ஏப்ரல் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் மில் (Economist James Mill Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஜேம்ஸ் மில் – முனைவர் பு. அன்பழகன்

ஜேம்ஸ் மில் (James Mill) ஏப்ரல் 6, 1773இல் பிறந்து ஜூன் 23, 1836இல் மறைந்த ஸ்காட்டிஷ் தத்துவஞானி, வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். புகழ்பெற்ற பயன்பாட்டுச் சிந்தனையாளர், பொருளியல் அறிஞரான ஜான் ஸ்டூவர்ட் மில் இவரது மூத்த மகன் ஆவர். ஜேம்ஸ் மில் தத்துவாதத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் முன்னணி நபராக அவர் அறியப்படுகிறார் இவருடைய தத்துவாதத்தைப் பயன்பாட்டு வாதம் (Utilitarian) என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல், அரசியல், பொருளாதாரம் மனிதநேய அணுகுமுறை அடிப்படையில் பயன்பாட்டுவாதத்தை மில் விளக்கியுள்ளார்.

மில்லின் ஆர்வங்களின் வரம்பு விரிவானது, அவரது இரண்டு தொகுதிகள் கொண்ட மனித மனதின் நிகழ்வுகளின் பகுப்பாய்வானது (Analysis of the Phenomena of the Human Mind) கல்வி மற்றும் உளவியலை உள்ளடக்கியது. அவர் இந்தியா ஹவுஸில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மில், அவருடைய முக்கிய வரலாற்றுப் படைப்பாக, பிரிட்டிஷ் இந்தியாவைக் கைப்பற்றியதற்கான முதல் முழுமையான வரலாற்று விளக்கமாகும். மில் இந்தியாவின் பிரிட்டிஷ் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தார், மேலும் இந்தியா ஹவுஸில் தனது 17 ஆண்டுகளில், காலணியில் அரசாங்க அமைப்பை முழுமையாக சீர்திருத்திற்கு உதவினார்.

மில்லின் வரலாற்றுப் பதிவானது, இந்திய நாகரிகம் குறித்த வரலாற்றின் கடுமையான பயன்பாட்டுப் பகுப்பாய்வு, இந்திதய துணைக்கண்டம் நிரந்தரமாகப் பின்னோக்கி மற்றும் வளர்ச்சியடையாதது என்ற பிம்பத்தை ஐரோப்பிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியது. இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த அவரது வெளிப்பாடானது கடுமையானவை. அவரது குறிப்பிடத்தக்கப் புத்தக வெளியீடுகள் Money and Exchange (1808); History of British India (1818 மற்றும் 1858); Government (1820); Elements of Political Economy (1821); Liberty of the Press (1823) போன்றவை ஆகும்.

ஆதாரம்: www.britannica.com; www.plato.stanford.edu; www.en.banglapedia.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *