கடந்த நாற்பது ஆண்டுகளாக அமலில் இருக்கும் தாராளமயக் கொள்கையினால் மக்களின் உடல்நலம் எந்த அளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்பு அம்பலப்படுத்துகிறது, இதனை மார்க்சியப் பார்வையில் டேவிட் ஹார்வி விவாதிக்கிறார்.
முதலாளித்துவத்தில் பல்வேறு செய்திகளை எவ்வாறு அலசுவது, புரிந்துகொள்வது, உட்பொருளை அறிவது என்பதை அந்த செய்தியின் பின்னணியில் இரண்டு தெளிவான முரண்பாடான விஷயங்கள் இருப்பதைக் காணும் போது எப்படி முதலாளித்துவம் இயங்குகிறது என்பதை அறிய முடியும். முதல் முன்மாதிரி, முதலாளித்துவத்தில் லாபம் அடைய உற்பத்தி, நுகர்தல், விநியோகம், மறு உற்பத்திக்கான முதலீடு மூலதனக் குவிப்பு இவற்றிலுள்ள முரண்பாடுகளை அறிவது. இத்தகைய முதலாளித்துவ உற்பத்தி முறையில் வளர்ச்சியும், விரிவாக்கமும் எல்லை இல்லாமல் வளர்வதைக் காணமுடியும்.
அவ்வாறு நடைபெறும் போது உலகளாவிய அரசியல் போட்டி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, நிதி நிறுவனங்கள், ஒரு நாட்டின் கொள்கை, தொழில்நுட்பத்தால் ஏற்படும் வேலைப் பகிர்வு மாற்றங்கள், அதனால் தொழிலாளி மற்றும் சமூக உறவுகளின் இடையே ஏற்படும் வலை போன்ற தொடர்ந்த மாற்றங்கள் என்று ஏற்படுவதால் இவைகள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க சிறிது கடினமாக இருக்கும்.
இதனை நான் எதிர்பார்த்திருந்தேன் எனினும், பரந்த முறையில் நடக்கும் சமூக உற்பத்தியில் (வீட்டிலும், சமூகத்திலும்), இது இயற்கையாக சமுதாயத்தில் ஒரு மாற்றத்தினை உருவாக்குகிறது (இதில் இரண்டாவது மாற்றமாக நகரமயமாதலும் அதனை ஒட்டி சுற்றுபுறச் சூழலிலும் ஏற்படுகிறது), அதனால் கலாச்சார அளவிலும், விஞ்ஞானமும்(அறிவியல் ரீதியாக), இதன் காரணமாக மதத்திலும், இவைகள் அனைத்தையும் சார்ந்து மனித சமுதாயத்தில் காலத்திற்கும் சமூக இடைவெளிக்கும் ஏற்றாற்போல் மாற்றங்கள் நிகழ்கின்றன. பின்னால் குறிப்பிட்ட மாற்றமானது முன்னால் சொல்லப்பட்ட மனித தேவை, அபிலாஷைகள், அறிவுப்பசி, இவைகளெல்லாம் அடிக்கட்டுமானத்தோடும், அரசியல் சச்சரவு, தத்துவார்த்த மோதல்கள், இழப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தனிமைப்படுதல், இவைகள் அனைத்தும் உலகில் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றது.
இரண்டாவது முன்மாதிரி உலக முதலாளித்துவமானது ஒரு தனித்தன்மை கொண்ட சமூகமாக கட்டமைப்பாக உருவாக்கியுள்ளது. இரண்டாம் நிலை என்பது இன்றைய உலக முதலாளித்துவத்தின் என்னுடைய புரிதலிலிருந்து எழுவது, முதலாம் நிலையில் பொருளாதாரம் இயங்குகையில் இந்த இயக்கம் சில விதி முறைகளைக் கொண்டிருப்பதால் அதன் போக்கில் ஏற்படும் முரண்பாடுகளைப் பற்றியது. அதற்கான சமூக அரசியல் பரிணாமத்தால் ஏற்பட்டதாகும்.
மேல்நோக்கிய சுருள்வட்டம்
சனவரி 26, 2020ல் கரோனா வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ள ? செய்தியினைப் படித்தேன், இது உலக மூலதன குவிப்பிற்கு எத்தகைய விளைவினை உடனடியாக விளைவிக்கும் என்பதைப் பற்றி ஆராய்ந்தேன். .பொருளாதார நிலைமையினை நான் அறிந்ததிலிருந்து மூலதனச் சுற்றுக்கு இடையூறு, மற்றும் தடையும் ஏற்பட்டால் அது பொருளாதார மதிப்பைக் குறைக்கும், அது மேலும் பரவலானால் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். சீனா பொருளாதார உற்பத்தியில் உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு என்பதை நான் அறிவேன். மேலும் 2007 -08ல் உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியினை மீட்டது என்பதையும் நான் அறிவேன். ஆகவே ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியினை இது மேலும் மோசமாக்கும். ஏற்கனவே முதலாளித்துவ முறை உற்பத்தியில் உலகில் மூலதனக் குவிப்பு ஏற்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன.
இதன் காரணமாக உலகெங்கும் எதிர்ப்பு இயக்கங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.(சாண்டியாகோ முதல் பீரூட் வரை) இது பெரும்பாலான மக்களுக்குத் தற்போதுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையால் எந்தவிதப் பயனுமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நவீன தாராளமய முன்மாதிரியானது ஊக முதலீடு, அதிக பண புழக்கம் அதனால் புதிய முறையில் கடன் வசதி என்பதன் அடிப்படையில் செயல்பட்டது. இதனால் எந்த அளவுக்கு மூலதனம் வளர வாங்கும் சக்தியினை அதிகரிக்க வேண்டுமோ, அதனை அது ஈட்ட முடியவில்லை.
ஆகவே என்னதான் இந்த முன்மாதிரி பிரதானமாக இருந்தாலும் அதன் உண்மைத் தரம் தளர்ந்துவிட்டது, அதனால் பொருளாதாரம் சுருங்கியும் இருப்பதால் இந்நிலை உலகளவில் தீவிரமடையும் என்பதால் இந்தப் பொருளாதார மந்தத்தை எப்படி மீட்டு எடுக்கப்போகிறது? இதற்கான விடை இந்தப் பொருளாதாரத் தேக்கம் எத்தனை நாள் நீடிக்கப்போகிறது, எந்த அளவு பரவப்போகிறது என்பதைப் பொருத்து உள்ளது. மார்க்ஸ் இதற்கு பதில் சொல்லும் போது உற்பத்தியான சரக்கானது மதிப்பினை இழக்கிறது என்றால் அதற்குக் காரணம் அது விற்கப்படவில்லை என்பதல்ல, அது சரியான நேரத்தில் விற்கப்படவில்லை என்பதே என்றார்.
நான் பல காலமாகக் கலாச்சாரம், பொருளாதாரம், அன்றாட வாழ்வு என்பதிலிருந்து இயற்கை வேறுபட்டது என்ற கருத்தினை எதிர்த்து வந்தேன். இயற்கையின் இயக்கத்தினை நான் இயக்கவியல் மற்றும் பகுத்தறிவோடு அணுகுவேன். மூலதனம் அதன் மறு உற்பத்திக்கு ஏற்ப சூழலை மாற்றுகிறது. அவ்வாறு அது செய்யும் போது அதன் விளைவுகள் என்ன என்று தெரியாமலேயே செய்கிறது (சுற்றுசூழல் போல). மூலதனமானது அதன் வளர்ச்சிக்கான சுற்றுசூழலின் தன்னாட்சிக்கு எதிராகவும் அதன் சுதந்திரமான பரிணாம வளர்ச்சி ஆற்றலைத் தொடர்ந்து மாற்றி அதன் சூழலை மாற்றியது. இந்தப் புரிதலிலிருந்து உண்மையில் இயற்கையாக எந்த ஒரு பேரிடரும் ஏற்படாது. வைரஸ்கள் எப்போதும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த மாற்றமானது உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் நிலை மனிதனின் செயலால் ஏற்படுகிறது.
4. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று அந்த வைரஸ் வளர்வதற்கான சூழல் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதற்கு உதாரணமாக வெப்பமண்டலப் பகுதிகளில் உணவுப் பழக்கத்தினை எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய சூழல் பல இடங்களில் உள்ளது, சீனா உட்பட யாங்சி மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளைச் சொல்லலாம். இரண்டாவதாக இந்த வைரஸ்கள் ஊடுருவிச் செல்வதற்கு வசதியாக மனித உடல்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மக்களின் நெருக்கமான நிலை இந்த வைரஸ் பரவுவதற்குச் சாதகமாக இருக்கிறது. தட்டம்மை இவ்வாறு சனநெருக்கம் அதிகமாக உள்ள நகரப் பகுதிகளில் பரவுவதைச் சொல்லமுடியும் ஆனால் மக்கள் நெருக்கமில்லாத இடங்களில் அது துரிதமாக இறந்துவிடுகிறது. மக்கள் எவ்விதம் ஒருவருக்கு ஒருவர் செயலாற்றுகிறார்கள், எப்படி இடம் விட்டு இடம் நகர்கிறார்கள், ஒழுக்கத்தினை எப்படிப் பின்பற்றுகிறார்கள் அல்லது கை கழுவ மறந்துவிடுகிறார்கள் என்பதிலிருந்து வைரசானது பரவுகிறது.
அண்மையில் சார்ஸ், பறவைக் காய்ச்சல் நோய்கள் சீனா அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பரவியது. இந்த பறவைக் காய்ச்சல் நோயால் முன்பு சீனா பெரிதும் பாதிக்கப்பட்டது, அதனால் பன்றிகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டன அதனால் பன்றி இறைச்சி விலை ஏறியது.. இதனால் நான் சீனாவை நிந்திக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. இதை தவிர்த்து பல்வேறு நாடுகளில் வைரஸ் உருவாவதற்கும் பரவுவதற்குமான சூழல் இருந்தது. 1918ல் ஸ்பானிஷ் ப்ளூ என்பது கான்சாஸ் என்ற இடத்திலிருந்தும், எச்ஐவி என்பது ஆப்ரிக்கா நாடுகளிலிருந்தும், எபோலா நைல்நதிப் பகுதியிலிருந்தும் வடஅமெரிக்க நாடுகளிலிருந்து டெங்குவும் பரவியது. ஆனால் பொருளாதார நெருக்கடி என்பது வைரஸ் போன்று மனிதப் பிறப்பு – நோய் ஆகியவற்றின் அடிப்படையில் இல்லாமல் பலவீனமான பொருளாதார கட்டமைப்பினால் ஏற்படுவதாகும்
கோவிட் 19 உஹான் பகுதியில் ஏற்பட்டதற்கு நான் ஆச்சரியப்படவில்லை (உண்மையில் அங்கிருந்துதான் ஏற்பட்டதா என்று தெரியாது). அங்கிருக்கும் சூழல் அதற்குப் போதுமானதாக இருந்தது. அது உலகளாவிய அளவில் பரவியுள்ளதற்கு மையமாக இருக்கிறது, அது போன்றே உலகப் பொருளாதார
5. நெருக்கடியும் அதன் தாக்கமும் பரவியுள்ளது. (அதன் வீச்சு எனக்குத் தெரியாது) இந்தத் தொற்றும் அதன் பரவலும் எவ்வளவு காலம் இருக்கும் என்பது பெரிய கேள்வி. (இந்தக் கொரானாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை). ஆனால் இந்த உலகமயமாக்கல் எவ்வளவு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதற்கும் அதனைத் தடுக்க முடியாது என்பதற்கும் என்றும் அது உலகளாவிய அளவில் பரவும் என்பதற்கும் முன் அனுபவம் உண்டு. இன்று உலகமானது நெருக்கமாக இணைக்கப்பட்டு நாம் அனைவரும் பல இடங்களுக்கு பிரயாணம் செய்கிறோம். மனிதனின் பிரயாணங்கள் ஒரு வலைப்பின்னல் போன்று பரவலாகவும் வெட்டவெளிச்சமாகவும் உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி ஒரு வருடத்திற்கு மேல் (பொருளாதார நெருக்கடியும் அதன் பரவலும்) தொடர வாய்ப்புள்ளது.
இந்தப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உடனடியாகப் பங்கு சந்தைகள் மளமளவென்று சரிந்தன. அதன் பின்னர் பெரிய அளவில் முன்னேறின. அதனால் சீனாவைத் தவிர மற்ற இடங்களில் சந்தையானது இயல்பு நிலையில் உள்ளது என்று சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் இந்தக் கொரானா உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தினாலும் சார்ஸ் நோயினைக் கட்டுப்படுத்தியது போன்று இதனையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை. மேலும் இது அனாவசியமான பீதியினைக் கிளப்பியதே பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
கோவிட் 19 தொற்று ஏற்பட்டபோது இது சார்ஸ் போன்றதுதான், வேறுவிதமாக எழுந்துள்ளது என்ற பிரதானமான கருத்தும் இருந்தது. இந்தத் தொற்று நோய் சீனாவைத் தாக்கியதையும், அது உடனடியாகக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சியையும் உலகினல் பரவலாக சீனாவில் ஏதோ உள்நாட்டு பிரச்சனை என்று கண்டும் காணாது சென்றார்கள். (அதனுடன் சேர்ந்து சீன அன்னிய எதிர்ப்பு உலகில் பல இடங்களில் எழுந்தது). சீனா பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கிச் சென்றதால் அதற்கு இவ்வாறு ஒரு பின்னடைவு வந்ததற்கு டிரம்ப் அரசு ஆனந்தம் அடைந்தது.
இருப்பினும் உஹானில் ஏற்பட்ட உற்பத்தித் தடையைக் கடந்து உலகின் பல பகுதிகளுக்கு தொற்று வேகமாகப் பரவியது. ஆனால் இது ஒரு சில கார்பரேட் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டது. (ஆப்பிள் நிறுவனத்தின் பிரச்சனை போல்).
பொருளாதார மந்தம் குறிப்பான ஒரு பகுதிக்கானது, அது ஒரு அடிக்கட்டமைப்பின் கோளாறில்லை என்று சொல்லப்பட்டது. இந்தப் பொருளாதார மந்தத்தினால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் சீனாவில் இயங்கி வரும் மெக்டொனால்ட் மற்றும் ஸ்டாரொஅக்ஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களைத் தற்காலிகமாக மூடின. 2020 சனவரி புத்தாண்டின் கொண்டாட்டம் காரணமாக கொரானா வைரசின் தாக்கம் பற்றிய புரிதல் மழுங்கியது. இத்தகைய மழுங்கிய பார்வை தவறான பார்வைக்குக் கொண்டு சென்றது.
இந்தக் கொரோனா தொற்று தென்கொரியாவுக்கும் கொதிநிலையான ஈரானுக்கும் பரவியது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது இத்தாலியில் பரவிய போதுதான் இதன் நாசகர நிலை தெரிய ஆரம்பித்தது.. பங்கு சந்தையில் பிப்ரவரி நடுமாதம் வரை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மார்ச் மாதம் அது மோசமடைந்து 30% வரை வீழ்ச்சியடைந்தது.
இந்தத் தொற்று நோய் வேகமாகப் பரவுவதைப் பற்றி முற்றிலும் தொடர்பில்லாத செய்திகளும் பீதியும் அவ்வப்போது பரப்பப்பட்டது. உயிர்ப் பலி வாங்கிக்கொண்டிருக்கும் கொரானா நோய்க்கு எதிராக அதிபர் டிரம்ப் கானூட் அரசனைப் போன்று கோமாளித்தனமாக நடந்து கொண்டார். பல நேரங்களில் அது வியப்பாகவும் இருந்தது. கொரோனா தொற்று நோய்க்கு எதிராக பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டது இயற்கைக்கு மாறாக இருந்தது. இது கொரானாவின் பாதிப்புக்கு எதிராக இருப்பதை விட பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு எதிரான ஒரு அரணாக இருக்கும் என்று கருதப்பட்டது.
உலகளவில் அரசுப் பொது சுகாதார அமைப்புகளின் அதிகாரிகள் ஆட்கள் பற்றாக்குறையால் செய்வதறியாது திகைத்து நின்றனர். நாற்பது ஆண்டுகால தாராளமயமானது அமல்படுத்தப்பட்ட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, நாடுகளில் பொதுச் சுகாதாரமானது சீரழிந்து இந்தக் கொரானா பாதிப்பினை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன. இதற்கு முன்பு சார்ஸ் மற்றும் எபோலா தொற்று நோய்ப் பரவல் அனைத்து நாடுகளுக்கும் முன்னெச்சரிக்கையாக விளங்கியது.
ஆனாலும் அதிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்று உலகம் பாடம் கற்கவில்லை. பெரும்பாலான நாகரீக உலக நாடுகளில் தாராளமயக் கொள்கையால் அரசுகள் சிக்கன நடவடிக்கை,, பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கார்ப்பரேடுகளுக்கு மானியம் கொடுத்தன, உள்ளூர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மக்களின் அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல்நல வசதி முன்னிலையில் இருக்க வேண்டியது பின்னுக்கு தள்ளப்பட்டது.
கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் லாபமில்லாத தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை . 1960களிலிருந்து கொரோனா போன்ற தொற்று நோய்களை பற்றி அறிந்திருந்தும் நோய்த் தடுப்பு முறையில் பெரிய மருந்து நிறுவனங்கள் முதலீடு செய்வதில்லை. பொது சுகாதாரத்திலும் பெரிய மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நோய்களை குணப்படுத்தும் முறையினை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இவைகளுக்கு மக்கள் எவ்வளவு அதிகம் நோயாளிகளாக உள்ளார்களோ அவ்வளவு லாபம். நோய்த் தடுப்பு பங்குதாரர்களுக்கு எந்தவிதமான மதிப்பினையும் ஈட்டுவதில்லை.
இந்த உடல்நலத்திலான வியாபாரத் தன்மையால் மக்களின் பொது சுகாதாரம், அவசரகால உதவி என்பது ஒழிக்கப்பட்டது. தனியார் – பொதுக் கூட்டுச் செயல்பாடு என்பதிலும் நோய்த் தடுப்பு என்பது கவர்ச்சிகரமாக இல்லை. அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் நோய்க்கான தடுப்பு மையத்தின் குழு கலைக்கப்பட்டது, தொற்று நோய்க்கான தேசியக் கவுன்சிலும் கலைக்கப்பட்டு அதே சூட்டில் அதற்கான ஆரய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. அதே போன்று பசுமைவாயுக்களை குறைக்கும் திட்டத்திற்கும் நிதி குறைக்கப்பட்டது.
நான் ஒரு மனித மாண்புடனும் அதே நேரத்தில் மனித உருவமாக இருக்க வேண்டுமானால் கோவிட் 19 என்பது நாற்பது ஆண்டுகாலமாக இயற்கையினை தங்குதைடையற்ற முறையில் கொடூரமாக சுரண்டியதாலும் அதனை மோசமாக நடத்தியதாலும் மனிதனை வஞ்சம் தீர்த்து கொண்டது என்பதைக் கூற வேண்டியுள்ளது.
இது தாராளமயக் கொள்கை குறைந்த அளவு அமலிலுள்ள நாடுகளில் ஒரு நோய்க்கான அறிகுறி. சீனா, தென் கொரியா, தாய்வான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், இத்தாலியை விட இந்தத் தொற்று நோய் கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் ஈரான் இதனை உலகளாவிய நோய் என்பதை மறுக்கும். சார்ஸ் நோய் சீனாவைத் தாக்கிய போது அது சரியாகக் கையாளவில்லை என்பதை அது மறுக்கும். ஆனால் தென் கொரியா போன்று தற்போது சீன அதிபர் வெளிப்படையாகவும் துரிதமாகவும் ஆய்வினை அறிக்கையாக வெளியிட்டார்.
சீனா சிறிது காலதாமதமாக அறிவித்தது (ஒரு சில நாட்கள் இடைவெளி தவிர). சீனாவைப் பொருத்தவரை என்ன சிறப்பு என்றால் அது ஹூபி பகுதியில் உஹான் மைய வட்டத்தோடு இந்தத் தொற்று நோயினைப் பரவாமல் தடுத்தது. இந்தத் தொற்று நோயானது பீஜிங் பகுதிக்கோ அல்லது மேற்குப் பகுதிக்கோ அல்லது தெற்குப் பகுதிக்கோ பரவவில்லை. அதற்காக ஒரு அசுர வேகத்தில் இயங்கியது. அரசியல், பொருளாதார, கலாச்சாரக் காரணத்திற்காக மீண்டும் திரும்புவது என்பது முடியாதது. சீனாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையானது மக்களுக்கான மருத்துவமும் பாதுகாப்புக் கொள்கையும் ஆகும். மேலும் சீனாவும், சிங்கப்பூரும் அரசு அதிகாரிகளின் தனிநபர் கண்காணிப்பு, அதில் கடினமாகவும் நோய் கட்டுப்பாட்டில் ஊடுறுவின.
மொத்தத்தில் பெரிய அளவு சாதனை என்றாலும் அதனைச் சில நாட்களுக்கு முன்னரே செய்திருந்தால் பல உயிர்கள் இறந்ததைத் தவிர்த்திருக்கலாம் என்ற வாதமும் எழுகிறது. இது முக்கியமான தகவல். ஒரு சம்பவம் வீரியத்துடன் ஒரு எல்லைக்கு மேல் வளர்கிறது என்கிறபோது அதனை ஆளுவதில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது, அப்போது நிலைமை மோசமாகிறது (இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும், அது மொத்தத் திரட்சியும் அதில் விகிதமும்). ஆனால் உண்மை என்னவென்றால் டிரம்ப் பல வாரங்களாக காலம் தாழ்த்தினார் அதனால் பல உயிர்கள் பலியாகின.
பொருளாதார வீழ்ச்சி கட்டுக்கடங்காமல் சீனாவிலும் அதற்கு அப்பாலும் செல்கிறது. இந்த பொருளாதார வீழ்ச்சி சங்கிலி போல் கார்ப்பரேட்டுகளை பல துறைகளில் பாதித்துள்ளது, இது நாம் நினைத்தது போன்றல்லாமல் ஒரு முறை சார்ந்த உற்பத்தியின் குறைபாடுகளைக் காட்டுகிறது. இதன் தாக்கம் தொலை நோக்குத் திட்டமாக நெருக்கடி காலத்தைக் குறைப்பது அல்லது பலவகைத் தொழிலில் தொழிலாளிகளின் எண்ணிக்கையினைக் குறைத்து உற்பத்தியினை அதிகரிப்பது (இதனால் பல்லாயிரம் தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்கள்) மேலும் செயற்கை அறிவுத்திறனை பயன்படுத்தி உற்பத்தியினைப் பெருக்குவது என்று நினைக்கலாம். இன்றைய உற்பத்தி சங்கிலி முடக்கம் ஒன்று லே ஆப் முறை அல்லது ஊதியமில்லா விடுப்பு ஆகியவை மேலும் மக்களின் வாங்கும் சக்தியினைக் குறைக்கும். அதன் தொடர்ச்சியாக கச்சாப் பொருள் தேவையினைக் குறைக்கும். இது உற்பத்திக்கான முதலீட்டினை குறைக்கும்.
இந்த நிலையினை எதிர்க்கும் குறைந்த அளவு ஆற்றல் வேறு எங்கோ இருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரம் 2007-08களில் துவங்கி அது பெரும் தாக்கத்தோடு வீழ்ச்சி அடைந்தது. இது வீழ்வதற்கான காரணம் மூலதன சுழற்சியின் நேரத்தினை (அதாவது உற்பத்தியாகி அது நுகர்வதற்கு ஆகும் கால நேரத்தினை சுருக்குவது. இதனால் போட்ட முதலீடு துரிதமாக லாபத்துடன் திரும்பிவிடும்) நுகர்வுக்காகக் கிட்டதட்ட பூஜ்ஜியம் அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நுகர்வுக்கான முதலீடுகள் அதீத அளவு செய்யப்பட்டன. இதற்கு முத்தாய்ப்பாக சுற்றுலாத் துறையினைச் சொல்ல முடியும். சர்வதேச அளவில் சுற்றுலாப் பயனங்கள் 2010 -2018 கால கட்டத்தில் 800 மில்லியனிலிருந்து 1.4 பில்லியனாக அதிகரித்தது. இத்தகைய நுகர்வுக்காக விமான நிலையங்கள் மற்றும் விமானங்கள், தங்கும் விடுதிகள்,
உணவு விடுதிகள், கலாச்சார நாடகங்கள் கலைக்கூடம், விவாத மேடைகள் அமைக்க அதன் கட்டுமானத்திற்கு அபரிமிதமாக முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் இன்று நீரில் மூழ்கிவிட்டன. பல்வேறு விமான நிறுவனங்கள் திவாலாகிவிட்டன, உணவுவிடுதிகள் காலியாக உள்ளன, அதனால் வேலையிழப்புகள் அதிகரிக்கும் நிலை தவிர்க்க முடியாததாகி உள்ளது. இன்று வெளியில் சாப்பிடுவது என்பது முடியாது. ஏனெனில் பார்களும் உணவு விடுதிகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் இந்தப் பெரும் பொருளாதாரச் சமூகத்தில் பெருவாரியான தொழிலாளிகள் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்கிறார்கள்.
அவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறார்கள். காலாச்சாரக் கூட்டங்கள், சாசர் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள், பாட்டுக் கச்சேரிகள், முதலீட்டாளர்களின் கூட்டங்கள் மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகைய ”நிகழ்ச்சி அடைப்படையில்” உள்ள நுகர்வு நமது பட்டறிவால் மூடப்பட்டுள்ளதை காணமுடியும். இதனால் அரசின் வருமானம் சுருங்கிவிட்டது. பள்ளிகளும், பல்கலைகழகங்களும் மூடப்படுகின்றன.
இவ்வாறு கழுத்தறுக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமகாலத்தில் இந்த நுகர்வுக் கலாச்சாரம் இனிமேலும் நடந்தேற வாய்ப்பில்லை. அண்ட்ரே கோர்ஸ் சொல்வது போன்று ” நுகர்வு இழப்பீடு” .(இவ்வாறு மனமுறிந்து போன இளைஞர்கள் வெப்ப மண்டலப் பகுதியில் ஒரு கடற்கரை ஓரம் விடுப்புகளை கழிப்பது போல்) நடக்க வய்ய்ப்பில்லை.
நமக்கு முன்னால் தெரிவது
இதற்கெல்லாம் வைரஸ் நோய்க்கு வர்க்கமோ, நாடோ எல்லையோ கிடையாது என்ற புராணக்கதை சொல்லப்படுகிறது. இது போன்று பல கதைகள் இருந்தாலும் இதில் ஒரு உண்மை உள்ளது. 19ம் நூற்றாண்டில் காலரா நோய் பரவிய போது இதே போன்று கண்டம் கடந்து பரவியது, அது பொதுச் சுகாதாரமும், (இந்த சுகாதாரம் இப்போது ஒரு தொழிலாகிவிட்டது) கழிவுநீர் கால்வாய்களையும் கடந்து அதன் கரு அனைத்து வர்க்கங்களுக்கும் பரவியது அதன் தொட்ர்ச்சி இன்றும் நடக்கிறது. இப்போது இந்த பொது சுகாதாரம் என்பது அனைவருக்குமா அல்லது பணக்காரர்களுக்கு மட்டுமா என்பது தெளிவாக இல்லை.
இன்று பல்வேறு வர்க்கங்கள் உள்ளன, அதன் பல்வேறு விளைவுகளும் பாதிப்புகளும் பலவற்றை அறிகிறோம். பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகளை ”ஒரு சடங்காக” வேறுபடுத்திப் பார்க்கிறோம், இந்நிலையை எங்கும் காணமுடியும். முதலில் பெருவாரியான தொழிலாளிகள் தங்கள் குடும்பங்களில் அதிகப்படியான உடல்நலம் குன்றியவர்களை கவனிக்க வேண்டியுள்ளது, இது பாலினம், இன ரீதியாக, குடியுரிமை சார்ந்ததாக உலகில் பார்க்கப்படுகிறது. இது வர்க்கப் பார்வையுடன் அமைகிறது. உதாரணமாக விமான ஊழியர்களிடையேயும், பலவித தளவாடத் துறையிலும் சொல்லலாம்.
இதில் இன்றைய நவீனத் தொழிலாளர்கள் இந்தப் பொருளாதார வரைசுகளால் முதலாவதாக பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஆபத்துகளும் விளைவுகளும் அது வேலை இழப்பாக இருந்தாலும் அல்லது ஆள் குறைப்பு என்றாலும் இவர்கள் மீது சுமத்தப்படுகிறது. உதாரணமாக யார் வீட்டிலிருந்தே வேலையினைச் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதாகும். இது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுத் தனிமையில் இருக்க முடியும், முடியாது (ஊதியத்துடனோ அல்லது இல்லாமலோ) என்பதைப் போன்று ஒரு பெரும் பிளவினை ஏற்படுத்துகிறது. 1973 ல் நிகராகுவா மற்றும் 1995ல் மெக்சிகோ நாடுகளில் யாரெல்லாம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நான் அறிய முற்பட்டதைப் போன்று இன்று இந்த பாலினம், இனம், குடி என்ற நோய் தாக்கியுள்ளது என்பது வர்க்க பார்வையினைக் காட்டுகிறது.
இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்படுவதிலிருந்து மீளுவதில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று வீராப்பு பேசப்பட்டாலும், யதார்த்தத்தில் தேசிய அரசுகள் அதன் வஞ்சகத்தினைக் காட்டுகின்றன. இன்று அமெரிக்காவிலுள்ள தொழிலாளி வர்க்கமானது (பெரும்பாலும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள், லத்தின் நாட்டவர்கள், கூலி வேலை செய்யும் பெண்கள்) மிக மோசமான நிலையில் நோயினால் தொற்றப்பட்டவர்களை கவனிப்பது என்ற பெயரிலும் (மளிகை சாமன் கடை) திறந்து வைப்பது என்றும் இருக்க வைப்பது, அல்லது அவர்களை வேலையில்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் (உடல்நல இன்சூரன்ஸ்) இல்லை. என்னைப் போன்று ஊதியம் பெறுபவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இது ஒரு நிறுவனத் தலைவர் இதற்கு முன்பு அவர் சாதாரணமாக உலகம் முழூவதும் வானில் பறப்பது போன்று உள்ளது.
உற்பத்தியானது சமூகமயமானதால் தொழிலாளிகளும் தாராளமயக் கொள்கைக்கு ஏற்ப சமூகமயமாக ஆக்கப்பட்டுள்ளார்கள் (இதற்குக் காரணம் ஒன்று தங்களைத் தாங்களே நொந்துகொள்வது அல்லது கடவுள் அருளால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது, அப்படி வந்தாலும் அது இந்த முதலாளித்துவத்தால் வந்தது என்று இந்தத் தொழிலாளிகளுக்கு சொல்ல தைரியமில்லை). ஆனால் தாராளமயக் கொள்கையினை நல்லது என்று சொல்பவர்களும்கூட இன்று இந்த கொரானா பிரச்சனையினை இந்த தாராளமயக் கொள்கை சரியாக அணுகவில்லை என்கிறார்கள்.
இன்று ஒரு பெரிய கேள்வி, எத்தனை காலம் இது தொடரும் என்பதாகும் இந்நிலை ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் தொடரலாம், பொருளாதாரத்தில் சரக்குகள் மதிப்பினை இழக்கும், தொழிலாளிகள் தங்களின் உழைப்பு சக்திக்கு மதிப்பினை இழப்பார்கள். அரசின் தலையீடு இல்லை என்றால் 1930களில் இருந்த அளவு வேலையின்மை என்பது அதிகரிக்கும். ஆனால் இந்த அரசு தலையீடு என்பது தாராளமயக் கொள்கைக்கு எதிரானது. இதன் விளைவானது பொருளாதாரத்திலும் சமூக வாழ்விலும் பன்மடங்காக இருக்கும். அப்படி அந்தத் தலையீடு தீங்கு செய்யாது. சமகால முதலாளித்துவத்தில் எந்த அளவு நுகர்வானது அதீதமாக இருக்கிறதோ, அந்த அளவு அந்த சமுதாயம் விளிம்பு நிலைக்குச் செல்லும்.
இதனை மார்க்ஸ் சொல்லும் போது ”அதீத நுகர்வும், தன்நிலை மறந்த நுகர்வும் இது குறித்துக் காட்டும், இந்த நுகர்வானது எந்த அளவு கட்டுப்பாடற்றும், இயல்பு மீறியும் உள்ளதோ அந்த அளவு அந்தச் சமுதாயம் கீழே தள்ளப்படும்” என்கிறார். இந்தக் கண்மூடித்தனமான நுகர்வானது சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதித்துவிட்டது. இந்த நோயினால் விமான சேவை நிறுத்தப்பட்டது, போக்குவரத்தும் ஸ்தம்பித்தது, இதனால் பசுமைவாயுக்கள் பாதிப்பு குறைந்துள்ளது. வூஹானில் காற்று மாசு படுதல் குறைந்துள்ளது, அதே போன்று அமெரிக்காவிலும் குறைந்துள்ளது. இது போன்று பசுமை நிலங்கள், மலைகள் இவைகள் ஏறி மிதிக்கப்படாமல் இருக்கின்றன. வெனிஸ் நகரில் ஆறுகளில் அன்னப்பறவைகள் மீண்டும் வந்துள்ளன. இந்த அளவிற்கு அதீத நுகர்வானது குறைந்துள்ளதால் இவைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சில தொலை நோக்குப் பயன்கள் இருக்கும். எவரஸ்ட் மலைச் சரிவில் குறைந்த அளவு இறப்பு என்பது நல்லதே. ஆனால் ஒன்றை எல்லோரும் உரக்கச் சொல்ல மறுப்பது என்னவெனில் இந்த வைரஸ் எகிப்தின் பிரமிடுகளை எந்தவித பாரப்ட்சமும் காட்டாமல் தாக்கும்.
இது தொலை தூர நோக்கில் வரப்போகும் காலத்தில் சமூகப் பாதுகாப்பையும் தொழில்துறையினையும் பாதிக்கும். இதனால் அன்றாட வாழ்க்கையின் வேகம் குறையும், ஒரு சிலர் இதனை நல்லது என்று கருதலாம். இன்று அவசரகாலத் தேவைக்காக அறிவுறுத்தப்படும் சமூக இடைவெளி தொடருமானால் அது கலாச்சார மாற்றத்திற்கு இட்டுச்செல்லும். இவைகளெல்லாம் படங்களையும் அல்லது வேறு காட்சிகளையும் வலைதளத்தில் பார்த்து அதற்கு மதிப்பினைத் தெரிவிப்பவர்களுக்கு பயனளிக்கும்.
பொருளாதார நிலையில் பார்த்தால் 2007 – 08 காலத்திலிருந்து நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து வெளியேற்றம் நடந்துள்ளது. இந்த நுகர்வு குறைந்ததால் அந்த நிதியானது சீனாவில் தீவிரமான நிதி மறுசீரமைப்பாகவும் அதோடு சில வங்கிகளின் புனரமைப்பிற்கும், கட்டமைப்பு துறையிலும், தொழில்துறை முதலீடகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு மற்றும் தொழில்துறைக்கான அரசு நிதி ஒதுக்கீட்டின் அளவு மற்ற நாடுகளில் அதிகரிக்க வாய்ப்பில்லை. 2008ல் வங்கிகள் புனரமைப்பிற்காகவும், ஜெனெரல் மோட்டார்ஸ் ஒரு அரசு துறையாக செயல்படவும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒரு
கட்டாயம் இருந்தது. ஒரு வேளை குறிப்பிடும்படியான அளவு தொழிலாளர்களிடமிருந்து வந்த அதிருப்தி மற்றும் எதிர்ப்பினாலும், சந்தையில் விற்கமுடியாததாலும் டெட்ராய்ட்டிலிருந்து செயல்படும் மூன்று கார் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடிவிட்டன.
2007 – 08 களில் சீனா எப்படி உலகப் பொருளாதாரத்தை மீட்டதோ அப்படி இன்று செய்ய முடியவில்லை என்றால், இந்தப் பொருளாதார நெருக்கடியினை அமெரிக்காதான் மீட்க முடியும். ஆனால் இங்குதான் முரண்நகை உள்ளது. இன்றைய சூழலில் சோசலிச அரசியல் பொருளாதாரக் கொள்கைதான் காப்பாற்ற முடியும் என்று பெர்னி சாண்டர்ஸ் கூறுவார். ஆனால் இந்தக் கொள்கைகள் டிரம்ப்பின் தலைமையில் நடைபெற வேண்டும். அப்படி நடைபெற அமெரிக்கா மீண்டும் ஒரு பெருமை மிகுந்த நாடாக இருக்க வேண்டும்.
அப்போது 2008ல் குடியரசுக் கட்சியினைச் சார்ந்த டிரம்ப்பின் கட்சி உறுப்பினர்கள் 2008 மீட்சித் திட்டத்தினை எதிர்த்தனர். அவ்வாறு இன்று எதிர்த்தால் அவர்கள் அன்று செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் டிரம்பின் திட்டத்தினை எதிர்க்க வேண்டும். அவ்வாறு எதிர்க்கப்பட்டால் அவசரகால முடிவாக அமெரிக்காவில் தேர்தலானது ரத்து செய்யப்படும். அப்படி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்கா முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் பேரரசாக இருப்பதுடன், உலகினை அனைத்துக் குழப்பத்திலிருந்தும், போராட்டத்திலிருந்தும், புரட்சியிலிருந்தும் தடுக்கும்.