சர் ஜான் ரிச்சர்ட் ஹிக்ஸ் (John R. Hicks) ஏப்ரல் 8, 1904இல் பிறந்து மே 20, 1989இல் மறைந்த பிரித்தானிய நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொது பொருளாதார சமநிலைக் கோட்பாட்டினை அறிமுகம் செய்து முன்னோடியான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மேலும் 1972இல் கென்னத் ஜே. ஆரோவுடன் சேர்ந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். தொழிலாளர் பொருளாதாரம், பயன்பாடு மற்றும் விலைக் கோட்பாடு, பேரியல் பொருளாதாரம், நலன்சார் பொருளாதாரம் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பினை ஹிக்ஸ் வழங்கியுள்ளார். Elasticity of Substitution (பதிலீட்டு நெகிழ்ச்சித்தன்மை) என்ற கத்துருவினை அவர் அறிமுகப்படுத்தினார்.
ஹிக்ஸின் முக்கிய நான்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளாக அறியப்படுவது – முதலாவதாக, காரல் மார்க்ஸ் நம்பியதற்கு மாறாக, உழைப்பைச் சேமிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம் வருவாயில் உழைப்பின் பங்கைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டினார். இரண்டாவதாக, ஜெ.எம். கீன்ஸின் முழுமையான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு பொருளாதாரம் சமநிலையில் இருக்க முடியும் என்பதை வரைபடமாகச் சித்தரிக்கும் IS-LM வரைபடத்தினை அவர் உருவாக்கினார்.
மூன்றாவதாக, மதிப்பு மற்றும் மூலதனம் (1939) என்ற தனது புத்தகத்தின் மூலம், மதிப்புக் கோட்பாடு பற்றி பொருளாதார வல்லுநர்கள் நம்பும் பெரும்பாலானவற்றைப் பயன்பாடு அளவிடக்கூடியது என்ற அனுமானம் இல்லாமல் அடைய முடியும் என்பதை ஹிக்ஸ் காட்டினார். நான்காவதாக, அரசாங்கக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முறையை அவர் வகுத்தார். தோல்வியுற்றவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை வெற்றியாளர்கள் ஈட்டிய லாபங்களுடன் ஒப்பிடக்கூடிய இழப்பீட்டுச் சோதனையை அவர் முன்மொழிந்தார். லாபம் ஈட்டுபவர்கள், கொள்கையளவில், இழப்பார்களுக்கு ஈடுசெய்ய முடியும், அவர்கள் உண்மையில் மற்றும் நேரடியாக ஈடுசெய்யாவிட்டாலும் கூட கொள்கை மாற்றத்தின் வழியாகத் திறமையாகச் செயல்படுத்த முடியும் என்று ஹிக்ஸ் கூறினார்.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
