அப்பா சிறுவனாக இருந்த போது, (When daddy was little boy) இந்த நூல் சோவியத் எழுத்தாளர் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய நூல். இதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் நா. முகமது செரிபு. இதனுடைய மறுவரைவு ஈஸ்வர சந்தான மூர்த்தி அவர்கள். ஓவியங்கள் ராம்கி. இதன் மொத்தப் பக்கங்கள் 128. இதில் 21 அப்பாவின் கதைகள் உள்ளன. இதன் விலை ரூ.70 பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
”சிறுவனாகிய அப்பா அந்தப் பக்கத்தை முடித்துவிட்டு அடுத்தப் பக்கத்ததையும் படிக்க தொடங்குவார். தனக்கு எப்பொழுதும் சோர்வூட்டக்கூடிய, அலுப்புத் தட்டக் கூடிய பாடப்புத்தகங்களை எடுத்து, வீட்டுப் பாடங்களை செய்யத்தொடங்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஆர்வமூட்டும், கதைப்புத்தகத்தை வெறுமனே கீழே வைக்க சிறுவனாகிய அப்பாவால் ஒரு போதும் முடிந்ததில்லை.”
இப்படி அவர் சொல்லுவதிலிருந்தே எப்பேர்ப் பட்ட வாசிப்பாளர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா. இப்படியான அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சிறுவனாக அப்பா எழுதுவது என்றால் பிடிக்கவே பிடிக்காது. எழுதினாலும் எழுத்துகள் மண்டை மண்டையாக இருக்கும். அப்படி எழுதுவதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் இந்த கதைகளில் கதைக்கிறார்.
இந்த கதைகளை நாம் குழந்தைகளுக்கு சொல்ல முடியும். அத்தோடு நம்ம கதையும் இணைத்துச் சொல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அது மட்டுமல்ல நாமும் இது போன்ற கதைகளை எழுதுவதற்கும் வாய்ப்பு வழங்குகிறது. இந்த புத்தகத்தை ஒவ்வொரு அப்பாவும் வாசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அத்தோடு தன்னுடைய குழந்தைகளாக இருக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தையும் வெக்கப்படாமல் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவமானங்கள் இயல்பானது. வாழ்க்கை பயணத்தில் அவை வந்து செல்லும் ஒரு பகுதி என்பதை நம்ம வீட்டு குழந்தைகள் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.
நான் எங்கள் பள்ளி மாணவர்களிடம் இந்த கதைகளில் இரண்டு மூன்று சொன்னேன். அப்ப எங்குப்பாக்கெல்லாம் நிறைய பில்டப் பண்ணுராங்க சார். நாங்கலெல்லாம் அந்த காலத்துல அப்படி படிப்போம்முன்னு. ஆனா உண்மையில நீங்க சொன்னமாதிரிதான் இருந்திருப்பாங்க இல்லையா? உண்மைதானே. இப்ப நாம பிள்ளைககிட்ட நம்ம செய்த சேட்டைகள், அழிச்சாட்டியங்கள், குறும்புகள், வெற்றிகள், தோல்விகள், அவமானங்கள், கஷ்டங்கள், சந்தோசங்கள், சண்டைகள், கோபங்கள் சொல்லும் போது குழந்தைகளுக்கு இவை எல்லாம் எதார்த்தம் தான் என்பதை அறிந்து வாழ நாம் வழிகாட்டியாக இருக்கலாம்.
இதற்கு இந்த புத்தகம் நமக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். இது அப்பா சிறுவனாக இருந்தபோது… இந்த புத்தகத்தை ஆசிரியர்கள், அம்மாக்கள் வாசித்தால் அம்மா சிறுமியாக இருக்கும் போது என்று தங்கள் அனுவங்களை கதைகளாக சொல்ல வாய்ப்புள்ளது. அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது மிகச் சிறந்த நூலாக அமையும்.
மொ. பாண்டியராஜன்
மதுரை.
நூலின் பெயர் : அப்பா சிறுவனாக இருந்த போது
பக்கங்கள் 128.
விலை ரூ.70
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் தேவை தொடர்புக்கு : 044-24332424
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்