ஏப்ரல் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வின் குஹ் (Economist Edwin Kuh Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஏப்ரல் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வின் குஹ் – முனைவர் பு. அன்பழகன்

எட்வின் குஹ் (Edwin Kuh) ஏப்ரல் 13, 1925இல் பிறந்து ஜூன் 9, 1986இல் மறைந்த  அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் பொருளாதார அளவியல் (Econometrics) துறையில் உலக அளவில் புகழ் பெற்ற வல்லுநராகவும், முன்னோடியாகவும் கருதப்படுகின்றார்.  பொருளாதார அளவியல் கோட்பாட்டில்  எட்வின் குஹ்ன் பங்களிப்பானது நம்பகத்தன்மை கொண்டதாகவும், உடன் தொடர்பு போக்கினைக் கண்டறிதலைப் பற்றி விளக்கியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 

உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, வணிக சுழற்சி, வேலையின்மை மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை முன் கணிப்புப் பொருளாதார அளவியல் மாதிரிகளுடன் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவர் பரவலாக அறியப்பட்டார். சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் அவரது ஆழ்ந்த ஆர்வம் உடையவராக இருந்தார், குறிப்பாக கறுப்பினத்தவர்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான காரணத்தை அவர் தீவிரமாக ஊக்குவித்தார். 

வணிகச் சுழற்சியின் மீட்சி கட்டத்தில் உற்பத்தித்திறன் கூர்மையாக மேம்படுகிறது, பொருளாதாரம் உச்சத்தை அடைவதற்கு முன்பும் மற்றும் பொருளாதாரம் மந்தநிலையில் சரிவதற்கு முன்பும் சரிகிறது என்று அவர் குறிப்பிட்டார். எட்வின் குஹ் 1951இல் அமெரிக்க ஜனாதிபதியின் பொருட்கள் கொள்கை ஆணையத்தின் உறுப்பினராகவும், அமெரிக்கத் தபால் சேவையின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.

ஆதாரம் – www.link.springer.com; www.nytimes.com; www.latimes.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *