Appa Oru Kathai Solringala Book Review அப்பா ஒரு கதை சொல்றீங்களா

இ.பா சிந்தன் அவர்களின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…”

எழுத்தாளர் இ.பா சிந்தன் அவர்களின் அப்பா ஒரு கதை சொல்றீங்களா… இருபது சாதனையாளர்களின் கதைத் தொகுப்பு…

அப்பா மகளுக்கு கதை சொல்வதும் மகள் அப்பாவுக்கு கதை சொல்வதும் நடைமுறை வாழ்வில் நான் உணராத ஒன்று. அதன் காரணமாகவே இந்த புத்தகத்தின் தலைப்பு ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா’ என்பது என்னை கவர்ந்தது. இந்த கதையை படிக்கும்போது மகளான யாநிலா இடத்தில் என்னையும் என் தந்தை எனக்கு கதை சொல்வது போல நினைத்துக் கொண்டேன்.

இந்த நூலைப் பற்றியும் வரலாறு பற்றியும் படிக்க ஆர்வத்தை கொடுத்த பஞ்சுமிட்டாய் பிரபுவின் வரிகள் என்னை கதைக்குள் கொண்டு செல்ல வைத்தது.
ஒவ்வோர் கதைக்கும் ஒவ்வோர் வரலாறும் நாம் அறிந்திடாத எத்தனையோ சாதனையாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் ‘Happy birthday to you’ பாடல் உருவான கதைப் பற்றி எழுத்தாளர் சிந்தன் எழுதியிருக்கிறார். குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை பாடல் மூலமாக முதலில் கொண்டு வந்தது பற்றியதாகும் அந்த கதை…

Nightingale என்றால் Nightingale is a song bird இது மட்டும் தான் எனக்கு தெரியும் ஆனால் பிரான்ஸ் நாட்டின் நைட்டிங்கேல் என்றவர் எப்படி செவிலியர் ஆனார், இன்று இந்தியாவிலும் செவிவிலியர் இருக்க காரணம், உலக செவிலியர் தினம் யாருக்காக யாரின் நினைவாக கொண்டாடுகிறோம் என பலவற்றை அறிந்தேன்.

இன வேற்றுமைகள் (Racism) என்ற தீவிர இனவெறி இருந்தபட்சத்தில் ஆப்பிரிக்க்கா கருப்பின மக்களை அடிமைப்படுத்தியது, அவர்கள் விடுதலை அடைந்த பின்னரும் அவர்களை துன்புறுத்தியதும் மரங்களின் தாய் வங்காரி மாத்தாயின் கதையில் தெரிந்து கொள்ளலாம் அதில் ஆப்பிரிக்காவின் வங்காரி மாத்தாய் இயற்கைக்கு கொடுத்த முக்கியத்துவம், மரங்களை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சிகளை அறியலாம். பின் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வீசிய குண்டு வீச்சால் ஹிரோஷிமாவின் மூன்று வயது சிறுவன் ஷின் இறந்து போனான். ஷின்னின் நினைவாக அவன் சைக்கிள் மட்டுமே ஹிரோஷிமா அமைதி மியூசியத்தில் உள்ளது.

இன்று எல்லோரும் காணும் அனிமேசன் மூவி எப்படி உருவானது, Alice woderland, Cinderalla என பல அனிமேசன் படங்களுக்கு மெயின் ஆர்டிஸ்ட்,அனிமேசன் உலகின் நாயகி மேரி ப்ளேரின் கதை மூலம் தெரிந்துகொள்ளலாம்.இப்படி சாதித்த பல பெண்களுடைய சாதைகள் இந்நூலில் உள்ளது.

இந்த நூலில் உலக புகழ்பெற்ற பெண் சாதனையாளர்கள் பற்றியும் இயற்கைக்கும் மனிதத்திற்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் அறியலாம்.

இந்த நூலை பெற்றோர்களும் வாசித்து கதைப்போலவே உங்கள் குழந்தைகளுக்கு சொன்னால் கதை சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த நூலை குழந்தைகள் உலகத்திற்கு தந்த எழுத்தாளர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான நன்றிகள்….

நூலின் தகவல்கள்: 

நூல்: அப்பா ஒரு கதை சொல்றீங்களா

ஆசிரியர்: இ.பா.சிந்தன்

பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை: 140.00

தொடர்புக்கு:  44 2433 2924

 

எழுதியவர்: 

சங்கீதா கந்தன் 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 2 Comments

2 Comments

  1. D.P.Parameswari

    நல்ல அறிமுகம்.‌வாழ்த்துகள் தோழர். தொடர்ந்து வாசிங்க. எழுதுங்க தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *