appa oru kathai solringala அப்பா ஒரு கதை சொல்றீங்களா

எழுத்தாளர் தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு அப்பப்பா இப்படி ஒரு புத்தகம் எழுதுவதற்கு மிகப்பெரிய அனுபவத் தேடல்கள் தேவை இருந்திருக்கும். ஆகச்சிறந்த படைப்பு! உலகை தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு தன்னுடைய தேடலை பொக்கிஷமாக்கிக் கொடுத்துள்ளார். இனி வாசிக்க வேண்டியவர்களின் பாடு தான்.

நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன் | வினவு
                ஆசிரியர் : இ. பா. சிந்தன்

கிட்டத்தட்ட 20 கதைகள். 20ம் அறிவியல் பூர்வமான, மக்களுடைய சிந்தனையை தட்டி எழுப்புகின்ற கதையாகவே இருக்கின்றது. நம்ம சாவித்திரிபாய் பூலேவிலிருந்து, ஹிரோஷிமா அமைதி மரத்தின் கதை, வங்காரி மாதாவின் கதை, நம்ம நாட்டினுடைய கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜ் அவர்களுடைய கதை, உலகின் முதல் காரை ஓட்டிய பெண், அகதி பூனையின் கதை, பேருந்து போராளி ரோசா பாக்ஸ்ன் கதை இப்படி 20 உலக பிரபலமான அறிவியல் சிந்தனை வளர்ந்த மனிதர்களின் வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்து குட்டிக் குழந்தைகளும் படிப்பது போன்று இந்த புத்தக அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக அவர் தன்னுடைய குழந்தையோடு கதை சொல்லும் விதமாக, உரையாடல் நடத்தும் விதமாக இதை எழுதி இருக்கிறார் அது மிகப்பெரிய சுவாரசியம்.

20 கதைகளும் அப்பப்பா மிகவும் கலக்கல் குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் பாஸ்ரா நூலகம் ஆலியா என்னும் நூலகரின் கதை இங்கு குறிப்பிட்டு சொல்லலாம். 2003இல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்க இருக்கிறது என்கிற செய்தி தெரிந்தவுடன் மிகவும் பதற்றமான ஆலியா அவர்கள் நூலகராக இருக்கிறாரே அந்த நூலகத்தினுடைய புத்தகங்களை எப்படி பாதுகாத்தார் என்பதுதான் மிகப்பெரிய சுவாரசியம். அந்த ஈராக் நாட்டில் படிப்பது என்பதே பெண்களுக்கு முடியாது. ஆனால் அதையெல்லாம் போராடி படித்து ஒரு நூலகத்தில் நுழைந்து நூலகராகவே ஆன கதை என்பது மிகச் சிறப்பாக இருக்கு. அவர் நூலகராக இருப்பதற்கு முன்பு வரை அந்த நூலகத்தில் நூல்களை வீட்டுக்கு எடுத்து வர முடியாது. அவர் நூலகத்தில் நுழைந்து படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது நூலகம் மூடும் பொழுது தான் அவர் வெளியே வருவார் அப்போது நூல்களை வீட்டிற்கு எடுத்து வர முடியவில்லை என்று வருத்தப்பட்டவர். அவர் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார் என்பது அந்தக் கதையினுடைய வாசிப்பில் தெரியும் நமக்கு. அதனால் அவர் நூலகர் ஆனவுடன் செய்த முதல் வேலை புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துப் போக அனுமதி கொடுத்தார். விளைவு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம். அதனுடன் போர் வந்த சூழலில் புத்தகங்களை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் ஆகச் சிறந்த வியப்பு. ஆம் புத்தகங்களை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வார் அவர் ஒருவராகவே. பிறகு வீட்டில் வைக்க இடமில்லை எல்லா இடமும் புத்தகங்களாக நிரம்பி வழிந்தவுடன் மீண்டும் புத்தகங்களை தன்னுடைய தெரிந்தவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்து வைக்கிறார். அதன்பிறகு புத்தகங்கள் மீதம் இருக்கும் புத்தகங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய நூலகத்தின் பின்புறம் இருக்கிற வீட்டில் ஒரு வேன் இருக்கிறது. அந்த வேனில் புத்தகங்களை அடுக்கி அந்த வேதனை சுற்றிக் கொண்டே இருக்க வைக்கிறார். ஓரிடத்தில் நிற்கவில்லை இப்படியே காப்பாற்றி போர் முடிந்த பிறகு பார்த்தால் கிட்டத்தட்ட 30,000 புத்தகங்களை பாதுகாத்துள்ளார். நூலகர் ஆழியா அவர்கள் நினைத்தது போலவே பாசுரா நூலகத்தில் ராணுவ வீரர்கள் குண்டு போட்டனர். அவர் மட்டும் அந்த நூல்களை காப்பாற்றாமல் போயிருந்தால் இன்றைக்கு என்ன நிலைமை என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய விஷயம் அப்பப்பா கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்களால் தான் இந்த உலகம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பிற்போக்குத்தனம் பெண்களை எப்பொழுதுமே பின்னுக்கு இழுக்கிற வேலையைத்தான் செய்கிறது.

தோழர் இ. பா. சிந்தன் அவர்கள் எழுதிய இந்த நூல் மிகப்பெரிய வரலாற்று பதிவு. குழந்தைகள் மிக அழகாக படிக்கலாம். அந்தக் குழந்தைகளுக்கு இந்த கதைகளை வீட்டில் சொல்லித் தரலாம். அவ்வளவு சிறப்பான நூல்! ரொம்ப நன்றி தோழர்!! ப்பா இப்படி எல்லாம் எழுதணும்னா அதுக்கு அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்!!! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழர்!!!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

 

             நூலின் தகவல்கள் 

நூல் : “அப்பா ஒரு கதை சொல்றீங்களா”

ஆசிரியர் : இ. பா. சிந்தன்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் பாரதி புத்தகாலயம்

ஆண்டு : டிசம்பர்2023

விலை : ரூ.140

 நூலைப் பெற : 44 2433 2924 thamizhbooks.com

 

           அறிமுகம் எழுதியவர் 

        இரா. சண்முகசாமி

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *