அப்பா சொன்ன கதைகள்

இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” என்ற கதை புத்தகம் சற்று தனித்துவமானது. கதை சொல்லுகிற விதமே 6முதல் 12வயது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி கேள்வி கேட்க வைத்துவிடுகிறது இதைவிட கதை கற்பனையல்ல அன்மை வரலாற்றில் சாதனைபடைத்த 11 பெண்களின் துணிவுகள் பச்சாதாபத்தை தூண்டும் சில பொருட்கள் மற்றும் சில படைப்புகள் ஆகியவைகளே,

சிறார்களுக்கான இலக்கியத்தின் உட்கருக்கள் பற்றிய சர்ச்சைக்கு இது முற்றுப்புள்ளிவைக்கிறது.படைப்பாளிகளுக்கு மாடலாக உள்ளது. புராணங்களும், வியக்கவைக்கும் கற்பனைகளும் சிறார்களை ஈர்க்கும் இலக்கியமாக இருப்பதைவிட மனதை பக்குவப்படுத்தும் எழுத்தின் அவசியத்தை இந்த புத்தகம் உணர்த்துகிறது. .

ஒரு குழந்தையின் 6முதல் 12 வயது பருவகாலம் மிக முக்கியமானது என்பதை சொல்லித் தெறியவேண்டியதில்லை அப்பருவத்தில்தான் தேடுதல் ஆர்வம், தன்நம்பிக்கை,(இளம்கன்று பயமறியாது என்று சொல்வதை அறிவோம் ) பச்சாதாபம்,விருப்பு, வெறுப்பு போண்ற உளவியல் பாங்குகள் துளிர்விடுகின்ற கட்டமாகும்.

இவ்வயதில் கண்டும் கேட்டும் பெறுகிற போதனைகளே ஒருவரின் எதிர்கால அளவு கோல்களாக மாறிவிடுகின்றன. தேடுதல் ஆர்வம், தன்நம்பிக்கை பச்சாதாபம், இவைகளை தூண்டுகிற போதனைகள் கிடைக்காமல் போனால். தெய்வ நம்பிக்கை இனஉணர்வு.சாதி உணர்வு உடலுழைப்பு கேவலம் போன்ற அருவருப்புகளும் எளிதில் பதிந்துவிடுகின்றன.

இதனை உணர்ந்த பாரதி 19வயதை தாண்டிய மானுடத்தை தேடிச் சோறு தின்று மூப்பெய்தி மாயும் மானுட ரகம், சூதும் பாவமும் பண்ணும் படிச்ச மானுட ரகம், தானும் மானுடமும் பயனுற வாழும் ரகம்.என்று மூன்றாக பிரித்து வைத்தான்,

தோல் எந்த நிறமாக இருந்தாலும் ,மண்டை ஓட்டின் அளவு கோல் எதுவாக இருந்தாலும் பச்சாதாபம் கொண்ட மூன்றாம் ரகமானுடம் ஓரளவு பரவலாக இருப்பதால்தான் மானுடம் பேரழிவு ஆயுதங்களை சந்தித்து சாம்பலானாலும் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. மானுடத்தை பேரழிவு ஆயுதங்கள் புதைக்குமுன் பேரழிவு ஆயுதங்களை புதைக்கும் இயக்கம் வெவ்வேறு வடிவங்களில் வலுத்துவருவதையும் காண்கிறோம். இந்த பின்ணனியை மனதில் கொண்டால் கதைகளாக இருக்கும் இ.ப.சிந்தனின் வரலாற்றின் அருமையை மூத்தோர் உணர்ந்து குழந்தைகளை வாசிக்கவைப்பர்.

முதல்கதையான ஹேப்பி பெர்த்டேடூயூ கருப்பர்கள் வெள்ளையர்களால் அடிமைபடுத்தப்பட்டு அடைந்த துயரங்களை கூறுகிறது. .இந்த கதையோடு 4வது மணிஹேய்ஸ்ட் பெல்ல சாவ் பாடலின் கதை மற்றும் 5வது ரேசாபர்க்கின் சத்தியாகிரகம் இந்த மூன்று வரலாற்று நிகழ்வுகளை ஆசிரியர் சொல்லும் விதம் குழந்தையின் மனதில் பதிந்துவிடுகிற உணர்வே பிற்காலத்தில் வெள்ளையனாக இருப்பவர்களை நிறவெறியை குற்றமாக கருதவைக்கும். மத போதகர்கள் போதிக்கும் ஒருவரின் பாவச்செயலே பிறப்பை தீர்மாணிக்கிறது என்ற பொய்யை எதிர்த்து கருப்பர்களை போராடவைத்துவிடும். உழைப்பவர்கள் சிரமத்தை தாங்குவதற்கு பாடிய பாடலை பற்றிய ஒரு துளி வரலாறு மனதில்பதிந்தால் பிற்காலத்தில் உடலுழைப்பே மானுட அறிவின் ஊற்றுக்கண் என்ற பார்வை வலுப்பெறும். . மூளையும் விரலும் இனைவதின் அவசியத்தை உணர்வர் .சோம்பேரி அல்லது முன்னோர் சொத்தில் வாழ்பவன் மூளை பிசாசுகளின் வேலையகம் (லேசிமென் பிரெயின் டெவில்ஸ் ஒர்க்ஸ்ஷாப் ) என்ற ஆங்கில பழ மொழியின் உட் பொருளை எளிதில் உணர்வர். பொதுநலனை பேண ஒத்துழைப்பு மூலமே சுயநலத்தை பேணமுடியும் என்ற உண்மையை உணர்வர்

(குறள் 140,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.)

அச்சம் மடம் பயிர்ப்பு ஆகிய உணர்வுகளுக்கு பலியிடப்படும் பெண்குழந்தையின் மனதில் துணிவுடமை, துணைமை, தூய்மை இம்மூன்றையும் விதக்கும் கதைகளாக . யுத்த காலத்தில் குண்டுமழையிலிருந்து நூல்களை காப்பாற்றிய ஆலியா என்ற நூலகரின்சாதனை சேவை செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியை உணர்த்தும் பிளாரன்சு நைட்டிங்கேல். குழந்தை பருவ தேடுதல் உணர்வு மேலாங்கிதால் புதைபடிமவியலாளரான மேரி ஆனிங் போண்றோரின் வாழ்க்கைகள் அப்பா மகள் உரையாடலாக குத்து வசனங்களாக சொல்லப்படுகின்றன.

19ம் நூற்றாண்டில் உடன் கட்டை யேற விதிக்கப்பட்ட இந்து மார்க்க பெண்ணின் விடுதலைக்கு அவசியமான கல்விக்கு துணிந்து பள்ளிக்கூடம் அமைத்த சாவித்திரி பாய் புலேயின் சரிதை, யுத்தத்தால் அகதிகளான ஒருகுடும்பத்தின் ஒரு பூனையின் சரிதை அணுக்குண்டிற்கு பலியான சிறுவனின் சைக்கிள் இவையனைத்தும் உரையாடலாக சொல்லும் விதத்தால் அன்பெனும் உணர்வினை பகைமையற்ற அணுகுமுறையை குழந்தை மனதிலே விதைத்துவிடும்

இன்றைய இந்தியா மத வெறி, சாதி ஆணவம், மொழி திணிப்பு வெறி இவைகளால் சிரமப்படுவதை தாண்டிட விரும்பும் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளோடு சேர்ந்து படிக்க வேண்டிய கதைகளாகும் குழந்தைகள் தானாக படிக்குமென்று புத்தகத்தை வாங்கினால் போதாது.

நூலின் தகவல்கள்: 

நூல்: அப்பா ஒரு கதை சொல்றீங்களா…

ஆசிரியர்: இ.பா.சிந்தன்

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்

விலை: ₹140.00

தொடர்புக்கு:  44 2433 2924

 

அறிமுகம் எழுதியவர்: 

வி.மீனாட்சிசுந்தரம்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *