ஆல்பர்ட் ஓட்டோ ஹிர்ஷ்மேன் ( Albert Otto Hirschman) ஏப்ரல் 7, 1915இல் பிறந்து டிசம்பர் 10, 2012இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ஹிர்ஷ்மேனின் முக்கிய ஆய்வு ஆர்வங்களாகப் பொருளாதார மேம்பாடு, பன்னாட்டுப் பொருளாதாரம், இத்துடன் சமூகவியல் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் காணப்படுகின்றது.
அவரது முதல் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பானது, வளர்ச்சி பொருளாதாரத் துறையினைச் சார்ந்ததாகும். சமநிலையற்ற வளர்ச்சியின் அவசியத்தை ஹிர்ஷ்மேன் வலியுறுத்தினார். வளரும் நாடுகளில் முடிவெடுக்கும் திறன்கள் குறைவாக இருப்பதால், வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வளங்களைத் திரட்டுவதற்கும் ஏற்றத்தாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
பொருளாதார மேம்பாடு ஒவ்வொரு சூழ்நிலையிலும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், விரும்பிய முடிவுகளை அடைய உள்நாட்டு வளங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஹிர்ஷ்மேன் வலியுறுத்தினார். உள்ளூர் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், ஒரு சீரான கோட்பாட்டுக் கட்டமைப்பைத் திணிப்பது, பொருளாதார வளர்ச்சியினை பெருமளவிற்குப் பாதிக்கும் என்றும் ஹிர்ஷ்மேன் வாதிட்டார். ஹிர்ஷ்மேனின் forward and backward linkage (முன்னோக்கிய மற்றும் பின்தங்கிய இணைப்புகள்) என்ற கருத்தினை அறிமுகப்படுத்தினார் இது பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும்.
ஆதாரம்: www.ias.edu ; www.hetwebsite.net ; www.encyclopedia.com ; www.dbpedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
