நூல் அறிமுகம்: கார்த்திக் திலகனின் ‘ அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள் ‘ – அன்பாதவன்தன்மை ஒருமையில் வாசகனை வசீகரிக்கும்

கவிதைச் செயலி

மொழியைப் புதிய அர்த்தங்களோடு புதுப்பிப்பது  கவிதை. அதனால் தான் கவிதையை மொழியின் ராணி என்கிறோம்.

    “ கவிஞர்கள்

    கவிதையை உண்டாக்குவதில்லை

    கவிதை எங்கோ பின்னால்

    காலங்காலமாக இருந்து வருகிறது

    கவிஞன் அதைக் கண்டு

   பிடித்து விடுகிறான்”  என்பார்

  செக் கவிஞர் ஜான் ஸ்கெசல்.

  ‘சொல்புதிது பொருள் புதிது

  சோதிமிக்க நவகவிதை’

என்ற பாட்டுப்பாட்டனின் வரிகளை உள்வாங்கி நவ கவிதைகளில் நம்பிக்கையூட்டுகிற ஓர் சிலரால் தமிழ் நவீனக் கவிதையின் சுடர் தொடரோட்டமாக கொண்டு செல்லப்படுகிறது. நவீனக் கவிதையின் மிகப்பெரிய வெளிப்பாட்டு சுதந்திரம், படைப்பு வெளிக்குள் எதையும் கவிதையாக்கலாம் என்பதே! புதிய சொல்லாடல்கள் புதிய உள்ளடக்கம் புதிய மொழி எனத் தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறது கவிதை! நவீனக் கவிதை வழக்கமான கவிதை உள்ளீடுகளிலிருந்து வெளியே வந்தது. புதிய பாடுபொருட்களை கொண்டு புத்தகம் புதுசாய்த் துலங்கியது.

கைப்பற்றி என் கனவு  கேள்என்கிற சுகிர்தராணியின்கவிதைத் தொகுப்பின் தலைப்பைப் போலவே  கார்த்திக் திலகனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பானஅந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள்

வாழ்வெனும் வட்டத்தை அகலமாக்க முடியுமா.. விரும்பிய வண்ணம் வளைக்க முடியுமா? சதா நம்மோடு முரணிக்கும் வாழ்வெனும் வட்டத்தை தான் சமாதானப்படுத்தத்தான் ஏலுமா? இருக்கின்றன சில  பாயங்கள்இசை,கவிதை, பயணம்,காதல்,ஓவியம்,கலை, பிற இலக்கியமென ..சிலருக்கோ  கரன்சி,காமம்,ஆன்மீகம்,பேருணவு என வேறு பாதைகள்.“இளைப்பாறுதல் வேண்டித் தவிப்போரே/

என்னிடம் வாருங்கள்/

களைப்புற்றிருக்கும் உங்களுக்குத் தர/

என்னிடம் ஒரு கனி இருக்கிறது” –

 என நேசத்திலழுத்தி அன்பகனாய் அழைக்கும் கவிஞனிடம்  வாசகன் தேடுவதும்,வேண்டுவதுமென்ன..?

அகம், புறம் என தற்காலக் கவிதைகளை மதிப்பிடும்போது மூன்றாம் வகையாக அகமும் புறமும் இணைந்த ஒரு போக்கு தற்காலக் கவிதைகளில் நிகழ்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    தனிமனிதன் ஒருவனின் அகப் பிரச்சனை, புறப்பிரச்சனையாக அதாவது சமூகப் படைப்பாக மாறும் விந்தையைத்தான் அகமும் புறமும் என்று பட்டியலிட விரும்புகிறேன்.       இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகளை மிகச் சரியாக மதிப்பிடும்போது அவை தனிமனிதக் கவிதைகள் (ஞநசளடியேட ஞடிநஅள) மட்டுமின்றி, சமூக கவிதைகளாகவும் (ளுடிஉயைட ஞடிநஅளநீட்சியடைவதை அறிவார்ந்த அவை ஏற்றுக்கொள்ளும்.

    “வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை நாம் பெறுகிறபோது சிந்தனைப் பூர்வமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் அதனைப் பெறுகிறோம். இப்படி சிந்தனையையும் உணர்வெழுச்சியையும் ஒரே நேரத்தில் எந்த அளவுக்குத் தரக்கூடியதாய் ஒரு கவிதை இருக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறப்புடையதாகிறது. இங்கேதான் அந்தரங்க கவிதையும்கூட சமூகக் கவிதைகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஒரு மனிதன் சொந்த ஆசாபாசங்களை பொதுவாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தகுந்தாகிவிடுகிறது. பொதுவாக கவிதைகளை அந்தரங்க கவிதை சமூகக் கவிதை என்று பிரிக்கிறவர்கள் இதை கவனிக்க வேண்டும் என வலியுறுத்துவர் கலை விமர்சகர் இந்திரன்.

வார்த்தைகளுக்குப் பின் நிலவும் மவுனம் தான் இலக்கியம்.படித்து முடித்த பிறகு உங்கள் சமநிலையைக் குலைக்க வேண்டும்,அல்லது வாசகனை முன்பை விட மேன்மையடையச் செய்ய வேண்டும்,அல்லது பிரமிக்க  வைக்கவும்,அதிசயக்க வைக்கவும் வேண்டும்,களிப்படைய வைக்கவும் வேண்டும்என்பார் எழுத்தாளர் எம் ஜி சுரேஷ். கார்த்திக் திலகனின் பல க் கவிதைகள் இந்தப் பணிகளைச் செவ்வனே செய்கின்றன.

சுவர்என்கிறக் கவிதை தன்னுள் கொண்டக் குறியீடுகளால் சமகாலத்தில் நட்பு,உறவு,அலுவலகம் ,குடும்பம் போன்ற அமைப்புகளுக்கும் தனியொருவனுக்கும் இடையே யான தொடர்பை,(communication) முரணை காட்சியாய் விளக்கும். கொரோனாஎனும் பேரிடர் பெருந்துயரில்  வீடடங்கி சிறையேகியக்கொடுங்காலத்தில்  ஆறுதல் மருந்தாயொருக் கவிதை:பரவசம்

@

“ஜன்னல் வழியே நாம் 

வானத்தைப் பார்க்கிறோம் 

என்ற பரவசத்தை விட

ஜன்னல் வழியே

வானம் நம்மைப் பார்க்கிறது

என்பதுதான்

அதிகப் பரவசமாயிருக்கிறது”

கவிதை எதையும் தெரிவிக்காது ஆனாலும் தெரிவிக்க முயலும்என்பார்  ராபர்ட் ப்ராஸ்ட். கார்த்திக் திலகனின் கவிதைகளிலும் இது நிகழ்கிறது.

“எப்போதும் என் நண்பனுக்கு

சுவாரஸ்யமான கற்பனைகள்

தோன்றிக்கொண்டே இருக்கும் .

நேற்று அவன் என்னிடம் கேட்டான் :

காற்று அசையாமல் நின்று விடவும்

உலகி உள்ள பொருள்கள் யாவும்

அசையவும் தொடங்கி விட்டால்

எப்படி இருக்கும் என்று

காற்று எங்கள் உரையாடலைக் கேட்டு

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தது”

நவீனத்துவம் என்பதும் நவீனமயமாதல் என்பதும் வேறு வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேலைச் சூழலில் எதார்த்தவாதத்திற்குப் பின் தோன்றிய ஓர் இலக்கியக் கோட்பாட்டை நவீனத்துவம் என்பர். நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கியப் போக்கைக் குறிப்பதென்றால் நவீனமயமாதல் என்பது பொதுவாக மொழியானது  என்பார் . மார்க்ஸ்.

    தமிழின் பாடுபொருள்கள் மாறின. வடிவம் புதிதானது. உரைநடையிலிருந்து சற்றே விலகி உள்ளடக்கத்தால் புதிய உத்திகளோடு கவிதைகள் உருவாயின. மொழி புதுப்பிக்கப்பட்டது. தமிழின் நவீன கவிதை என ஓர் ராஜபாட்டை உருவாகியது. பிறநாட்டு இசங்களை கடன்வாங்கி தமிழின் நவீனக் கவிதை உருவானதென்று விமர்சனமுண்டு.

Image
கார்த்திக் திலகன்

ஒரு தலைப்புக்குள் இரண்டு, மூன்று குறுங்கவிதைகளை எழுதிப் பார்ப்பதோர்   உத்தி.வகைகளாய்,விதங்களில் பலப்பலவாய் ஒரே மையம் அனுபவங்களைக்கொடுக்க அஃதே வாசகன்கரங்களை, விமர்சகன் விரல்களை த் தீண்டும் போது புதியதொரு பரிமாணமாய்ப் பூக்கிறது.கார்த்திக் திலகனின் பல கவிதைகளில் இது நேர்கிறது.வாசகனுக்குத் திறக்கிறது கவிதையின் மாயவிநோதங்களாலானப் புனைவுலகு.

காலத்தைப்பழக்குதல்எனும் கவிதை சர்ரியலிச உத்தியில் படைக்கப்பட்டதெனில், ‘ புள் இருஞ்சோலையில் மூன்று வேறு வேறு  பறவைகளைக் காண்பித்து மூன்று காட்சிகளை இணைக்கையில் வாசகனுக்கும்  நிகழும் புதிய திறப்பு.காட்சி தந்த லிங்கம்எவ்வித அர்த்தங்களுமின்றி சடங்குகளய் நிகழ்கையில்  கடவுள்களும் குழப்பமடைகிற சூழலைக் காட்சி படுத்தியுள்ள நிஜம் போலானப் புனைவு.

    எதையெல்லாம் எழுதலாம், எதையெல்லாம் எழுதக்கூடாது என்று எந்த ஒரு படைப்பாளியையும் எவரும் ஆணையிடவோ அதிகாரஞ் செலுத்தவோ இன்றைய நிலையில் ஏலாது. குறிப்பாக 1980 களுக்குப் பின் பெண் கவிஞர்களின் பிரம்மாண்ட வரவு படைப்புலகில் அதிர்வேட்டாக வெடித்தது. பெண்மொழியின் பெருஞ்சிறப்பாக இதுகாறும் அடைத்து வைக்கப்பட்டிருந்த உணர்வுகளின் பல்வேறு கோணங்களின் படைப்புகளில் பதிவாயின. பாலியல் பிரச்சனைகள், உறவுச்சிக்கல்கள் போன்ற இதுகாறும் சொல்லாமா, கூடாதா என்று மறைபொருளாய் விவாதங்களில் இருந்தவைகூட சர்வ சாதாரணமாக வெளிச்சத்துக்கு வந்து விமர்சனைத்துக்குட்படுத்தப்பட்டன. இதன் எதிர்ரொலியாக காலங்காலமாக சமூகம் கட்டிக்காத்த மதிப்பீட்டுக் கோட்டை சிதைவை கண்கூடாக பார்க்க முடிகிறது

“இவ்வளவு பெரிய நீல மீனை

இழுத்துக் கரையில் போட எல்லோரும் சேர்ந்து கை கொடுங்கள்

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா”

சாதாரணமாக படகை கடலில் இருந்து இழுக்க ஏலேலோ ஐலெசா பாடுவார்கள் ,கவிஞரோ ஐலேசா பாடி கடலையே இழுக்கிறார்கரைக்கு

வன்புணர்ச்சிவிதிஎன்கிற உரைகவி மொழி வீசும் உக்கிரம் நிச்சயம் வாசகனை ஏதோ செய்யும்.உயிரிசை–  நான்கு கவிதைகளும் காட்டுவது நான்கு திசைகள்அத்தனை வேறுபட்ட அனுபவம்.

கார்த்திக் திலகன்  கவிதைகளைப் படைக்க நெடுநேர தவம் மேற்கொள்வதில்லைசிறு சிறு அனுபவங்களை தன் மொழியில் வனைந்து வாசகனுக்கு வழங்க,உடுக்கூட்டமென விதம் விதமான சுவை ருசிக்க ஏதுவாகிறது.இரவு வானில் நட்சத்திர பூக்கள் மலர்ந்து மின்னும்.அதில் சில அதீத ஒளியோடு மின்னி மறைவது போலத் தோற்றம் காட்டும்.அதை ப் போன்ற மாயங்களைத் தன் கவிதைகளுக்குள் தூவி வைத்திருப்பது கவிஞரின் வெற்றி. பல கவிதைகளில்  சொற்கள், சில சொற்றொடர்கள் மாய ஜாலம் காட்டி வாசிப்பவர் மெய்மறக்கச் செய்து திணறடிப்பதும் நிகழ்கிறது.

நூலில்  பூத்துள்ள புதுமையானப் படிமங்கள் வாசிக்க ருசியானவை,சுவைக்க சில:

நீர்க்கூடு

நீர்க்குச்சிகளைப் போலநதிகள்

நீராலான வீடு

வெட்டிவைக்கப் பட்ட கேக் துண்டங்களாய்க் கட்டடங்கள்

தமிழ் எழுத்துக்களை செதில்களாக கொண்ட மீன்

பிறைமலர்த்தேர்

வானவில் புழுக்கள்

காற்றாலானப் பள்ளம்

கவிஞனின் ஒற்றைப் பரிமாணம் மறிதலிக்கப்பட்டு,அவனதுபன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்ட இக்காலக் கட்டத்தில், அவனது கவிதையுள்னிருக்கும் உண்மையும் பன்முகத்தன்மை கொண்டதாகிறது.இன்றையத் தமிழன் எப்பசி தனது சொந்த வீட்டில் உள்ளது போன்ற நிம்மதியில் இல்லையோ,அதேபோன்று அவனது கவிதையும் அவனது சொந்தக்கவிதையும் அதனது சொந்த வீட்டில் உள்ளது போல் உணர்வது இல்லைஎன சமகாலத்திய கவிதைகளைக் கணிக்கும் கலை விமர்சகர் கவிஞர் இந்திரன் அவர்களின் சிந்தனைக்கீற்று கார்த்திக் திலகனுக்கும் பொருந்துகிறது இயல்பாய்.காரணம்  தன்னைச் சுற்றியுள்ள இயற்கை எனும் பெரும் சக்தியோடு கார்த்திக் திலகன் நட்பு கொண்டிருக்கிறார் என நம்பும் நேரத்தில் அதனோடு முரணிக்கிறார்.சில இடங்களில் கோபமாக உரையாடிக் கொண்டே அதன் விரல் பிடித்து நடக்க தொடங்கிறார்

” கவிதை என்பது /

 மலரும்/விநோதப்பூ/

அதன் ஒவ்வொரு அடுக்கிலும்/

வெவ்வேறு வாசனைகள்எனப் புரிந்தே வைத்துள்ள கவிஞரோ

Image
அன்பாதவன்

அகாலத்தின் வனத்தில் அரூபமென்ற  புரவிமீது பயணித்து கவிதைகளை நமக்கு கையளிக்கிறார்..திலகன்.அவை காற்றாய்நீராய் ..ஒளியாய்ஒலியாய். ..நம்மோடு உடன் வருகின்றன.

நிலப்பரப்புக்குள் அதிர்வேற்பட்டு பூமி பிளந்தால் உயிரற்ற கட்டடங்களையும் உயிருள்ள மனிதர்களையும் விழுங்கி விடுகிறது. அதே அதிர்வு சமுத்திரத்துக்குள் ஏற்பட்டால் பூமியை விழுங்கி விடுகிறது. அந்த அதிர்வின் எழுச்சியும் விளைவுகளும் விவரிக்க வியலாத ஆழ்ந்த அர்த்தங்களைத் தருபவை. பெண் படைப்புலகின் அக உலகமும் ஆழ் கடலைப் போன்றே இன்றைய நிலையில் வெளிப்படுகிறது. மேலோட்டமானப் பார்வைக்கு இதமான குளிர்காற்றை பதமாகத் தருபவை போன்ற படிமத்தைத் தந்தாலும் ஆழிப்பேரவையின் ருத்ர தாண்டவத்தையும் தன்னுள்ளே இருப்பு வைத்தே எழுதப்படுவதை தேர்ந்த வாசகனும் திறன்மிகு விமர்சகனும் உணர்ந்தேயுள்ளான்

கவிதையின் மாயவிநோத உலகில் பயணிக்க விரும்புவோர் கார்த்திக் திலகனின் தொகுப்பை ஒரு முறையேனும் வாசியுங்கள்

அந்த வட்டத்தை யாராவது சமாதானப் படுத்துங்கள்

கவிதைகள். கார்த்திக் திலகன்

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு