பாரத் பெட்ரோலியம் (B.P.C.L) என்ற பொதுத்துறை நிறுவனத்தை மோடி அரசு விற்கிறது. தூத்துக்குடி மக்களை வறுத்தெடுத்த ஸ்டெர்லைட் புகழ் இங்கிலாந்து நாட்டுக் குடிமகன் அனில் அகர்வால் குடும்பம் வாங்குகிறது. இத்தகைய விற்பனையை குடியரசு விழுமியங்களை மதிக்கிற எந்த அரசும் செய்யாது. மோடி அரசு ஒரு முடிச்சவிக்கி அரசு என்பதை இதன் மூலம் உறுதி செய்துவிட்டது. மோடி அரசு பெட்ரோலியத்தின் பெயரால் பாரதத்தையே ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்படுத்திவிட்டது எனலாம். தென் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகள்போல் மோடி இந்தியாவை ஆள்கிற மேலைநாடுகளின் மேனேஜிங் ஏஜென்டாக ஆகிறார்.
இந்த விற்பனை பற்றி .வர்த்தக பத்திரிகைகள் மக்களைக் குழப்புகின்றன. லட்சக்கணக்கான கோடி அந்நிய வெலவாணி கிடைப்பதாகப் பசப்புகின்றன. பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குப் பல காரணங்களால் இதன் அரசியல் விளைவை யோசிக்க நேரமில்லை. இடது சாரி அரசியல் கட்சிகளும் அந்த துறை தொழிற்சங்கமும் சொல்லுகிற உண்மை மக்களின் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை எட்டியபிறகு இந்த கூட்டம் எடுக்கும் ஓட்டம்.
பெட்ரோலியமும் உலக அரசியலும்
பெட்ரோலியம் என்பதைப் பல கனிமங்களில் ஒன்று எனக் கருதிவிடலாகாது. இது உலக அரசியலில் பெரும்பங்கு ஆற்றுகிற சரக்குகளில் ஒன்றாகும். உணவு. அணுசக்தி கனிமங்கள், பெட்ரோலிய திர,திடவ. வாயு கனிமங்கள் இம்மூன்றும் ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கவசங்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் அவைகளை இரும்பு அலுமினிய கனிமங்கள் போல் எடுக்கும் உரிமையைக் கண்டவர்களுக்கு விற்றுவிடவோ கொடுக்கவோ கூடாது..
அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தென் அமெரிக்க நாடுகளை அடிமைப்படுத்தியது இன்று வெனிசுலாவை ஏன் வேட்டையாடுகிறது ஏன் மத்திய ஆசிய நாடுகளில் ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுகிறது என்பதை வைத்துப் பார்த்தாலே பெற்றோலிய பொருட்களின் அரசியல் முக்கியத்துவம் புரியும்.
நமது நாட்டு வரலாறும் இதையே போதிக்கிறது.. பிரிட்டன் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலகட்டத்தில் இந்திய பெட்ரோலிய வளங்களைப் பர்மா ஷெல் என்ற பெயரில் பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாண்டு ஜெர்மன் நாட்டுக் கூட்டுத் தனியார் நிறுவனமே எடுக்கும் உரிமை பெற்று இருந்தது.இது தவிர ராக் பெல்லரின் ஸ்டாண்டர்டு ஆயிலும் எண்ணை வர்த்தகம் செய்தது எந்த சுதேசி முதலாளியையும் பிரிட்டிஷ் அரசு எண்ணை எடுக்க விடவில்லை. தொழில் நுட்பங்களை ராணுவ ரகசியமாகவும் மறைத்தது. விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு அந்த தொழிலைத் தேச உடைமை ஆக்க இயலவில்லை. அதற்கு நட்ட ஈடாக அழ வேண்டிய அந்நிய செலவாணி போதாமையும், தொடர்ந்து இயக்க தேவையான தொழில்நுட்பம் அறிந்த கைகளும் நம்மிடமில்லை. சோவியத்யூனியன் கொடுத்த தொழில்நுட்பமே பின்னர் கை கொடுத்தது. 1976ல் தான் பெட்ரோலிய தொழிலை அரசு பொதுத்துறை ஆக்கியது. அதற்கு அந்த மேலை நாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொட்டி அழுத அந்நிய செலாணி எவ்வளவு என்பது தனி வரலாறு.. இன்று மோடி அரசு எண்ணை நிறுவனங்களை மீண்டும் ஏகாதிபத்திய வாதிகள் கையில் ஒப்படைக்கிறார் அதைத் திருட்டுத்தனமாகச் செய்கிறார்.
2003ல் இந்த நிறுவனத்தை விற்க வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. அன்று விற்பனையைத் தடுக்க பொது நல வழக்குத் தொடுத்த போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு நாடாளுமன்ற அணுதி இல்லாமல் அரசாங்க சொத்தை விற்கக் கூடாது என்று தடுத்துவிட்டது. இன்று மோடி அரசு நாடாளுமன்றத்தை கோமாவில் தள்ளி ஆட்சி நடத்துவதால் தீர்ப்பையும் மீறி அனில் அகர்வாலுக்குத் திருட்டுத்தனமாக விற்கிறது.இந்த திருட்டுத்தனத்தை மறைக்க மோடி அரசு நடத்திய நாடகம் வரலாறு காணாத ஒன்று. பெற்றோலிய அமைச்சரும். அரசு முதலீடு மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் இலாகாவும் செய்த கோல்மால்களை வரலாறு மன்னிக்காது.
பாரத் பெட்ரோலியம் தோன்றிய வரலாறு
பாரத் பெட்ரோலியம் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு ஒரு வரலாறு உண்டு அதனை பார்க்கும் முன் இன்று அதன் இன்றைய நிலையை மனதில் கொள்வது அவசியம்.
பாரத் பெட்ரோலியம் லிமிட்டெட்டிற்கு இந்தியாவில் 5 இடங்களில் எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இது தவிர ரஷ்யா,பிரேசில், மொசம்பிக், அரபு எமிரேட், இந்தோநேஷியா, ஆஸ்திரேலியா,ஈஸ்ட் டைமர், இஸ்ரேல் 8 நாடுகளில் முதலீடு செய்து குரூடை சுத்திகரிக்கிறது.
அதன் பங்குகளில் 54. 2 சதம் மைய அரசின் உடைமையாகும், ஆறு சத பங்குகள் காப்பீடு நிறுவனங்களிடம் உள்ளன. 16 சதம் தனிநபர்களுக்குச் சொந்தமாக உள்ளது மீதி பங்குகள் அந்நிய, இந்தியப் பங்கு வர்த்தக சூதாடிகள் கையில் உள்ளன இதனை போரட் போலியோ முதலீடு, மியுட்சுவல் நிதி . பிநோட் முதலீடுகள் ஹெட்ஜ்பண்டுகள் என உயர்வாக அழைப்பார்கள்.
பாரத் பெட்ரோலியம் என்ற நிறுவனம் 1976ல் தேச உடைமை ஆகுமுன் பிரிட்டன் நெதர்லாண்டு ஜெர்மனி நாட்டுத் தனியார் நிறுவனங்கள் இனைந்து பர்மாஷெல் என்ற பெயரில் இந்தியாவில் நிறுவனமாக இருந்தது
பாரத் பெட்ரோலியத்தின் , 2018 புள்ளி விவரப்படி இந்திய உள்நாட்டு பெற்றோலிய குரூடு உற்பத்தியில் 55 சதம் இதன் பங்களிப்பாகும் . அது நிர்வகிக்கும் மும்பை கடல் பகுதியில் உள்ள எண்ணைக் கிணறுகளே இது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் பரஃபின் அதிகம் இருக்கிற பெட்ரோலிய குருடாக இருப்பதால் எரி பொருளாகப் பயன்படுத்துவதற்கு உகந்தது இது தவிர எரிவாயு ஏராளமாக இருப்பதால் இறக்குமதியின் அளவை குறைக்க முடியும். அந்நிய செலவாணி செலவை தவிர்க உதவும் ஒரு தொழிலை அந்நிய நிறுவனங்களுக்கு விற்பது போல் ஒரு மூடத்தனம் எதுவும் இருக்க முடியாது.
மோடி அரசின் நாடகம்
பிரதமர் அலுவலகம், பெட்ரோலிய அமைச்சகம்,. அரசு முதலீடு மற்றும் சொத்துக்களை நிர்வகிக்கும் இலாகா மூன்றும் இந்த விற்பனையை நேர்மையாகச் செய்யவில்லை. மோடியின் அரசாங்க சொத்தை நிர்வகிக்கும் இலாக்கா அரசாங்க சொத்துக்களை நிர்வகிக்கவோ பேணவோ உருவாக்கப்படவில்லை மாறாக. தரகர்கள் மூலம் அரசு சொத்துக்களையும் முதலீடுகளையும் விற்பது மட்டுமே அதனுடைய பணியாகும். இந்த தரகரைத் தரகர் என்றால் பாமர மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதால் அரசு இவர்களைப் பரிமாற்ற ஆலோசகர் (டிரான்சாக்சன் அட்வைசர்) என பெயரிட்டுள்ளது. நவம்பர் 16 2020 அன்று அரசாங்க முதலீடு மற்றும் சொத்தை விற்கும் இலாகாவின் செயலாளர் துகின் கான்ட்ட பாண்டே ஒரு செய்தியை ட்டுவிட்டரில் போடுகிறார் “பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை வாங்க அம்பானி முதல் ரஷ்ய நிறுவனம் வரை பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகப் பரிமாற்ற ஆலோசகர் (தரகர்) தகவல் கொடுத்த தாக ஒரு செய்தியை வெளியிடுகிறார்.
இந்திய பெற்றோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ”பாரத் பெட்ரோலிய என்ற பொதுத்துறை நிறுவனத்தை வாங்குவதற்கு மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன வெகு சீக்கிரம் விற்றுவிடுவோம் என்று சொன்னதை பிட்டிஐ டிசம்பர 2, 2020 தேதியில் வெளியிடுகிறது. வேறு விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார்” என்றும் அத் தகவல் சொல்கிறது இச் செய்தியை வர்த்தக செய்திகள் தரும் இதழ்கள் வெளியிட்டன. இந்த நாடகம் அரங்கேறியபின் வேதாந்தா நிறுவனத்திற்கு விற்க அரசு முடிவு செய்துவிட்டதாக பெட்ரோலிய அமைச்சர் அறிவிக்கிறார் விற்பனை நாடகம் அரங்கேறியது.
மோடி அரசின் முடிச்சவிகித் தனம்
இப் பொழுது மோடி அரசு பிரிட்டன் நாட்டு நிறுவனமான வேதாந்தாவிற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை விற்பதின் மூலம் ஏகாதிபத்திய நாடுகளின் தயவில் வாழ இந்தியாவைத் தள்ளுகிறது எனலாம். இந்த அனில் அகரவால் பிரிட்டன் நாட்டிற்கு விசுவாசமானவர். சில மாதங்களுக்கு முன் இவர் தனது வேதாந்த நிறுவனத்தை இந்தியப் பங்குச் சந்தை பட்டியலிலிருந்து நீக்கப் போவதாக மிரட்டினார். ஸ்டேர்லைட் ஆலையைத் திறக்க வைக்க அது ஒரு மிரட்டலே. அனில் அகர்வால் குடும்பம் ராஜஸ்தானில் கெயிர்ன் இந்தியா என்ற பெயரில் எண்ணை எடுத்து விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது.. 10 ஆண்டுக்குமுன் லண்டனிலிருந்து இயங்கும் இவரது வேதாந்த நிறுவனம் திவலாகும் நிலைக்கு வந்தது இந்த நிறுவனத்தை மீட்க வேதாந்தாவோடு கெயிர்ன் இந்தியாவை இனைத்து லாபம் சம்பாதிப்பதாகக் காட்டினார்.. இன்று வேதாந்தா என்ற பிரிட்டன் நாட்டு நிறுவனம் லாபம் சம்பாதிக்க பாரத் பெட்ரோலியத்தை மோடி தரைவார்க்கிறார். இதைவிட ஆன்ட்டி இந்தியன் செயல் வேறு எதுவுமில்லை !