ஏப்ரல் 04 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ல் வில்லியம் க்ளூவே (Economist Paul William Glewwe Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- பால் வில்லியம் க்ளூவே – முனைவர் பு. அன்பழகன்

பால் வில்லியம் க்ளூவே (Paul William Glewwe) ஏப்ரல் 4, 1958இல் பிறந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். கல்விப் பொருளாதாரம், வளரும் நாடுகளில் வறுமை, சமத்துவமின்மை மற்றும் பயன்பாட்டுப் பொருளாதார அளவீடுகள் ஆகியவற்றில் அவரது ஆய்வு ஆர்வங்களாக காணப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

அவர் வளரும் நாடுகளில் கல்விக் கொள்கை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டது முழுமையாக நிறைவுபெறாததாக உள்ளது என்கிறார். நிர்வாகக் கட்டமைப்புகள், சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது வரை, கல்வித் துறையில் மாணவர் படிப்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பான பல அம்சங்களை ஆய்வு செய்தார், இதில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் நிலவும் கல்வி சாதனையில் பெரும் எற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன என்றார்.

வில்லியம் க்ளூவே வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு, சமத்துவமின்மை மற்றும் வறுமை குறித்தும் அவர் சர்வதேச அளவில் ஆராய்ச்சியினை செய்துள்ளார். வளரும் நாடுகளில் வீட்டு மற்றும் தனிநபர் நடத்தை மற்றும் நலன் குறித்த பலவேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். பிரேசில், சீனா, கானா, ஹோண்டுராஸ், ஜமைக்கா, ஜோர்டான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மொராக்கோ, பெரு, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைப் பற்றிய பொருளாதார சிக்கல்கள் குறித்து வில்லியம் க்ளூவே ஆராய்ச்சி செய்துள்ளார்.

ஆதாரம்: www.povertyactionlab.org; www.younglives.org.uk; www.apec.umn.edu; www.press.uchicago.edu

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *