ஏப்ரல் 05 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் வெஸ்ட் (Economist Edward West Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் வெஸ்ட் – முனைவர் பு. அன்பழகன்

எட்வர்ட் வெஸ்ட் (Edward West) ஏப்ரல் 5, 1782இல் பிறந்து ஆகஸ்ட் 18, 1828இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞரான இவர், இந்தியாவிற்கான பிரித்தானிய நீதிபதியாகவும் பணியாற்றினார். எட்வர்ட் வெஸ்ட் நில சாகுபடியில் குறைந்த செல் விளைவு விதியையும், வேறுபட்ட வாடகைக் கோட்பாட்டினையும் அறிமுகப்படுத்தினார். வெஸ்ட் நிலத்திற்கு மூலதனத்தைப் பயன்படுத்துதல் குறித்து தனது கட்டுரையில் நிலத்தின் நிகர உற்பத்திக்கும் அதன் மொத்த உற்பத்திக்கும் உள்ள விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது எனக் குறிப்பிடுகின்றார்.

உழைப்பின் உள்ளீடானது அடுத்தடுத்து மூலதன மற்றும் நில உள்ளீட்டு அளவிற்குச் சமமாக அதிகரிக்கும்போது வேளாண் உற்பத்தியானது குறைந்த அளவிற்கு அதிகரிக்கும் ஆனால் இந்த உள்ளீட்டின் விளைவினால் நிலத்தின் வளம் குறையும் என்பது வெஸ்டினின் கருத்தாக உள்ளது. அனைத்து வளங்களின் உள்ளீடும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அதிகரிக்கும் போது, வேளாண் உற்பத்தியின் வெளியீடு குறைந்த விகிதத்தில் அதிகரிக்கிறது என்று வெஸ்ட் குறிப்பிடுகிறார்.

வெஸ்டின் புகழ் பெற்ற ஆய்வுக் கட்டுரையான Impolicy of any great restriction on the importation of corn என்பதை டேவிட் ரிக்கர்டே வெகுவாக பாராட்டியுள்ளார். 1825இல் Price of Corn and Wages of Labour என்ற ஆய்வுக் கட்டுரை வழியாகவே குறைந்த செல் விளைவினை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1826இல் கூலி நிதி என்பதினைப் பற்றி திறனாய்வுடன் விமர்சனம் செய்துள்ளார்.

ஆதாரம்: www.hetwebsite.net; www.encyclopedia.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *