பல கனவுகள் …..
ஒன்றை மற்றொன்று
பிடித்துக் கொள்கின்றது.
எப்போதும்
அப்படித்தான்.
இன்றைக்காவது
அந்தி மந்தாரை பூக்குமா?
என விழித்து நிற்பேன்.
நான் பார்க்கும்
ஆறு மணிக்குள் …..
பூத்து விரிந்து கூம்பி ….
செடியின் காலடிக்குள்
கனவை முடித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு தடவையும்
அப்படித்தான்…..
எட்டிப் பார்ப்பேன்
முழிப்பேன்
சிறுத்துப் போவேன்.
வாழ்வின் கணங்களை
யார் அளவிட முடியும்….?
நேற்று பார்த்த மாமா,
இன்று இல்லை.
இன்று சிரித்த ….
சிதம்பர தாணு அண்ணனின்
நிழல்…
மூக்கை நீட்டிக் கதை பேசியது.
என்னவோ,
தெரியவில்லை.
கோவிந்தன் மாமா, குடைச் சுருக்காமல்
அன்று போல் இன்றும்,
அதே வீதிகளில் கதை அளந்து சொல்கிறார்.
ஏ….. முருகா,
ஓம், மகளுக்கு எத்ன மாசம் டே,
நீ….
இப்படி சீணிச்சு கிடக்கே,
பேரனோ, பேத்தியோ
பூக்கட்டும்.
நீ …. படுக பாட்டை,
என தனக்குள்ளே சிரித்து கடருகிறார்.
இப்படித்தான்
பல ஊர்களில் ….
பல
மாடன் சாமிகள்.
கதை அறிவீர்களா?
எழுதியவர்:
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
ஓவியம் : பெ . மகேந்திரன், முகநூல்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

