடைய முழு உடலும் தான்..

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/

இப்படியான சூழலில் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை பார்ப்பதற்கு.. படம் பிடிப்பதற்கு.. அங்கோனா தத்தா (Ankona Datta) கண்டுபிடித்துக் கொடுத்தது தான் ஒளிரும் மூலக்கூறுகள்.. இவை புரதத்தை விட பல மடங்கு நானோ அடிப்படையில் மிக மிகச் சிறியவை. இவற்றை உடலுக்குள் செலுத்தி நம்முடைய உடலின் நீர்மங்களோடு கரைத்து விடும் பொழுது இந்த ஒளிரும் மூலக்கூறுகள் என்னும் வேதி பொருட்கள் செல்லும் இடமெல்லாம் நமது உடலில் வெளிச்சம் பரவுகிறது.. இந்த வெளிச்சத்தை கொண்டு வெறும் படம் பிடிப்பது மட்டுமே நோக்கமல்ல.. அங்கோனா தத்தாவின் ஒளிரும் மூலக்கூறுகள் மூலம் புற்றுநோய்கள் முதல் ஹல்சமீர் என்கிற மனபிறழ்வு நோய் உட்பட பல நோய்களை அறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்

அங்கோனா தத்தாவின் இரண்டாவது கண்டுபிடிப்பு நமக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்பாகும்.. உதவும் மூலக்கூறுகள் என்பதே அது.. பொதுவாக உயிரி வேதியியலில் CO-FACTOR மூலக்கூறுகள் என்று இந்த உதவும் மூலக்கூறுகள் அழைக்கப்படுகின்றன புரதம் அல்லாத வேதிக் கலவைகள் இவை. அங்கோனா தத்தாவின் கண்டுபிடிப்பின் படி இவை உலோக அயனிகளாகவும் செயல்படுகின்றன.. ஒரு செல்லில் உயிரி வேதியியல் மாற்றங்கள் தடைபடும் பொழுது இந்த உதவி மூலக்கூறுகள் என்சைம் இயக்கவியல் என்று அழைக்கப்படும் ஒரு துறையின் மூலம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தை சரி செய்வதற்கு உடலுக்குள் அனுப்பப்படுகின்றன.. உடனடியாக பழுது பட்டு அந்த செல்லின் இடத்தை இவை எடுத்துக்கொள்கின்றன எவ்வித தாமதமுமின்றி உடல் இயக்கத்தை இவை மீண்டும் கொண்டு வருகின்றன. இப்படி இவை மருத்துவ துறைக்கு தற்போது உதவுகின்றன.

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/
CO-FACTORS மூலக்கூறுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. கனிம அயனிகள் ஒருவகை மற்றும் கோ என்சைம்கள் எனப்படும் சிக்கலான கரிம மூலக்கூறுகள் மற்றொரு வகை கோ என்சைம்கள் பெரும்பாலும் வைட்டமின்கள் மற்றும் பிற கரிம அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் இருந்தே தயாரிக்கப்பட்டு விட முடியும் என்பதுதான் அங்கோனா தத்தாவின் கண்டுபிடிப்பாகும். CO-FACTORS மூலக்கூறுகள் விஷயத்தில் அங்கோனா தத்தா (Ankona Datta) அதை மேலும் இரண்டு வகைகளாகப் பிரித்தார். முதலாவது PROSTHETIC குழு என்று அழைக்கப்படுகிறது. RNA மூலக்கூறுகளை இது அடிப்படையாக கொண்டது. APO PROTEIN எனும் புரத மற்ற, ஆனால் புரதத் தன்மைகொண்ட RNA வகை முதலாவதாகும். கூடவே HOLO PROTEIN என்று காலியான புரதம் என்ற அர்த்தத்தில் மற்றொரு வகை என்சைம் வகைப் பட்ட உதவி மூலக்கூறு கூட்டமும் உண்டு. பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு உதவும், இது போன்ற உதவி மூலக்கூறுகளை ஆய்வகத்தில் உருவாக்கி எத்தனையோ பேரின் உயிர்களை காப்பாற்றுவதற்கு விஞ்ஞானி தத்தாவின் ஆய்வுகள் பயன்படுகின்றன.

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/
அவரது மூன்றாவது கண்டுபிடிப்பு.. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் குடிநீரில் கலந்திருக்கின்ற பாதரசத்தையும் காப்பர்களையும் கண்டுபிடித்து அகற்றுகின்ற அடுத்த முக்கியமான உதவி மூலக்கூறு ஆகும்.. இந்த வகை மூலக்கூறுகள்.. சென்சார் மூலக்கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன.. வேதியியல் உணர்திறன் என்பது ஒரு மூலக்கூறு அமைப்பாகும். அதை கரிம அல்லது கனிம அடிப்படையில் உருவாக்க முடியும் வேதியியல் உணரியின் செயல் மூலக்கூறு மட்டத்தில் நிகழும் ஒரு ஊடாடலை சார்ந்துள்ளது. பொதுவாக கரைசல் காற்று போன்ற கொடுக்கப்பட்ட எந்த வகை பொருளாக இருந்தாலும் அதில் இந்த உணரிகளை கலக்கும் பொழுது அதிலுள்ள வேதிப்பொருட்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இவை சிமிக்கை தொகுதி மூலக்கூறுகள் என்று அழைக்கப்படுகின்றன. அங்கோனா தத்தா (Ankona Datta) கண்டுபிடித்து கொடுத்து இருக்கும் சென்சார் மூலக்கூறு குடி நீரில் கரையக்கூடியது அது மிகச் சிறிய அளவு பாதரசம் தண்ணீரில் கலந்து இருந்தாலும் நிறத்தை மாற்றிக் காட்டி கொடுத்துவிடும். இந்த நிகழ்வை மறு திசையிலும் நிகழ்த்த முடியும் நீங்கள் இதிலிருந்து பாதரசத்தை அகற்றி விட்டால் தண்ணீர் பழைய நிறத்தை அடைந்துவிடும் இந்த சென்சார் மூலக்கூறுகளையும் கண்டுபிடித்த பெருமை விஞ்ஞானி தத்தாவை சேரும்.

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/

விஞ்ஞானி வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா (Ankona Datta) தற்போது மும்பையிலுள்ள டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் வேதி உயிரியல் துறையில் ஒரு இணை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். வேதி உயிரியலில் மூலக்கூறுகளை பிரதியாக்கம் செய்தல் என்னும் துறையில் தன்னுடைய ஆய்வுகளை தொடர்கிறார்.. அவருடைய மூன்று கண்டுபிடிப்புகளும் உலக அளவில் பயன்படுத்தப்படுவது நம் அனைவருக்கும் பெருமை.

கட்டுரையாளர் :

உலகறிந்த இந்திய வேதி உயிரியலாளர் அங்கோனா தத்தா | Ankona Datta is a world renowned Indian Chemical biologist - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய குவாண்டம் இயற்பியலாளர் ஷசங்க மோகன் ராய் (Shasanka Mohan Roy)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *