அழ. கணேசன் எழுதிய அனுபவத் தேடல்கள் - நூல் அறிமுகம் - தமிழ் கவிதை | Anubava Thedalkal Tamil (Poem)book review - https://bookday.in/

அனுபவத் தேடல்கள் – நூல் அறிமுகம்

அனுபவத் தேடல்கள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் 

நூல் : அனுபவத் தேடல்கள்
(குறுங் கவிதைகள்)
ஆசிரியர் : அழ. கணேசன் – 9843264083
பக்கம் : 124
விலை : ₹110
பதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் – 2024

திரு.அழ.கணேசன் அவர்கள் ஆரம்பக் கல்வியை பாதியில் நிறுத்தியவர். தனது சுய முயற்சியில் பத்திரிகைகள், கவிதை, சிறுகதை, களைப் படிப்பதன் மூலம் தன்னை தயார்படுத்திக் கொண்டு, தான் பெற்ற பட்டறிவின் தாக்கத்தில் அவ்வப்போது எழுதியவைகளில் சிலவற்றைத் தொகுத்து இக்கவிதை நூலை காணலாம்.

வாசிக்க நாதியில்லை
யோசிக்க யாருமில்லை
கைப்பேசி வியாதி.
•••

மஞ்சள்கயிறு
————————–
அம்பாளுக்கு அணிகலன்கள் கண்கொள்ளாக் காட்சி
வெறும் மஞ்சள் கயிற்றை
கண்களில் ஒற்றிக்கொண்டாள் மகாலட்சுமி

•••
கடன் வாங்கி மாடிவீடு கட்டியவர்
குடிசை வீட்டில் தூங்கிய தூக்கம்
வேண்டி தினம் கும்பிடுகிறார்.

•••
வனங்கள் அழிக்கப்பட்டன
வானரங்கள் அனைத்தும் நகர்வலம்.

•••
இந்தியில்

மணம் பறந்துவிட்டது
மலர்கள் உதிர்ந்துவிட்டன.
நார் மட்டும் மிதிபட்டன – இறுதியில்.

•••

சாதிக்க மறந்து
சாதிக்காகவே மறைந்து போகிறோம் போதிக்க பல பேர் உதித்த போதும் யோசிக்காமலே வாழ்ந்து மடிகிறோம்.

இப்படியாக அவருடைய அனுபவ முதிர்ச்சியை கவி ஆக்குகிறார். கவிஞர் அழ. கணேசன் புதுக்கோட்டை மாவட்டம் காவேரி நகரை சார்ந்தவர். கால்நடைகள் தரகு வேலையை செய்பவர் இப்படி குறும்பாக்களையும் கவிதைகளையும் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார். ஒன்பது நூல்களில் இது அவருடைய எட்டாவது நூல். எளிய நடையில் அவரின் பார்வையில் இந்த குறும்பாக்கள் அமைந்திருப்பது சிறப்பு.

ஆடர்ந்த கவிஞர்களின் கவிதையை நாம் ரசிக்கிறோம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத விளிம்பு நிலை கவிஞர்களின் ரசனையை புரிந்து கொள்ள அவர்களின் பார்வை கோணத்தை அறிந்து கொள்ள இந்த தொகுப்பு உதவும். இவரின் கடந்த தொகுப்புகளை விட இது செறிவு மிக்கதாக இருக்கிறது.

 

நூல் அறிமுகம் எழுதியர் : 

பாலச்சந்திரன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *